Sunday, March 29, 2026

குறுந்தொகை 104

 குறுந்தொகை

பாடல் 104

பாடலாசிரியர்:

காவன் முல்லைப்பூதனார்


அம்ம வாழி தோழி காதலர்

நூலறு முத்தின் தண்சிதர் உறைப்பத்

தாளித் தண்பவர் நாளா மேயும்

பனிபடு நாளே பிரிந்தனர்

பிரியும் நாளும் பலவா குபவே.

--------------------------------------------------------------------------------------

தோழி! உருண்டோடும் முத்து மணிகள்போல்

தூவும் பனித்துளிகள் வீழ்வதுபோல் காட்சிதரும்

பூவின காலைப் பொழுதிலே பூங்கொடியை

ஆவினங்கள் மேயுதடி! அக்காலம் என்தலைவன்

ஈவிரக்கம்  இன்றிப் பிரிந்தேதான் சென்றுவிட்டார்!

சேயிழை தாங்குவேனோ? செப்பு

0 Comments:

Post a Comment

<< Home