Sunday, February 26, 2023

நண்பர் எழில் புத்தன்


நண்பர் எழில்புத்தன் ஆங்கிலச்சொல்லோவியத்திற்குக் கவிதை:

நமது கவனம் சிதறுகின்ற வாய்ப்பு
அதிகமாக உள்ளதால் உங்கள் பணியில்
முழுக்கவனம் காட்டிச் செயல்பட வேண்டும்!
கவனம் சிதறாமல் செய்.

மதுரை பாபாராஜ்
 

Thursday, February 23, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தனின் ஆங்கிலச்சொல்லோவியத்திற்குக் கவிதை!

ஒருசெயலைச் செய்து முடிப்பதற்கு நாமோ
பெருமுயற்சி செய்யும் வரையில் திருப்தி
அடைவதில் அர்த்தமில்லை! நம்முடைய மொத்த
கவனம் அதிலிருத்தல் நன்று.
மதுரை பாபாராஜ்
 

Monday, February 20, 2023

நண்பர் எழில் புத்தன்


நண்பர் எழில்புத்தன் ஆங்கிலச் சொல்லோவியத்திற்குக் கவிதை!


விருப்பு வெறுப்பின்றி உந்தன் செயலைக்
கருத்தாக தொய்வின்றிச் செய்யவேண்டும்! அந்தக்
கவனமே நாமிங்கே முன்னேற்றம் காண
மிகமுக்ய மாகும் உணர்.

மதுரை பாபாராஜ்
 

Sunday, February 19, 2023

ஐயா துரைசாமி திருவாசகம் அனுப்பிய


ஐயா துரைசாமி திருவாசகம் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


வருவிருந்தைச் சொல்லத்தான் வந்தாயோ? இல்லை

இரைக்காக கூவி இனத்தை அழைத்தே

பகிர்ந்துண்டு வாழத்தான்  நிற்பாயோ? சொல்லேன்!

கருங்காக்கை  யேநீதான் இன்று.


மதுரை பாபாராஜ்

 

TIPS க்கு வாழ்த்து


ISSO UII BASKETBALL TOURNAMENT SOUTH REGION--CHENNAI ZONE

HOSTED BY 

KC HIGH INTERNATIONAL SCHOOL, CHENNAI


நாள்: 19.02.23


ஊக்கமளித்த இந்தியன் பப்ளிக் பள்ளி மற்றும் பயிற்சியாளருக்கு நன்றி!


வருண் ஆதித்யா பங்கெடுத்த குழுவினருக்கு வாழ்த்து!


கூடைப்பந் தாட்டத்தின் போட்டியில் பங்கேற்று

மூன்றாம் இடம்பிடித்த இந்தியன் பள்ளியை 

வாழ்த்தி மகிழ்கிறேன்! வாய்ப்பளித்த பள்ளிக்கும்

ஆற்றலை ஊக்குவித்த ஆட்டப் பயிற்சியாளர்

ஆசிரிய ருக்கும் மனதார நன்றியைக்

கூறுகின்றேன் உள்ளம் மகிழ்ந்து.


வருண் ஆதித்யாவுக்காக

தாத்தா

மதுரை பாபாராஜ்

 

Saturday, February 18, 2023

நண்பர் எழில் புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


வாழ்க்கைப் பயணத் துளிகள் அனைத்தையும்
நாமோ அனுபவிக்க வேண்டுமென்ற போதிலும்
தேர்ந்தெடுக்கும் பாதை மகிழ்ச்சி செயல்திறனைப்
பாதிக்கும்! தேர்ந்தெடுக்கும் போதேநாம் சிந்தித்து
தேர்ந்தெடுத்தால் முன்னேற்றம் உண்டு.

மதுரை பாபாராஜ்
 

Friday, February 17, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் ஆங்கிலத்திற்குக் கவிதை:

செயலில் எதைமாற்ற வேண்டுமென்றும் இல்லை
செயல்மாற்றம் தேவையில்லை என்று கணித்து
அதனால் செயல்திறனை மேம்படுத்த வேண்டும்!
கணிக்கப் பழகுதல் நன்று.

