Sunday, March 29, 2026

குறுந்தொகை 58

 

குறுந்தொகை 58

பாடல் 58

பாடலாசிரியர்: வெள்ளி வீதியார்

ஆவனசெய்!

இடிக்குங் கேளிர் நுங்குறை ஆக

நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல

ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்

கையில் ஊமன் கண்ணிற் காக்கும்

வெண்ணெய் உணங்கல் போலப்

பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே.

------------------------------------------------------------

என்நிலையைக் கண்டித்துப் பேசுகின்ற பாங்கனே!

என்னுடல் பேரழிவைக் காணாமல் காப்பாற்ற

முன்வந்தால் நல்லது! மற்றவை நல்லதல்ல!

செங்கதிரோன் பாறையைச் சுட்டெரிக்க கையின்றி

அங்கொரு ஊமையன் வெண்ணெயைக் காத்திருக்க

வெண்ணெய் உருகி உருண்டோடும் காட்சிபோல்

என்னைப் பிரிவுத் துயரம் வதைக்கிறது!

கண்களால் வேடிக்கை பார்ப்பதே கூடுமென்னால்!

இன்னுயிரைப் போக்குவ தொன்றே வழியாகும்!

நன்மையைச் செய்ய முனை.


0 Comments:

Post a Comment

<< Home