குறுந்தொகை 30
குறுந்தொகை
பாடல் 30
பாடியவர்: கச்சிப்பேட்டுநன்னாகையார்
கேட்டிசின் வாழி தோழி அல்கற்
பொய்வ லாளன் மெய்யுறல் மரீஇய
வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட ஏற்றெழுந்து
அமளி தைவந் தனனே குவளை
வண்டுபடு மலரிற் சாஅய்த்
தமியேன் மன்ற அளியேன் யானே.
-------------------------------------------------------------------------------------------------
தோழி!
இந்த நாளில்
இரவுப் பொழுதில்
வருவேன் என்று
சொன்னவர் வரவில்லை!
பொய்சொல் வதில் வல்லவர் அல்லவா?
உடம்போடு உடம்பணைக்கும்
நிலைபோன்ற கனவிலே
வந்தார் ! களி மயக்கத்தைத் தந்தார்!
மயக்கம் விடுபட விழித்தேன்!
மஞ்சத்தைத் தடவிப்பார்த்தேன்!
என்னவரைக் காணாமல்
தவித்தேன்! தத்தளித்தேன்!
தனிமை வாட்டியது!
நலிந்தேன்! மெலிந்தேன்!
சொற்களில்தான் தேன்!
எனது இதயத்தில்
ஊறுகிறதே ஆயிரம் தேள்!

0 Comments:
Post a Comment
<< Home