மதுரை பாபாராஜ்
 

நண்பர் எழில் புத்தன்



 நண்பர் எழில்புத்தன் ஆங்கிலத்திற்குக் கவிதை:


நாளிலே என்னென்ன செய்த போதிலும்
நாள்முழுதும் என்னசெய்தோம் என்பதே முக்கியம்!
நாளின் இறுதியில் சொல்.

மதுரை பாபாராஜ்

நேற்று எடுத்தது


 Fenmurugan: 🙏 Vanakam sir.

என்றும் இளமை  


தலையிலே முடியில்லை! வாயிலே பற்கள்

விழுந்துவிட்ட ஓட்டை! முதுமை வருட

தடுமாற்றம் கொண்ட நடையுடன் வாழ்க்கை!

இளமை பறந்தது விட்டு.


மதுரை பாபாராஜ்

 

நிலத்தின் வேதனை


நிலத்தின் வேதனை!


அகழ்வாரைத் தாங்கும் நிலமெனினும் எந்தன்

அகத்தையே இப்படித் தோண்டி எடுத்தால்

மகிழ்ச்சியோ உங்களுக்கு! துன்பம் எனக்கு!

மகிழ்கின்ற மக்கள் நிலநடுக்கம் கண்டால்

குலுங்கிவிழும் கட்டிடங்கள் யார்வாழ்க்கை மிஞ்சும்?

அழுகையும் ஓலமுமா வாழ்வு.


மதுரை பாபாராஜ்

 

Thursday, February 16, 2023

GERI CARE HOSPITAL



 GERI CARE HOSPITAL EXCELLENT CARE!


வாழ்த்துப்பா!


கனிவு, இரக்கம், பணிவுடன் நேயம்

கனிந்துவர நாளும் மருத்துவர் மற்றும்

செவிலியர் நோயாளி உள்ளம் குளிர

சிகிச்சை அளித்தனர் சேர்ந்து.


அவரவர் செய்யும் கடமைகளை நாளும்

அவரவர் கச்சிதமாய்ச் செய்வதால் எல்லா

பராமரிப்புத் தொண்டுகளும் இங்கே அருமை!

பெருமையுடன் வாழ்த்துகிறோம் இன்று.


உணவின் தரமும் அறைகளுக்கு வந்து

சுணக்கமின்றி தந்துசெல்லும் பண்புகளும்

அன்பாய்

இணக்கமான சூழலில் வேலைகள் செய்யும்

மனப்போக்கும் வாழ்க தொடர்ந்து.


வசந்தா பாபாராஜ்

அறை எண்: 302

16.02.23



Saturday, February 11, 2023

எழில் புத்தன்





 நண்பர் எழில்புத்தன் அனுப்பிய ஆங்கிலத்திற்குக் கவிதை!


நல்லெண்ணம் மற்றும் செயலை மறுசுழற்சி
செய்யவேண்டும் இங்கே சிலநேரம்! போக்குகளை
உள்ளத்தில் ஊக்கப் படுத்தியே நேர்மறையாய்
துள்ளிச் செயலாற்ற வைக்கும் அருமையாய்!
எல்லாமே நன்மை தரும்.


மதுரை பாபாராஜ்

வறட்டு இருமல்


துடித்துத் துவளவைக்கும் வறட்டு இருமல்!


தொண்டைக்குள் முள்ளுரசித் தூண்டுவதைப் போலத்தான்

சுண்டி இழுக்கும் இருமலின் உக்கிரம்

எண்சாண் உடலை ஒருசாணாய் மாற்றிவிடும்!

குன்னி இருமும் பொழுதிலே 

கண்களில் 

கண்ணீ்ர் மழைதான் உணர்.


மதுரை பாபாராஜ்

 

Friday, February 10, 2023

புத்தர் செய்தது சரியா


புத்தர் செய்தது சரியா?

 

குடும்பத்தை  விட்டுவிட்டு நீங்கித்தான் சென்றார்!

நடுத்தெருவில் ஊர்வலம் போனாராம் வாழ்வின்

கடுமையைப் பார்த்தே உணர்ந்தாராம் சித்தார்த்!

