Saturday, March 28, 2026

குறுந்தொகை 29

 குறுந்தொகை

பாடல் 29  

பாடியவர் ஔவையார்


நல்லுரை இகந்து,புல்லுரை தாஅய்ப்,

பெயல்நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல

உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி,

அரிதுஅவா வுற்றனை -நெஞ்சே!- நன்றும்

பெரிதால் அம்மநின் பூசல், உயர்கோட்டு

மகவுடை மந்தி போல

அகன்உறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே.

--------------------------------------------------------------------------------------------

நெஞ்சே!

நாமெல்லாம் நல்லது சொன்னா

கேட்பதில்லை!

நமக்கேற்றாற் போல் சொன்னால் மகிழ்ச்சி!

ஆனால் 

சுடாத மண்கலம்  மழைநீரைத் தாங்காது!

நீயும் அப்படித்தான்

பேராசை வெள்ளத்தில் நீந்தினாய்! தத்தளிக்கின்றாய்! தன்குட்டியை

வயிற்றோடு பற்றிக்கொள்ளும்

பெண்குரங்கைப் போல 

அவர் நினைவைத் தழுவிக்கொள்ளும்

தலைவியை நீ

பெற்றிருந்தால் பெருமை உனக்கு!

0 Comments:

Post a Comment

<< Home