குறுந்தொகை 97
குறுந்தொகை
பாடல் 97
பாடலாசிரியர்:வெண்பூதியார்
யானே ஈண்டை யேனே யென்னலனே
ஆனா நோயொடு கான லஃதே
துறைவன் தம்மூ ரானே
மறையல ராகி மன்றத் தஃதே.
-----------------------------------------------------------
தோழியே! என்னைத் தனிமைநோய்த் துன்புறுத்த
ஆழியில் துள்ளும் துரும்பாக ஆகிவிட்டேன்!
ஆவி அவனையே தேடுதடி கானலிடம்!
பாவியோ பெற்றோ ருடனே மகிழ்ந்துள்ளான்!
கூவித் துடிக்கவைக்கும் அந்தக் களவுறவு
ஊரலராய் மாறியதே! இன்னும் வரவில்லை!
சோர்ந்தே தவிக்கின்றேன் நான்.

0 Comments:
Post a Comment
<< Home