Monday, March 23, 2026
E S NIKHIL ABISHEIK GREETINGS
Greetings to E.S.NIKHIL ABISHEIK for his research paper won the first prize in AI project!
B.Tech (AI) SECOND YEAR
ஆய்வறிக்கை தந்தே முதல்பரிசு வென்றுவிட்டாய்!
ஆரவார மற்ற உனது அணுகுமுறை
பார்த்தே வியந்தோம்! பலவிருது தேடிவரும்!
ஆர்வமே வெற்றியின் வித்து.
மதுரை பாபாராஜ்
ChatGPT
You placed your research with quiet grace—
and won the very first prize.
No noise, no show—just calm resolve;
we stood amazed at your approach.
Now honors seek you, one by one—
for passion is the seed of every victory.
Sunday, March 22, 2026
மெய்வருத்தக் கூலி தரும்
கிடைப்பதில் வாழ்வோம்!
(மெய்வருத்தக் கூலி தரும்!)
கிடைப்பதோ என்றும் கிடைக்கும்! நமக்கு
கிடைக்கவே கூடாது என்றால் நமக்கு
கிடைக்காது! நாமோ முயற்சிக்க வேண்டும்!
கிடைப்பதை ஏற்கின்ற பக்குவம் வேண்டும்!
கிடைப்பதில் வாழப் பழகு.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Let us live in what is given!
What is meant to come shall surely arrive;
What is not ours will never be ours.
Yet we must strive—unceasing, sincere;
And learn the grace to accept what comes near.
So train your heart, in wisdom to dwell,
And live in the gifts that life grants well.
Saturday, March 21, 2026
புரிதலின் தவறு
புரிதலின் தவறு!
ஒருசிலர் என்னோடு பேசவே மாட்டார்!
ஒருசிலர் நட்பை விலக்கியே வைப்பார்!
புரிதல் நடத்தும் தவறிது என்றே
புரிந்தால் சரிதான் உணர்.
மதுரை பாபாராஜ்
Friday, March 20, 2026
எதுவும் முடியாது
எதுவும் முடியாது!
மகிழ்கின்ற நேரம் மகிழமுடி யாது!
அகங்குளிரும் நேரம் குளிரமுடி யாது!
வளங்காணும் நேரம் காணமுடி யாது!
உளைச்சலே வாழ்வென்றால். இந்தநிலை தானே
நிலையாகும் வாழ்வில் உணர்.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Nothing Is Possible!
When joy arrives —
I cannot rejoice.
When the soul longs
to cool and rest —
I cannot find that calm.
When the hour comes
to witness prosperity —
I cannot behold it.
If life is nothing
but ceaseless toil,
then know this truth:
such a state
becomes the very
permanence
of living.
Thursday, March 19, 2026
Wednesday, March 18, 2026
கவிப்பேரரசு வைரமுத்து
ஞானபீட விருதுபெற்ற கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு வாழ்த்து!
வடுகபட்டி ஊரில் இருந்துவந்து நாளும்
கடுமையாய்ப் பேருழைப்பால் இன்று கலையில்
சுறுசுறுப்பாய் அல்லும் பகலும் புகழில்
படிப்படியாய் சாதித்தாய் நீ.
மடுவாக வந்தே மலையாய் உயர்ந்து
புதுமைகள் செய்தே புகழ்க்கொடி நாட்டி
நறுந்தமிழ்த் தாயின் தவப்புதல்வ னானாய்!
நிறைவுடன் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
போர்
போர்! நாடு--வீடு!
நாட்டுக்கு நாடிங்கே குண்டுகளை வீசினால்
போர்ப்பதற்றந் தன்னிலே மக்கள் குமுறுகின்றார்!
வீட்டுக்குள் சண்டையும் சச்சரவும் ஏற்பட்டால்
ஊற்றெடுக்கும் உட்பகையில் நாளும் குமுறுகின்றோம்!
சீற்றம் தவிர்ப்பதே நன்று.
மதுரை பாபாராஜ்


















































