Sunday, March 29, 2026

குறுந்தொகை 103

 குறுந்தொகை

பாடல்  103

பாடலாசிரியர்

வாயிலான் தேவனார்


கடும்புனல் தொகுத்த நடுங்கஞர் அள்ளல்

கவரிதழ் அன்ன தூவிச் செவ்வாய்

இரைதேர் நாரைக் கெவ்வ மாகத்

தூஉந் துவலைத் துயர்கூர் 

வாரார் போல்வர்நங் காதலர்

வாழேன் போல்வல் தோழி யானே.

--------------------------------------------------------------------------------------------------------

தோழி! முருக்கம்பூ  செவ்வண்ண வாய்நாரை

ஆவி துடிக்க நடுங்கியே சேற்றுக்குள்

தூவித் துளாவி இரைதேடும்! வாடையோ

தூவுகின்ற நீர்த்திவலை பட்டுத் தெறித்திருக்கும்!

ஈவிரக்கம் இல்லா தலைவர் வரமாட்டார்!

சேயிழையின் இன்னுயிர் தங்குமோஎன் மேனியில்? 

நேரிழையை  ஏங்கவைத்தார் பார்.

0 Comments:

Post a Comment

<< Home