குறுந்தொகை 31
குறுந்தொகை
பாடல் 31
பாடியவர்: ஆதிமந்தியார்
மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டுங் காணேன் மாண்தக் கோனை
யானுமோர் ஆடுகள மகளே என்கைக்
கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த
பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகனே.
-------------------------------------------------------------------------------------------------------
தோழி! எனக்கு மணம்புரியப் பார்க்கின்றார்!
ஆவிக்குள் என்தலைவன் உள்ளானே! எங்குசென்றான்?
தேடியலைந்தேன்! வீ்ரர்கள் மத்தியில் காணவில்லை!
ஆடிக் களிக்கும் இருமனப் பெண்டிரிடம்
தேடியும் காணவில்லை! ஆடுகளம் தேடியதால்
ஆடுகள மங்கையாக ஆகிவிட்டேன்! என்வளையல்
ஓடுதடி கீழிறங்கி! இந்த நிலைமைக்கு
வாடுகின்ற கோலத்தைத் தந்ததாலே என்தலைவன்
ஆடுகள மைந்தனானான் பார்

0 Comments:
Post a Comment
<< Home