Wednesday, May 31, 2017

மன உளைச்சல்

தங்கக் கலசத்தில் கீறல் விழுந்துவிட்டால்
இங்கே சரிசெய்து பார்க்கலாம்-- மண்பாண்டம்
கீழே விழுந்து நொறுங்கிவிட்டால் பாண்டத்தை
யாரே சரிசெய்வார் சொல்?

Friday, May 26, 2017

உலகப்பெயர்ச்சி

வாழ்வின் கடற்கரையில் பாடிப் பறந்தவர்கள்
தாழ்வழுத்தக் காற்றுகளால் அந்தோ கடலுக்குள்
சூழும் சுழற்சிகளால் உள்வாங்கப் பட்டேதான்
பாழும் உலகக் கடற்கரையில் எங்கெங்கோ
வாழும் நிலைபெற்றார் காண்

Thursday, May 04, 2017

புகழலை

பணிக்களம் சென்று படிப்படி யாக
தனித்திறன் முத்திரை நாளும் பதித்துக்
கனிந்த நிலையில் பணிநிறைவு பெற்றே
தணியும் புகழின் அலை.