Saturday, March 28, 2026

குறுந்தொகை 27

 குறுந்தொகை

பாடல் 27

பாடியவர் வெள்ளி வீதியார்

கன்றும் உண்ணாது; கலத்தினும் படாது,

நல்ஆன் தீம்பால் நிலத்துஉக்கா அங்கு,

எனக்கும் ஆகாது,என்னைக்கும் உதவாது,

பசலை உணீஇயர் வேண்டும்

திதலை அல்குல் என் மாமைக் கவினே.

--------------------------------------------------------------------------------------

நன்பசுவின் பாலையோ கன்று பருகாமல்

அங்கே கறந்து கலத்தில் நிரப்பாமல்

வெண்பால் தரையிலே வீணாக வீழ்ந்தாற்போல்

என்னவரின் இந்தப் பிரிவால் துடிக்கின்ற

என்னுடைய மாந்தளிர் பேரழகால்  இங்கெனக்கோ

என்னபயன்? ஒன்றுமில்லை!

அன்பருக்கும் இன்பமில்லை! 

துன்பப் பசலை படர்ந்தேதான் பற்றுகின்ற

தன்மைக்கே ஆளான தே.

0 Comments:

Post a Comment

<< Home