Sunday, March 29, 2026

குறுந்தொகை 105

 குறுந்தொகை

பாடல் 105

பாடலாசிரியர்: நக்கீரர்


புனவன் துடவைப் பொன்போற் சிறுதினைக்

கடியுண் கடவுட் கிட்ட செழுங்குரல்

அறியா துண்ட மஞ்ஞை ஆடுமகள்

வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும்

சூர்மலை நாடன் கேண்மை

நீர்மலி கண்ணொடு நினைப்பா கின்றே

-----------------------------------------------------------------------------------------------------

தோட்டத்தில் பொன்போல் விளைந்த திணையினிலே

தோன்றும் கதிரைக் குறவன் கடவுளுக்குப்

பாங்காய்ப் படைப்பான்! மயிலோ அதையுண்ண

சாமியாடும் மாந்தரைப் போல மயிலாடித்

தானங்கே நின்று நடுங்குகின்ற கோலத்தை

ஏந்துகின்ற நாட்டின் தலைவனவன்! கண்ணீரை

ஏந்தவைத்தே ஏங்கவைக்கும் துன்பநிலை தந்துவிட்டான்!

ஏனென்று தோழியே! சொல்.


0 Comments:

Post a Comment

<< Home