குறுந்தொகை 46
குறுந்தொகை
பாடல் 46
குருவியும் தலைவியும்
பாடியவர் :மாமலாடனார்
ஆம்பற் பூவின் சாம்ப லன்ன
கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ
முன்றில் உணங்கல் மாந்தி மன்றத்து
எருவினுண் தாது குடைவன ஆடி
இல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும்
புன்கண் மாலையும் புலம்பும்
இன்றுகொல் தோழியவர் சென்ற நாட்டே
---------------------------------------------------------------------------------------------------------
என்வீட்டுக் கூரையில் தன்சிறகை மூடித்தான்
அங்குமிங்கும் பார்க்கும் குருவியோ சாம்பலொத்த
வண்ணத்தில் ஆம்பல்பூபோல்
உட்கார்ந்து பார்த்திருக்கும்!
முன்றிலில் காயும் உணவுப் பொருள்களை
உண்டு முடித்தேதான் ஊர்மன்றந் தன்னிலே
அங்கே மரத்தடியில் பூக்களைக் கவ்வித்தான்
தன்கூட்டில் குஞ்சுகளின் வாயிலே ஊட்டிவிட்டே
தங்கியுள்ள மாலைப் பொழுதிலே
கண்பார்வை
மங்குகின்ற கோலந்தான்! இந்த நிகழ்வுகள்
கொண்டுள்ள மாலைப் பொழுதெல்லாம்
அன்பருள்ள
அங்கெல்லாம் இல்லையோ? சொல்.

0 Comments:
Post a Comment
<< Home