குறுந்தொகை 94
குறுந்தொகை
பாடல்: 94
பாடலாசிரியர்:
கதக்கண்ணனார்
பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத்து
அரும்பே முன்னும் மிகச்சிவந் தனவே
மானே மருள்வேன் தோழி பானாள்
இன்னுந் தமியர் கேட்பிற் பெயர்த்தும்
என்னா குவர்கொல் பிரிந்திசி னோரே
அருவி மாமலை தத்தக்
கருவி மாமழைச் சிலை தருங் குரலே
---------------------------------------------------------------------------------------------------------
தோழியே! பிச்சி அரும்பு மலரோ சிவந்திருக்கும்
காட்சிகண்டே கார்காலம் வந்தும் தலைவனோ
காட்சி தரவில்லை என்றே மயங்குகிறேன்!
ஊற்றெடுக்கும் பேரருவி மேலே முழங்குகின்ற
வான்மேக ஓசையினை நள்ளிரவில் என்தலைவன்
கேட்டால் பிரிவுத் துயரில் படும்பாடோ
யாதென்றே ஏங்குகிறேன் நான்.

0 Comments:
Post a Comment
<< Home