Thursday, April 17, 2014

முரண்
-------------
இருளில் தமிழகம் உள்ளதென்று கட்சி
அரசியல் பேசுவோர் மேடையில் பார்த்தால்
விளக்கொளி கண்கூசும்! இந்த நிலைதான்
முரணான பேச்சென்று சொல்.
------------------------------------------------------------------------

Sunday, April 13, 2014

இன்றைய வாழும் முறை!


தன்னலம் சார்ந்த செயல்பாட்டின் மையமாக
இன்றைய வாழும் முறைகள் உள்ளன!
இந்த மனநிலையைப் பார்க்கும் குழந்தைகள்
தன்னலத்தை உள்வாங்கும் பார்

இப்படியும் மனிதர்கள்!


இவருக் காக வளைந்து கொடுத்தார்
அவருக் காக வளைந்து கொடுத்தார்
அவரவர் இங்கே நிமிர்ந்துவிட்டர் இன்று
இவரோ நிமிரவில்லை பார்.

.

கந்தகத்தை விஞ்சும் திரைப்படத் தாக்கம்!


கந்தகத்தில் கூட எளிதிலே பற்றாது
செந்தணல் தீதான்! திரைப்படப் பாடலிலே
வந்துபோகும் ஆபாசச் சொற்களோ வேகமாய்

நெஞ்சிலே பற்றிவிடும் நின்று.

தக்கபாடம் புகட்டுவோம்!

தக்கபாடம் புகட்டுவோம்!
   (06.04.2014)
============================
கோடிசொத்து வைத்திருப்போர் கோடிகோடி ஏழைகளைத்
தேடிவந்து வாக்களிக்க வேண்டுகின்றார்!--கோடிகளைத்
தக்கவைகத்துக் கோடிமேல் கோடிசேர்க்க நிற்கின்றார்!

தக்கபாடம் கற்பிப்போம் நாம். 

இதற்கா வாழ்க்கை?


========================
ஒருதாய் வயிற்றில் பிறந்தவர்கள், வாழ்வில்
நெருக்கத்தை விட்டே தனித்தனித் தீவாய்
பரபரப்பாய் வாழ்ந்தால் உறவின் இழைகள்

கழன்று மறைந்திடும் காண்.