குறுந்தொகை 28
குறுந்தொகை
பாடல் 28
பாடியவர் ஔவையார்
மூட்டு வேன்கொல்?தாக்கு வேன்கொல்?
ஓரேன்,யானும் ஓர்பெற்றி மேலிட்டு
'ஆஅ!ஒல்'எனக் கூவு வேன்கொல்?
அலமரல் அசைவளி அலைப்ப,
உயவுநோய் அறியாது,துஞ்சும் ஊர்க்கே.
--------------------------------------------------------------------------------------
பொருளீட்டச் சென்றார்! வரவில்லை இன்னும்!
பிரிவுத் துயரமோ
ஏக்கத்தைத் தூண்ட
வருடுகின்ற தென்றல் வதைக்கிறதே என்னை!
புரியாமல் ஊரார் உறங்குகின்றார் நன்றாய்!
புரியாத மக்களுக்கு எப்படித்தான் நானும்
புரியவைக்க? முட்டுவேனோ?
தாக்குவேனோ? தோழி!
புரியாமல் கூவுவேனோ? என்செய்வேன் நான்தான்!
புரியாமல் நோகின்றேன் நான்.

0 Comments:
Post a Comment
<< Home