Sunday, March 29, 2026

குறுந்தொகை 89

 குறுந்தொகை

ஊர்வாயை மூடவோ?

பாடல் 89


பாடலாசிரியர்:பரணர்


பாவடி உரல பகுவாய் வள்ளை

ஏதின் மாக்கள் நுவறலும் நுவல்ப

அழிவ தெவன்கொலிப் பேதை யூர்க்கே

பெரும்பூண் பொறையன் பேஎமுதிர் கொல்லிக்

கருங்கண் தெய்வம் குடவரை யெழுதிய

நல்லியற் பாவை அன்னஇம்

மெல்லியற் குறுமகள் பாடினள் குறினே.

---------------------------------------------------------------------------------------------------

தோழியின் கூற்று

ஊர்மக்கள் வள்ளை இசைத்தேதான் பாறையில் 

பாதத்தை அங்கே உரலாக்கிக்

குற்றுகின்றார்!

காரியோ ஓரியைக் கொன்றே

பொறையனுக்கு

வாரி வழங்கினான் 

கொல்லிமலைக் குன்றைத்தான்!

கூவித்  தலைவியைக் கொல்லிமலைப் பாவையின்

பேரழகை ஏந்துவதாய்ச் சொல்லித்தான்  குற்றுகின்றார்!

ஆரணங்கை அங்கே தலைவனுடன் சேர்த்தேதான்

தாளமுடன் பாடியே குற்றுகின்றார்! அப்படித்தான்

ஊராரோ பாடுவார்! நீயேன் வதங்குகிறாய்?

நேரிழையைத் தோழிதான் கேட்டாள் பொருளுடன்!

 ஊர்வாயை மூடுவது யார்?

0 Comments:

Post a Comment

<< Home