Sunday, March 29, 2026

குறுந்தொகை 102

 குறுந்தொகை

பாடல் 102

நெய்தல் தலைவி கூற்று

தனிமைத் துயரம்!

பாடலாசிரியர்:

ஔவையார்


உள்ளின் உள்ளம் வேமே உள்ளா

திருப்பினெம் அளவைத் தன்றே வருத்தி

வான்றோய் வற்றே காமம்

சான்றோர் அல்லர்யாம் மரீஇ யோரே.

----------------------------------------------------------------------------------------------

தோழி! பிரிந்திருக்கும் எந்தன் தலைவரை 

ஆவி துடிக்க நினைக்கத் தூண்டியதும்

வேவத் தொடங்கிவிடும் உள்ளம்! நினைக்காமல்

வாழலாம் என்றாலோ காமநோய் வானத்தைத்

தோய்ப்பது போல வளர்கிறதே! இத்தகைய

தீங்கை விதைப்பவர் நற்குணம் கொண்டவரா?

ஏங்கித் தவிக்கின்றேன் நான். 


வேவம்-- துன்பம்,தனிமை

0 Comments:

Post a Comment

<< Home