Friday, December 20, 2024

அகநக நட்பது என்று


 

Wednesday, December 18, 2024

வருணுடைய பூனை


 நாற்காலியில் வருணுடைய பூனை!


வருணுடைய பூனை அழகாய் அமர்ந்தே

வளைவாக நாற்காலி தன்னிலே பார்க்க

கலையார்வம் கொண்டே படம்பிடித்தேன் நானும்!

மலைப்புடன் பார்ப்பதைப் பார்.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


அர்த்தமுடன் மற்றும் அனுபவிக்க இல்லாத
இவ்வுலக வாழ்க்கையில் என்ன பயனிருக்கு?
இங்கே மகிழ்ச்சியாக மற்றும்நல் அர்த்தமுடன்
இவ்வுலகில் வாழ்வதற்கு ஆயிரம் ஆயிரம்
நல்வழிகள் உண்டென் றுணர்.

மதுரை பாபாராஜ்

Tuesday, December 17, 2024

பயிலரங்கம் வாழ்த்து



 பயிலரங்கம் வாழ்த்து!


திருக்குறளும் கல்விநெறிச் சிந்தனையும் என்ற
இரண்டுநாள் கற்கும் பயிலரங்கம்! நல்ல
உரையாளர் பேசுகின்றார் செந்தமிழில்! வாழ்க!
வளர்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

கவலைகள் தொடர்ந்தால்


 

Monday, December 16, 2024

மதுரையில்


மதுரையில் எங்கள் குடும்பம்!


முத்துசுப்பு தேவகி இணையருக்கு

பிள்ளைகளாய்

அக்காலம்  ஐந்தில் சிறுமியாய்க் கல்யாணி 

இத்தரணி விட்டே மறைந்தாளாம்!

நான்காக

பிள்ளைகள் வாழ்ந்தோம் வளர்ந்து.


மதுரைமில் பென்னர் நிறுவனத்தில் வேலை!

நடுத்தரமான வாழ்க்கை! எளிமையாய் வாழ்ந்தோம்!

படித்தோம் வளர்ந்தோம் படிப்படி யாக!

விரிந்தது ஆல்போல் படர்ந்து.


இலக்குமி பாபாராஜ் ராஜபாக்யம்

மற்றும்

கடைக்குட்டி யாக கஜராஜாய் நால்வர்

நடைபோட்டுப்  பக்குவ மாக வளர்ந்தோம்!

கடமைகள் செய்துவிட்டார் பெற்றோர் உவந்து.

பருவத்தில் இல்லறமே சான்று.



அந்தந்தக் காலம் விளையாட்டு என்றேதான்

சென்றன! கூடித்தான் பேசிக் கலந்தாலும்

ஒன்றாக வாழ்ந்தோம்! தனியறைகள் இல்லையன்று!

அங்கங்கே உட்கார்ந்து பேசிப் படித்திருந்தோம்!

ஒன்றாய் மகிழ்ந்திருந்த வாழ்வு.


தந்தையும் தாயும் உலகைவிட்டுச் சென்றனர்!

எங்கள் சிறகுகள் எங்களது வாழ்க்கையென்று

இன்று பயணங்கள் வெவ்வேறு திக்குகளில்!

பண்பட்டும் புண்பட்டும் வாழ்கிறோம் இன்றிங்கே!

அன்றாடம் எண்ணுவதே வாழ்வு.


மதுரை பாபாராஜ்


நானறிந்தது சகாயமாதா தெரு. இரு வீடு ஒரு வீடாய் அமைந்து, தேடி வருவோருக்கெல்லாம் அன்னமிட்டு மகிழ்ந்த வீடு. ஞாயிறு வந்தாலே கொண்டாட்டம் தான். நட்பு வட்டாரம் பெரிதாகக் கொண்ட அம்மான்களைப் பார்த்து தான் இன்று வரை எம்மைச் சுற்றிலும் நண்பர் கூட்டம். தேடி வரும் பிரச்சனைகளை அமைதியாக எதிர்கொண்டு வெற்றி பெறும் மனப்பாங்கு - பெரிய மாமா. தேனீ போல் சுறுசுறுப்பாய் இன்று வரை உலகம் சுற்றும் வாலிபனாய் வலம் வரும் - இளைய மாமா. வழிகாட்டிகளாய் .... உயர்கின்றோம் நாங்களும் அடியொற்றி ...

மகிழ்வு தரும் நினைவுகளே என்றென்றும். வருமோ அக்காலம் மீண்டும். சென்றிருந்தேன் அங்கேதான் (சகாய மாதா தெரு) சென்ற வாரம். நின்றிருந்தேன் சிறு நேரம் அங்கே தான். மாறவில்லை வாழ்ந்திருந்த வீட்டின் அடையாளம். அசை போட்டேன் அந்த இல்லத்தின் நினைவுகளை ...

