Sunday, March 29, 2026

குறுந்தொகை 106

 குறுந்தொகை

பாடல் 106

பாடலாசிரியர்: கபிலர்


புல்வீழ் இற்றிக் கல்லிவர் வெள்வேர்

வரையிழி அருவியின் தோன்றும் நாடன்

தீதில் நெஞ்சத்துக் கிளவி நம்வயின்

வந்தன்று வாழி தோழி நாமும்

நெய்பெய் தீயின் எதிர்கொண்டு

தான்மணந் தனையமென விடுகந் தூதே.

----------------------------------------------------------------------------------------------------

தலைவனோ இத்தி மரவிழுது போல

நிலைகொண்ட பேரருவி போல்தோன்றும் நாடன்!

மலர்போன்ற தீதில்லா உள்ளம் உடையோன்!

உளமார தூதை அனுப்பியுள்ளான் தோழி!

விரைந்தே மறுமொழி சொல்வோம்! அதனால்

எரியும் நெருப்பிலே நெய்யூற்று தல்போல்

மளமள வென்றே வளரட்டும் காதல்!

நலமுடன் வாழலாம் நாம்.

0 Comments:

Post a Comment

<< Home