குறுந்தொகை 33
குறுந்தொகை
பாடல் 33
பாடியவர்:
படுமரத்து மோசிகீரனார்
அன்னாய் இவனோர் இளமா ணாக்கன்
தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோ
இரந்தூ ணிரம்பா மேனியொடு
விருந்தின் ஊரும் பெருஞ்செம் மலனே.
-------------------------------------------------------------------------------------
தோழி! தலைவன் பரத்தையின் வீடிருந்து
தேடிவந்தான் என்னிடம்! தூதாகப் பாணனையும்
கூடவரச் செய்தான்! உள்ளே வரச்சொல்லேன்!
கூடு மெலிந்த இளைஞனாக உள்ளானே!
பாடுபட்ட அவ்வூரில் பிச்சை எடுத்தது
போதவில்லை என்றே விருந்துண்ண வந்தானோ?
யாரெனினும் நல்லவன்தான் வாழ்ந்தே புகழ்பெறுவான்!
போனது போகட்டும்! அன்புத் தலைவனை
நானேற்பேன் இன்றே பொறுத்து.

0 Comments:
Post a Comment
<< Home