Saturday, March 28, 2026

குறுந்தொகை 26

குறுந்தொகை

 பாடல் 26

பாடியவர் கொல்லன் அழிசி

--------------------------------------------------------------------------------

அரும்புஅற மலர்ந்த கருங்கால் வேங்கை

மேக்குஎழு  பெருஞ்சினை இருந்த தோகை

பூக்கொய் மகளிரின் தோன்றும் நாடன்

தகாஅன் போலத் தான்தீது மொழியினும்

தன்கண் கண்டது பொய்க்குவது அன்றே

தேக்கொக்கு அருந்தும் முள்எயிற்றுத் துவர்வாய்

வரைஆடு வன்பறழ்த் தந்தைக்

கடுவனும் அறியும்அக் கொடியோ னையே.

--------------------------------------------------------------------------------------------------------------

வேங்கைமரக் கொம்பிலே தங்கும் மயிலினங்கள்

மேலேறிப் பூப்பறிக்கும் மங்கையர்போல் தோன்றுகின்ற

கோலமேந்தும் நல்ல குறிஞ்சிநாடன் நம்தலைவன்!

பாமகளாம் என்னை மறந்தே துறந்தானோ?

பூமகள் நானோ இருந்தென்ன? போயென்ன?

வான்முட்டும் மாமலையில் துள்ளிக் குதித்தாடும்

வானரக் குட்டியின் தந்தையாம் ஆண்குரங்கு

மான்விழியாள் இந்தக் கொடியோன் உறவினைப்

பார்த்திருந்த ஆண்குரங்கு பொய்சொல்ல முன்வராது!

கேட்டிருக்கும் சூளுரையைத் தான்

0 Comments:

Post a Comment

<< Home