குறுந்தொகை 93
குறுந்தொகை
பாடல் 93
பாடலாசிரியர்:
அள்ளூர் நன்முல்லையார்
நன்னலந் தொலைய நலமிகச் சாஅய்
இன்னுயிர் கழியினும் உரைய லவர்நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி
புலவியஃ தெவனோ அன்பிலங் கடையே
----------------------------------------------------------------
இருமனப் பெண்டிரை நாடினான்! அன்பன்!
உருக்குலையும் பெண்மை,அழகைக் குறித்தோ
ஒருகவலை இன்றி நடக்கின்றான்! தோழி!
சுருக்கென்றே என்னுயிர் போனாலும் நீயோ
கருணையைக் காட்டு! தலைவனுக் கென்ற
ஒருசொல் தன்னை உரைக்காதே! என்னை
நெருங்காமல் வாழ்கின்ற காரணத்தால் அந்தோ!
பெருந்தன்மைத் தாய்தந்தை போலானான்! ஊடல்
பெருகாது தோழி! உணர்.

0 Comments:
Post a Comment
<< Home