Sunday, March 29, 2026

குறுந்தொகை 107

 குறுந்தொகை

பாடல் 107

பாடலாசிரியர்:

மதுரைக் கண்ணனார்


குவியிணர்த் தோன்றி ஒண்பூ வன்ன

தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல்

நள்ளிருள் யாமத் தில்லெலி பார்க்கும்

பிள்ளை வெருகிற் கல்கிரை யாகிக்

கடுநவைப் படீஇயரோ நீயே நெடுநீர்

யாணர்ஊரன் தன்னொடு வதிந்த

ஏம இன்துயில் எடுப்பி யோயே.

------------------------------------------------------------------------------------------------------

நள்ளிரவில் நானோ கணவனுடன் தூங்கினேன்!

மெய்மறந்த தூக்கத்தைச் சேவலே! நீயிங்கே

துல்லியமாய்க் கூவி எழுப்பிவிட்டாய்! இங்குமங்கும்

துள்ளி எலியை இரையாக்கத் தேடுகின்ற

இல்லத்துப் பூனைக்கே நீயோ இரையாவாய்!

உள்ளத்தால் சாபமிட்டேன் போ.

தலைமகள் தோழிக்குக் கூறியது


0 Comments:

Post a Comment

<< Home