Sunday, March 29, 2026

குறுந்தொகை 59

 குறுந்தொகை 59

தோழியின் ஆறுதல்!

பாடல் 59


பாடலாசிரியர்: மோசி கீரனார்


பதலைப் பாணிப் பரிசிலர் கோமான்

அரலைக் குன்றத்து அகல்வாய்க் குண்டுசுனைக்

குவளையொடு பொதிந்த குளவி நாறும்நின்

நறுநுதல் மறப்பரோ--மற்றே முயலவும்,

சுரம்பல விலங்கிய அரும்பொருள்

நிரம்பா ஆகலின் நீடலோ இன்றே!

---------------------------------------+----------------------

அரலையூர்க் குன்றத்தில் உள்ள மலர்கள்

பரப்பும் நறுமணம் வீசுமுந்தன் நெற்றி!

உளமாற அந்த மணத்தை நுகர்ந்தே

உவகையில் நீந்திய உந்தன் தலைவர்

உலவுகின்ற காட்டிலே பூக்களைக் காண்பார்!

உளமார உன்னை மறப்பாரோ? மாட்டார்!

சுரவழி கொண்ட கொடுமையைத் தாண்டி

வரவேண்டும் இங்கே தலைவி! வருவார்!

விளம்பிய வண்ணம் குறித்தநாளில் வந்தே

கரம்பிடிப்பார் உன்னைத்தான் காண்.


0 Comments:

Post a Comment

<< Home