Sunday, March 29, 2026

குறுந்தொகை 90

 குறுந்தொகை

பாடல் 90 

பாடலாசிரியர்

மதுரை எழுத்தாளன் சேந்தன்பூதனார்


மாற்றமில்லை!


எற்றோ வாழி தோழி முற்றுபு

கறிவளர் அடுக்கத் திரவின் முழங்கிய

மங்குல் மாமழை வீழ்ந்தெனப் பொங்குமயிர்க்

கலைதொட இழுக்கிய பூநாறு பலவுக்கனி

வரையிழி அருவி உண்துறைத் தரூஉம்

குன்ற நாடன் கேண்மை

மென்தோள் சாய்த்துஞ் சால்பீன் றன்றே

--------------------------------------------------------------------------------------------

அன்பன் குன்றநாடன்! குன்றில் அடுக்கடுக்காய்

நன்கு மிளகுக் கொடிபடர்ந்த சூழ்நிலை!

அங்கே இரவில் மழைபெய்த காரணத்தால்

அங்கிருந்த ஆண்குரங்கு தொங்கும் பலாப்பழத்தை

தன்கையால் தொட்டதும் வீழ்ந்தே அருவியில்

சென்றே துறையருகில் வந்தது! அந்நீரோ

அம்மா! இனித்தது! அத்தகைய நாடனோ

இங்கே வரவில்லை! காதலியின் தோள்மெலிந்தே

மென்மை பழுத்தவள்! தோள்மெலிந்தும் வாழ்கின்ற

தன்னியல்பில் மாற்றமில்லை பார்.


0 Comments:

Post a Comment

<< Home