Wednesday, May 13, 2009

காட்சிப்பிழை - குறும்படம்

கார்த்திக் சுப்புராஜ் என்ற வளரும் திரைப்பட இயக்குனர் இயக்கிய குறும்படங்களில் 'காட்சிப்பிழை' என்ற படம் என் கருத்தை மிகவும் கவர்ந்தது.விமானத்தை மையமாக்கி, இவர் அணுகியிருக்கின்ற கோணம் மனதை நெகிழ வைக்கிறது.இந்த படத்தையும், இவரது மற்ற படங்களையும், கீழ்க்கண்ட தளத்தில் காணலாம்.தமிழ் மணம் ரசிகர்கள், இக்குறும்படத்தை கண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

www.reel-dreams.blogspot.com

இவரது படங்கள் behindwoods.com என்ற தளத்திலும் இடம் பெற்றுள்ளது.

http://www.behindwoods.com/features/visitors-1/parallax.html

Labels:

Thursday, May 07, 2009

எப்படி இப்படி ஒருவர்?

பாலம் கலியாணசுந்தரம் அவர்களுக்கு வயது 70 -- 10.05.09
=============================================================

இதுவரை வழங்கிய நன்கொடைகள்:

1. 1978- குடும்பச் சொத்து ரூ.50 லட்சம்.
2. 1990- ஊதிய நிலுவைத் தொகை ரூ.1,11,000
3. 1996- அகவிலைப்படி நிலுவைத்தொகை ரூ.1,03,000
4. 1998--ஓய்வூதியப் பயங்கள் ரூ.10 லட்சம்
5. 1963-1998-மாத ஊதியத்தில் இருந்து ரூ.30 லட்சம்
6. உலக குழ்ந்தைகள் பல்கலைக் கழக அமைப்பு நிதிக்கு ரூ.30 கோடி
7. 2008-நிலுவைத் தொகை வட்டியாக அரசு வழங்கியதை தந்தது ரூ.20000
8. ஆண்டு ஊதிய உயர்வு நிலுவைத்தொகை ரூ.10000
9. ஒவ்வொரு ஆண்டு போனஸ் தொகையையும் அப்படியே வழங்கி வருகின்றார்.
10. 2009--5 வது ஊதியக்குழு ஊதியத் தொகை ரூ.10 லட்சம்
11.6 வது ஊதியக்குழு 4 ஆண்டுகள் நிலுவைத் தொகையை அப்படியே அளிக்கும்
அறிவிப்பை தனது பிறந்த நாளில் வெளியிடுகின்றார்

வாழும் மகாத்மாவுக்கு வயது 70
===========================================================
பிறந்தநாள் வாழ்த்துப்பா:பெறுநர்:பாலம் கலியாண சுந்தரம்
============================================================

கோடிகோடி வந்தாலும் லட்சங்கள் வந்தாலும்
மூடிவைக்கும் தன்னலம் மூச்சுக்கும் இல்லையடா!
தேடிவரும் தென்றலென ஏழைக்கே தந்துவிடும்
ஈடில்லா சான்றோன் இவர்.

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத
நல்லவர் பாலம் கலியாண சுந்தரம்!
இவ்வுலகில் நல்மழை பெய்கிறது என்றாலோ
எல்லாம் இவரால்தான்! ஆம்.

தள்ளாமை ஆள்கின்ற இன்றும் பொதுநலத்தைத்
தள்ளாமல் சாதனை முத்திரையை நாள்தோறும்
உள்ளம் சலிக்காமல் ஏற்படுத்தும் வல்லவர்!
பல்லாண்டு வாழ்க நிலைத்து.



எப்படியும் வாழ்ந்திடலாம் என்றிருக்கும் இவ்வுலகில்
இப்படித்தான் வாழவேண்டும் என்ற இலக்கணத்தைத்
தப்பாமல் வாழ்வில் கடைப்பிடிக்கும் பண்பாளர்
நற்றமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.

எண்ணற்ற வங்கிகளில் தன்பணத்தைப் பூட்டிவைக்கும்
தன்னலக் கும்பல் உலவுகின்ற பூமியிலே
இன்றளவும் ஏழைகள் வாழ்வென்னும் வங்கியிலே
அன்பாய்ச் செலுத்துகின்றார் பார்.

உடையில் எளிமை! உணவில் எளிமை!
நடையில் எளிமை! மனிதநேயச் சான்றோன்
கொடைமடத்தில் அந்தக் கடையேழு வள்ளல்
கொடைமடத்தை விஞ்சிவிட்டார் கூறு.

மதுரை பாபாராஜ்

Saturday, May 02, 2009

பணக்கணக்கு!

சனநா யகமின்று சந்தி சிரிக்கப்
பணநா யகமாக மாறிநிற்கும் காட்சி!
மனச்சாட்சி தோற்று பணச்சாட்சி வெல்லும்
கணக்குதான் ஆளுமாம்! காண்.

மதுரை பாபாராஜ்

சுயநலத்தின் வேர்

விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப் படுத்தி
நிலையான நிம்மதியை ஏற்படுத்த, தேர்தல்
களத்திலே வேட்பாளர்கள் பேசுவ தில்லை!
சுயநலத்தின் வேர்தான் அவர்.

மதுரை பாபாராஜ்

உலகளந்த பெருமாள் அன்று! உலகை அளக்கும் நவீன பெருமாள் இன்று!

வரிச்சுமை ஓரடி! விண்பரப்பை முட்டும்
விலைவாசி ஈரடி! மக்களை வாட்டும்
நிலைகளோ மூன்றாம் அடியென்றே வைத்தே
அளக்கும் உலகை அரசு.

மதுரை பாபாராஜ்