Sunday, March 29, 2026

குறுந்தொகை 98

 குறுந்தொகை

பாடல் 98

பாடலாசிரியர்:

கோக்குள முற்றனார்


இன்ன ளாயினள் நன்னுதல் என்றவர்த்

துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே

நன்றுமன் வாழி தோழிநம் படப்பை

நீர்வார் பைம்புதற் கலித்த

மாரிப் பீரத் தலர்சில கொண்டே.

-------------------------------------------------------------------------------------------

கார்காலம் வந்து படர்கொம்பைப் பற்றித்தான்

பீர்க்கம்பூ வந்தாச்சு! என்தலைவன் காணோமே!

ஆர்வமுடன் தோழியே! பூவைப் பறித்தெடுத்தே

சேயிழை நானோ படர்கொம்பு நாயகனை

ஆவலுடன் தேடுகிறேன் என்றுசொல்லி இங்கொருவர்

பாவைக்( கு) உதவுவாரோ? சொல்.

0 Comments:

Post a Comment

<< Home