Monday, December 31, 2018




இதுவும் ஓர் ஆண்டே! 2019

என்னதான் புத்தாண்டில் வாழ்த்தினாலும் வாழ்க்கையில்
நன்மையும் தீமையும் சேர்ந்தே விருந்தினராய்
வந்துபோகும் காலத்தின் கட்டளையை ஏற்றேதான்
சந்தித்து வாழ்பவர்கள் நாம்.


Friday, December 28, 2018

அன்பு! மனதின் மொழியாகும்! அம்மொழியை
கண்பார்வை இல்லாதோர் கண்டு களித்திருப்பார்!
எம்மொழியும் கேட்கும் திறனற்றோர் தம்செவியால்
நன்றாக கேட்பார் உணர்ந்து.

மொழி்பெயர்ப்பு:
மதுரை பாபாராஜ்

மதுரையின் அடையாளம்!

விஜயா பிரிண்டர்ஸ் 72!

நிறுவனரைப் போற்றும் நினைவு மலரும்,
எடுப்பான காந்திபட நாட்காட்டி ,துண்டு,
மிடுக்காக சாவிக்கொத் தொன்றும், விசிறி,
புதுமஞ்சள் பையுடன்,நாட்குறிப்பும் தந்த
மதுரநட்பின் நாயகன் சொக்கலிங்கம் வாழ்க!
மதுரை அடையாளம் நீ.

கூடு-- வீடு

பறவைகள் கூடுகட்டி வாழ்வதைப்போல் நாமும் 
பாருக்குள் வீடுகட்டி வாழ்கின்றோம்! நாளும்
சிறகடித்தே சென்று இரைதேடி மீண்டும்
பறவைகள் கூட்டுக்குள் வந்துவாழும்! நாமும்
பறவைபோல் சென்று திரும்பிவந்து வீட்டில்
நடத்துகின்றோம் வாழ்க்கையைத் தான்

Friday, December 07, 2018

கொடிநாள்



கொடிநாள்

இந்தியாவைக் காக்க இணையற்ற தொண்டுக்குத்
தங்களை அர்ப்பணித்து வாழும் இராணுவச்
சொந்தங்கள் வாழ துணைக்கரம் நீட்டுகின்ற
பொன்னாளே இக்கொடி நாள்.

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை!

மனைவி கணவனுக்கும் அஞ்சமாட்டாள்! ஆனால்
தினந்தோறும் பேரனுக்கும் பேத்திக்கும் அஞ்சும்
மனங்கொண்டே கெஞ்சுவாள் வம்புகளை எண்ணி!
கணவனும் இப்படித்தான் தாத்தாவாய் ஆனால்
சுணங்காமல் ஆடிஓடி பேரக் குழந்தை
மனங்குளிர ஆணைகளை ஏற்றே நடப்பான்!
மனமெல்லாம் பாசத்தின் ஊற்று.

மேக(விடு)தூது-- மேகதாது
----------------------------------------------
மேகவிடு தூதுவிட்டால் மாமழை பெய்துவிடும்!
மேகதாது என்னாகும்? அன்றிருந்து இன்றுவரை
மேகங்கள் காவிரியில் வெள்ளம் திரண்டுவர
ஊடகமாய் உள்ள துணர்.



அன்பு!

பரபரப் பான அன்பில்
பக்குவத் தெளிவே இல்லை!
வரம்புகள் மீறிப் போனால்
வம்புகள் வந்தே சேரும்!
நிரந்தர மான அன்பே
நினைவினில் என்றும் நிற்கும்!
தரமிகு பண்பைப் போற்றி
தழைத்திட வைப்போம் அன்பை!