குறுந்தொகை 60
குறுந்தொகை 60
பாடல் 60
பாடலாசிரியர்:பரணர்
குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப்
பெருந்தேன் கண்ட இருங்கால் முடவன்
உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து
சுட்டுபு நக்கி யாங்குக் காதலர்
நல்கார் நயவா ராயினும்
பல்காற் காண்டலும் உள்ளத்துக் கினிதே.
தோழியே! நானும் தலைவனும் சேர்ந்திருந்த
வேளையில் நாளும் மகிழ்ந்திருந்தோம்! இன்றிங்கே
காலம் பிரித்தது! என்நினைவோ எண்ணுவதை
தோழியே சொல்கிறேன் கேள்!
------------------------------------------------------------
பாறையில் தேன்கூடு கட்டிப் படர்ந்திருக்க
கூதளி என்னும் மரமசைந்த காரணத்தால்
தேன்கூட்டில் ஓட்டை விழுந்தேதான் தேன்வடிய
காலிரண்டும் இல்லாத ஆண்மகன் உட்கார்ந்தே
வாயிலே எப்போதோ சொட்டுகின்ற தேனைத்தான்
தோய்த்துச் சுவைப்பான்! அந்த நிலைபோல
சேயிழைநான் துய்த்திருந்த இன்பத்தை எண்ணுகின்றேன்!
காரிகையே !என்றாள் சிரித்து.

0 Comments:
Post a Comment
<< Home