குறுந்தொகை 92
குறுந்தொகை
தலைவியின் வேதனை
பாடல் 92
பாடலாசிரியர்:தாமோதரனார்
ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து
அளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை
இறையுறை வோங்கிய நெறியயல் மராஅத்த
பிள்ளை யுள்வாய்ச் செரீஇய
இரைகொண் டமையின் விரையுமாற் செலவே.
-------------------------------------------------------------
மயக்கம் தருகின்ற மாலைப் பொழுது!
இரையை அலகிலே தாய்ப்பறவை கவ்வி
விரைந்துவந்தே சேய்ப்பறவை வாயிலே ஊட்டி
விரைந்தது! மீண்டும் இரைதேடி வானில்!
பிரிந்துசென்ற அன்பர் பறவைபோல் வந்து
தரிசனம் தந்துவிட்டுப் போனால் மகிழ்வேன்!
வரவில்லை! ஏக்கத்துடன் நான்.

0 Comments:
Post a Comment
<< Home