Sunday, March 29, 2026

குறுந்தொகை 87

 குறுந்தொகை

பாடல் 87 

வேண்டுதல்

பாடலாசிரியர்:கபிலர்


மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்

கொடியோர்த் தெறூஉம் என்ப யாவதும்

கொடியர் அல்லரெங் குன்றுகெழு நாடர்

பசைஇப் பசந்தன்று நுதலே

ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் தோளே.

--------------------------------------------------------------------------------------------

அன்றோ மராமரத்தின்  கீழ்நின்றே உன்னைநான்

என்றும் பிரியமாட்டேன் என்றான்! பிரிந்துவிட்டான்!

அந்த மராமரத் தெய்வம்  கொடியவரைத்

தண்டிக்கும் என்கின்றார்! அன்பன் கொடியவனா?

என்னுள்ளம் இல்லை எனச்சொல்லும்! பிரிவாலே

என்நெற்றி இங்கே பசலையை ஏந்தவில்லை!

என்தோள் இளைக்கவில்லை!

தானே பசந்தது! 

தன்னால் இளைத்தது! தண்டிக்க

வேண்டாம்நீ!

பெண்மையின் பக்குவம் பார்.

0 Comments:

Post a Comment

<< Home