Saturday, January 31, 2026

நண்பர் ஜெபராஜ்


 நண்பர் ஜெபராஜ் அவர்களுக்கு வாழ்த்து!

நட்பின் இலக்கணம்! நல்லவர்! வல்லவர்!

கற்றறிந்த ஆசான்!இறைப்பற்றில் வாழ்வமைத்து

நற்குடும்பம்  சூழ்ந்திருக்க நாள்தோறும் இங்கே

முறைப்படி வாழ்கின்றார் வாழ்த்து.

மதுரை பாபாராஜ்


ChatGPT

Greetings to Friend Jeberaj!

The grammar of friendship—

a good soul, a man of strength;

a learned teacher,

who shapes his life in devotion to God.

Each day, encircled by a noble family,

he lives here with grace and discipline.

Blessings upon him.

பாரதியின் கனவு பலித்தது!


 

Friday, January 30, 2026

ஓவியர் பாலாஜிக்கு வாழ்த்து


 ஓவியர் பாலாஜிக்கு வாழ்த்து!

நீரோடும் அந்தக் கரையிலே வீடொன்று

வேரூன்றி நிற்கும் மரமொன்று விண்ணகத்தில்

சீருலா காணும் நிலவும் பறக்கின்ற

கார்வண்ணப் புள்ளும் கரிக்கோலைக் கொண்டேதான்

ஆர்வமுடன் ஓவியமாய்த் தீட்டிய பாலாஜி

ஆற்றலை வாழ்த்தினேன் இன்று.

மதுரை பாபாராஜ்

ஊழ்!

 ஊழ்!

நண்பர் திரு சுப.சுவாமி்நாதன் 

தூண்டலில் வந்த கவிதை!


ஊழ்வினை  முற்பிறவி பாவபுண்யம் என்பதல்ல!

நாமிங்கே செய்த தவறின் விளைவுகளும்

நாம்செய்த நல்லவைக் கான விளைவுகளும்

காண்பதன்றி வேறில்லை! சொல்.


மதுரை பாபாராஜ்

மகாத்மா நினைவுநாள்


 

Thursday, January 29, 2026

தூண்டல் திரு KK

 தூண்டல்: திரு.KK

உழைப்பின் பயன்!

உழைப்பு! கடினந்தான் ஆனாலும் அந்த

உழைப்பின் பயனை அனுபவிக்கும் போது

தழைக்கும் மகிழ்ச்சியில் துன்பங்கள் யாவும்

பறந்தோடும் வாழ்விலே தான்.

மதுரை பாபாராஜ்

ChatGPT

The Fruit of Toil

Labour—

harsh, yes. Yet when its harvest is tasted,

in the blossoming joy it brings,

every sorrow takes wing and flies away

from the landscape of life.

சினம்

 சினம்!

வளமாக வாழ்வான்! நலமாக வாழ்வான்!

களமாக்கிப் போர்க்கள மாக்கித்தான் வாழ்வை

உளைச்சல் உலைக்களமாய் மாற்றித்தான் வாழ்வான்!

அலைச்சீற்றம் போல சினம்!

மதுரை பாபாராஜ்

Wednesday, January 28, 2026

கல்வியே அழகு


 

Tuesday, January 27, 2026

வலையபட்டி கன்னியப்பன்


 விருத்தம் ஆயிரம்!

கருத்துக்கள் பன்முக ஆற்றலைக் காட்ட

விருத்தங்கள் ஆயிரத்தைக் கன்னியப்பன் யாத்தார்!

அருந்தமிழ்போல் வையத்தில் வாழ்கபல் லாண்டு!

பெருங்கவிக்கோ வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

சந்தோஷ் குமார் மண உறுதி


 திருமண உறுதிவிழா வாழ்த்துகள்!

இணையும் இணையர்:

சந்தோஷ் குமார் - பிரியதர்ஷிணி

நாள்: 28.01.26

இல்லறத்தில் நல்லறம் போற்றி மனமொன்றிப்

பல்வளங்கள் சூழ நலமுடன் வாழியவே!

பல்லாண்டு வாழ்க மகிழ்ந்து.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

அதிர்வலையின்றி வாழ்க!

 அதிர்வலையின்றி வாழ்க!

எதிர்மறையாய் வாழ்வினை மாற்றியே நாளும்

அதிர்வலையை ஏற்படுத்தி வாழ்வதை விட்டு

அதிர்வலை இன்றியே நேர்மறை எண்ண

மகிழ்வுடன் வாழப் பழகு.

மதுரை பாபாராஜ்

ChatGPT

Live without ripples!

Turn away from the habit of stirring life

with daily twists of negativity,

from creating waves that unsettle the mind.

Instead, learn to think positive—

to live without ripples,

and dwell in joy.



