Sunday, March 29, 2026

குறுந்தொகை 95

 குறுந்தொகை

பாங்கன் தூது

பாடல் 95

முடியுமா?

பாடலாசிரியர் :கபிலர்


மால்வரை இழிதருந் தூவெள் அருவி

கல்முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரல்

சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமகள்

நீரோ ரன்ன சாயல்

தீயோ ரன்னவென் உரனவித் தன்றே.

------------------------------------------------------------------------------------------

குறவன் மகளே எனது தலைவி!

சுடரொளி வீசும் அழகுடையாள்! மேனி,

உறவாடும் நீர்போல் குளுமையை ஏந்தும்!

புறத்தில் நெருப்பாகி என்வலிமை தன்னை

தடந்தெரியாமல் ஆக்கியதே! அந்தோ! அங்கே

மடமட வென்றேதான் வீழும் அருவி

நடக்கும் பலமலர் ஊராம்!  சற்றே

எடுத்துரைக்க ஏலுமா! நீ?


0 Comments:

Post a Comment

<< Home