சிறுவன் மகனென்ன பாவங்கள் செய்தான்!

கடமை மறந்தார் உணர்.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன்



நண்பர் எழில்புத்தனின் ஆங்கிலச் சொல்லோவியத்திற்குக் கவிதை


முழுமை தெளிவு இரண்டையும் நாளும்

தரவேண்டும் என்ற நினைப்பிலே நாமோ

இயற்கையாய் உள்ளதை இங்கே இழப்போம்!

இயற்கை அழகை ரசிப்பதற்குக் கற்போம்!

களப்பணியில் முன்னேற்றம் கொள்.


மதுரை பாபாராஜ.

 

Thursday, February 09, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன்


செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளபோது நல்லதைச்

செய்யலாமே! நல்லதைச் செய்வதற்கு முற்படு! 

சூழ்நிலைகள் எப்படித்தான் வந்தே உருவாகிப்

பந்தாடிப் பார்த்தாலும் உன்னுடைய நிம்மதி

வந்துசேர உன்னிலக்கை நாடு.



மதுரை பாபாராஜ்

 

Wednesday, February 08, 2023

சிறகை விரி

 சிறகை விரி!


கிடைக்காத வாழ்வை நினைத்தேதான் ஏங்கி

கிடைத்திருக்கும் வாழ்வை நழுவ விடாதே!

தடையை உடைத்தே சிறகை விரித்துப்

பறக்கத் துணிந்துவிட்டால் வானமே எல்லை!

சிறப்புடன் வாழப் பழகு.


மதுரை பாபாராஜ்

Tuesday, February 07, 2023

நண்பர் பன்னீர் செல்வம்


நண்பர் பன்னீர்செல்வம் அனுப்பிய படத்திற்குக் கவிதை



மலைத்தொடர் புல்வெளி ஓடுகின்ற ஆறு

கரையில் பறவை நதிநீந்தும் வாத்து!

ரசிக்கின்ற வண்ணத்தில் காலை வணக்கம்

படத்தை அனுப்பிய நண்பருக்கு நன்றி!

இயற்கை அழகே அழகு.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தனின் ஆங்கிலச் சொல்லோவியத்திற்குக் கவிதை!


நாளும் மணிப்பொறி உங்களைப் பின்தொடர

சாதிக்கக் கற்கவேண்டும்!  காலத்தே செய்கின்ற

எந்தச் செயலுக்கும் இங்கே பொருளுண்டு!

உங்கள் இலக்குநோக்கிச் செல்லுங்கள் என்றும்!

கடமையைக் கண்போல் கருது.


மதுரை பாபாராஜ்

 

Saturday, February 04, 2023

TIPS V B. GOA CELEBRATION


THE INDIAN PUBLIC SCHOOL


GOA CELEBRSTION


ஆசிரியைக்கு வாழ்த்து!


V GRADE  B


04.02.23


மாணவிகள் மற்றும் மாணவர்கள் எல்லோரும்

ஆசிரியை தந்த பயிற்சிகளால் ஆற்றலைக்

காட்டினர் அற்புதமாய்! வீட்டார் அனைவரும்

ஆர்வமுடன் வந்தே ரசித்தே மகிழ்ந்தனர்!

வாழ்த்துகிறேன் வாழ்கபல் லாண்டு.


நிகழ்ச்சிகள் எல்லாமே நேர்த்தியாக தந்தார்!

அகங்குளிரப் பங்கெடுத்தார் பார்த்து ரசித்தோம்!

மிகையில்லை உண்மை எனச்சொல்லி வாழ்த்தி

மகிழ்கின்றேன்! பள்ளியின் நிர்வாக ஆற்றல்

பெருமையை வாழ்த்துகிறோம் இங்கு.


கோவா வரலாற்றை சித்திரங்கள் பாடல்கள்

மூலமாக நன்கு அறியவைத்தார்! ஆர்வமாக

மாணவிகள் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள்

ஊக்கத்தால் சாதித்தார் சற்று.



மாணவன் 

எ.ச. வருண் ஆதித்யாவுக்காக

தாத்தா-- பாட்டி

மதுரை பாபாராஜ்

வசந்தா