Sunday, March 29, 2026

குறுந்தொகை 96

 குறுந்தொகை

பாடல் 96

பாடலாசிரியர்:

அள்ளூர் நன்முல்லையார்


அருவி வேங்கைப் பெருமலை நாடற்கு

யானெவன் செய்கோ என்றி யானது

நகையென உணரேன் ஆயின்

என்னா குவைகொல் நன்னுதல் நீயே.

-------------------------------------------------------------------------------------

அருவியும். வேங்கை மரமும் உடைய

ஒருநாடன் நம்தலைவன்! வேங்கை மரமோ

அருவியிடம் செல்லாது! அந்த அருவி

விரும்பி மரத்திடம் வந்துநிற் காது!

வரும்போது இன்புற்றும் வாராத போது

வருந்தியும் உள்ளேன்நான்! என்னசெய்வாய் என்றே

ஒருகேள்வி கேட்டாய்! நகைச்சுவை என்றே

கருதுகின்றேன்! இல்லையேல் என்னநீ ஆவாய்?

சுருக்கென்று சொன்னாள் கடிந்து

0 Comments:

Post a Comment

<< Home