அன்பான சுற்றம்தான் அவிழ்த்து விட்ட நெல்லி மூட்டையாய் சிதறி நிற்கிறது ஏற்றுக்கொண்ட பணிகளின் (பணத் தேவைகளின்) நிமித்தமாய். சந்திப்பதே அரிதாகிறது இக்காலத்தில். இணைப்பது இந்த செல்லிடப்பேசி தான். என்னே காலத்தின் கோலம்.


சரவணன் திண்டுக்கல்

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


மனதின் சமநிலை முக்கியம்! அந்த
மனநிலையே நாள்தோறும் ஒவ்வொன்றுக் கும்தான்
திறவுகோல்! மேலும் வளர்ச்சிக் குதவும்!
நமது மனதிலே தோன்றும் நினைவு
வழிநடத்தல் மற்றும் உணர்வதே இந்த
மனநிலையில் தோன்றும் உணர்.

மதுரை பாபாராஜ்

Sunday, December 15, 2024

கல்வி


 

நண்பர் பழனிவேல்



நண்பர் பழனிவேல் (C2)அனுப்பிய படத்திற்குக் கவிதை!


வாரத் தொடக்கம் சிறப்பாக இந்தவாரம்

வாழ்வதற்கு வாழ்த்துகின்ற உங்களது நட்பினை

வாழ்த்தி வணங்குகிறேன் இன்று.


மதுரை பாபாராஜ்

உட்பகையின் தூது


 இப்படி எப்படி எழுத முடிகிறது கவிதை.அப்படி என்ன செப்படி வித்தை தங்களிடமுள்ளது.எப்படிப் பார்த்தாலும் தங்கள் கவிதை எப்போதும் மிகவும் உருப்படி...தென்.கி.

வசந்தா பாபாராஜ்


 

Saturday, December 14, 2024

முள்மேல் சேலை!

 முள்மேல் விழுந்த சேலை!

முள்மேல் விழுந்துவிட்ட  பட்டிழைச் சேலையை

மெள்ள எடுக்கவேண்டும்! முள்குத்தக் கூடாது!

எள்ளளவும் சேலை கிழியவும் கூடாது!

இல்லறச் சிக்கலைத் தீர்ப்பதும் இப்படித்தான்!

எப்படியும் தீர்ந்துவிடும் நம்பு.

மதுரை பாபாராஜ்

நீதான் தீர்க்கவேண்டும்!

 நீதான்தீர்க்கவேண்டும்!

எத்தகைய சிக்கல்கள் வாழ்விலே வந்தாலும்

அத்தனைச் சிக்கலையும் சந்தித்தே வாழவேண்டும்!

எப்படிப் பட்ட முடிச்சு விழுந்தாலும்

எப்படியோ நீதான் அவிழ்க்கவேண்டும்! யாரிங்கே

உன்கூட நிற்பார்? உரை.


மதுரை பாபாராஜ்

R S சுசாந்த் ஸ்ரீராம் பிறந்தநாள்


 

நண்பர் முரளி


 நண்பர் முரளிஅனுப்பிய படத்திற்கு வாழ்த்து!


குடுவைக் குளம்பியைக் கோப்பைகள் தன்னில்

நறுமணம் ஊற்றெடுக்க கொஞ்சமாய் ஊற்றிப்

பருகும் வசதியைப் பாராய்! வணக்கம்

அருமைப் படமாகத் தூதுவிட்ட நட்பை

அருந்தமிழால் வாழ்த்துகிறேன் இன்று.


மதுரை பாபாராஜ்

திருக்குறள் தூயர் ஆசி


 

CR FAREWELL


 5 YEARS BACK

Friday, December 13, 2024

நண்பர் அன்வர் பாட்சா



 மடைதிறந்த வெள்ளம்போல் பேச்சு! படிப்பின்

நடைமுறை சொன்ன அறம்.

மதுரை பாபாராஜ்

சோதனையின் கொம்பொடித்துச் சாதித்த அன்வரை
சாதனை நாயகரை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

தங்களின் மேலான அன்பு நான் பெற்ற பெரும் பேறு... எல்லாப் புகழும் இறைவனுக்கே உரியது...!!🙏🙏❤️🤝 நன்றி வெண் "பா" பெருமானே...!!

அன்வர் பாட்சா

நண்பர் மொகலீஸ்வரன்



 நண்பர் மொகலீஸ்வரன் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


குடைக் குறள்!

மழைப்பருவம் வந்தால் குடைதான்   உதவும்!
மழைத்துளி வீழும் தெறித்து.

மதுரை பாபாராஜ்

சதுரங்க ஆட்ட சாம்பியன் குகேஷ் அவர்களுக்கு வாழ்த்து



 சதுரங்க ஆட்ட உலக சாம்பியன் குகேஷை வாழ்த்துகிறோம்!


சதுரங்க ஆட்டத்தில் சாதித்த வீரர்!

குகேஷின் உலக அளவிலே வெற்றி

மகத்தான வெற்றியை வாழ்த்துகிறோம் சூழ்ந்து!

தமிழ்நாட்டைச் சார்ந்தவர்! இந்திய நாடே

நமிர்ந்தேதான்  நிற்கவைத்தார் வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

சிலர் பலராவது என்று?