குறுந்தொகை 86
குறுந்தொகை 86
விழிப்பாரோ?
பாடல் 86
பாடலாசிரியர்:
வெண்கொற்றனார்
சிறைபனி உடைந்த சேயரி மழைக்கண்
பொறையரு நோயொடு புலம்பலைக் கலங்கிப்
பிறருங் கேட்குநர் உளர்கொல் உறைசிறந்து
ஊதை தூற்றம் கூதிர் யாமத்து
ஆனுளம் புலம்புதொ றுளம்பும்
நாநவில் கொடுமணி நல்கூர் குரலே.
-------------------------------------------------------------
தோழி! தலைவன் வருவானா? ஏக்கமுடன்
வாடைக் குளிரிலே தூக்கமின்றி வாடுகின்றேன்!
மாடு தலையாட்டும் வண்ணம் நுளம்பென்னும்
மாட்டுஈ மாட்டின் தலையைக் கடித்தது!
மாடும் தலையாட்ட மாட்டின் கழுத்துமணி
ஆடி ஒலியெழுப்ப தோழி! அதைக்கேட்டே
பாதி உறக்கத்தில் தூக்கம் கலைவாரோ?
நாடிவரும் என்தலைவன் பார்த்துத் தயங்குவானோ?
வாடுகின்ற என்கலக்கம் பார்.

0 Comments:
Post a Comment
<< Home