குறுந்தொகை 32
குறுந்தொகை
பாடல் 32
தலைவனின் ஏக்கம்
பாடியவர் அள்ளூர்நன்முல்லையார்
காலையும் பகலும் கையறு மாலையும்
ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப்
பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்
மாவென மடலோடு மறுகில் தோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே
வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே.
-------------------------------------------------------------------------------------------
தோழி! தலைவியைக் கூடுதல் என்பதோ
ஆழிவற்றும் காத்திருப்பே! காலையும் நண்பகலும்
மாலையும் ஊர்மக்கள் தூங்குகின்ற யாமமும்
காட்சி விடியலென ஐம்பொழுதில் ஏங்கவைக்கும்
காமம் தணிப்பதற்கு வாய்ப்பில்லை! சாலையில்
பாங்காய் மடலூர்ந்தால் மாப்பழிதான்! அன்பகங்கள்
ஏங்கிப் பிரிந்தேதான் வாழ்தலும் மாப்பழிதான்!
நாட்டமுடன் தீர்வைத்தான் சொல்

0 Comments:
Post a Comment
<< Home