குறுந்தொகை 57
குறுந்தொகை
பாடல் 57
பாடலாசிரியர்:
சிறைக்குடி ஆந்தையார்
பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்ன
நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவரி தாகிய தண்டாக் காமமொடு
உடனுயிர் போகுக தில்ல கடனறிந்
திருவேம் ஆகிய வுலகத்
தொருவே மாகிய புன்மை நாம் உயற்கே.
-------------------------------------------------------------------------------
தோழியே! காவல் மிகுதியால் அன்பரும்
சேயிழை நானும் பிரிந்துள்ளோம்! ஓருயிராய்
ஆவி துடிக்க இருக்கின்றேன்! வாடுகின்றேன்!
நீரிலே வாழும் மகன்றிற் புள்ளினமோ
சேர்ந்திருக்கும் எப்பொழுதும்! பூவொன்று தோன்றித்தான்
சார்ந்திருக்கும் கோலத்தை அங்கே பிரித்துவிட்டால்
பூஅளவு சற்றுநேரம் கூட பிரிவதையும்
தாங்காதாம்! நானும் தலைவனும் சேரவேண்டும்!
சேர்ந்திருக்கும் நேரத்தில் என்னுயிர் நீங்கட்டும்!
சேல்விழியாள் ஏக்கத்தைப் பார்.

0 Comments:
Post a Comment
<< Home