குறுந்தொகை 47
குறுந்தொகை
பாடல் 47
நிலவே சொல்?
பாடியவர்
நெடுவெண்ணிலவினார்
கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்
இரும்புலிக் குருளையின் தோன்றுங்
எல்லி வருநர் களவிற்கு
நல்லை யல்லை நெடுவெண் ணிலவே
---------------------------------------------------------------------------------------------
வெண்ணிலவே! கருவண்ணக் கால்போன்ற தாள்கொண்ட
கண்கவரும் வேங்கை மரத்தின் மலர்களோ
அங்கே கரும்பாறை மீது விழுவதால்
அஞ்சவைக்கும் காட்டுப் புலிக்குட்டி போல்தோன்றும்!
அன்பரோ இத்தகைய காட்சிகள் கொண்டிருக்கும்
துன்பமிகு காட்டுவழி தானே களவொழுக்கம்
எண்ணி வருகின்றார்! வெண்ணிலவே! அன்னார்க்கு
நன்மையா செய்கிறாய்? சொல்.

0 Comments:
Post a Comment
<< Home