கவிஞர் முருகு இணையர்


 மணநாள் விழா வாழ்த்து!  

மணநாள்: 27.01.2026

இணையர் 

கவிஞர்.முருகேசன்-- ரவீஸ்வரி

ஆண்டுகள் நாற்பத் திரண்டினை இல்லறத்தில்

மாண்புடன் காணும் இணையர் இருவரும்

பாங்குடனே பல்லாண்டு பைந்தமிழ்போல் வாழியவே!

தீந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

கண்ணீர்த்துளிகள்!


 

Monday, January 26, 2026

மருமகன் ரவி


 மருமகன் ரவி அனுப்பியதற்கு கவிதை!


அழகு! கவனத்தை ஈர்க்கிறது! பண்பு

மிளிர்கின்ற ஆளுமை உள்ளத்தை ஈர்க்கும்!

நிலையான நற்பண்பே வாழ்வு.

மதுரை பாபாராஜ்

வீரனா நீ?


 

Sunday, January 25, 2026

குடியரசு தின வாழ்த்துகள்


 

இந்தி எதிர்ப்புத் தியாகிகள் நாள்!


 

Saturday, January 24, 2026

பொதுநலமாகலாம்.

 பொதுநலமாகலாம்!


நானென்னும் ஆணவத்தில்  உள்ளமோ சிக்காமல்

நாமிங்கே நாமாக நல்லவராய்  வாழவேண்டும்!

நாமென்றால் வாழ்வில் பொதுநல மாகலாம்!

நானென்றால் தன்னலத்தின் கூடு.


மதுரை பாபாராஜ்

பாதிப்பு முதியோருக்கே!


 

கொடைக்கானல் சுற்றுலா


 கொடைக்கானல்  சுற்றுலா!

SILVER FALLS! 24.01.26

கொடைக்கானல் சுற்றுலா வானிலை முற்றும்

குளிர்ச்சியாய் கண்கள் ரசிக்க இயற்கை 

அழகாக காட்சிகளை ஏந்திநிற்கும்! உள்ளம்

உலவும் உலகை மறந்து.

மதுரை பாபாராஜ்

Friday, January 23, 2026

நடைமுறை வேறு!

 நடைமுறை வேறு!


எதிர்பார்த்த வாழ்க்கை நடைமுறை வாழ்க்கை

எதிரும் புதிருமாய் இங்கே அமையும்!

அதிர்வலைகள் ஏற்படுத்தும்! ஆனாலும் நாளும்

நகரும் நடைமுறைதான் இங்கு.


மதுரை பாபாராஜ்

அமைதி என்று

 அமைதி என்று?


அஃறிணைக் கெல்லாம் மனதில் அமைதி!

திணையில் உயர்திணை யான எனக்கு

மனதில் அமளிகளின் ஆட்சிதான் நாளும்!

அமைதியாய் வாழ்வதுதான் என்று?


மதுரை பாபாராஜ்

மீண்டும் வந்துவிடும்


 

Wednesday, January 21, 2026

திருமதி தமிழ்ச்செல்வி தட்சிணாமூர்த்தி


 மதிப்பிற்குரிய திருமதி தமிழ்ச்செல்வி தட்சிணாமூர்த்தி அவர்களுக்கு 

வணக்கம்

அருமையான கவிதைத் தொகுப்பு. அத்தனைக் கவிதைகளும் சிறப்பு. உள்ளத்தின் உணர்வுகளைக் கவிதைகளாய்த் தந்த பெருமை உங்களுக்கே. 

மதுரை பாபாராஜ்

21.01.26



அச்சமே வாழ்வு


 

கவிஞர் குருநாதன் அவர்களுக்கு வாழ்த்து


 இரவின் நிறத்தில் இருநிலவு!

நண்பர் குருநாதன் அவர்களுக்கு வாழ்த்து!


கவிதைத் தொகுப்பு அருமை! எளிமை!

புதுமை இலையில் கவிதை விருந்து! 

எடுத்த கருத்தும் தொடுத்த கவிதை

விடுத்தளித்த பாங்கும் குருவினது பார்வை

தொகுத்த முறைகளும் நன்று.

என்றும் நட்புடன்.

மதுரை பாபாராஜ்


Tuesday, January 20, 2026

ஆமையின் தத்துவம்


 

Monday, January 19, 2026

சுமைகள்


 மதுரை பாபாராஜ்:
I will be a mute spectator in this group. Please excuse me.
I have nothing against any body. My above poem is my proof.

VOVSPSWAMINTHAN:
People want you to be active, appreciating your writings on various issues.
Hence, don't be a spectator but be a leader.
Who is heaping burdens on you?
Ignore them. 
Don't punish others!

மதுரை பாபாராஜ்:
Thankful to you Sir. But my current state of mind forbids. Please bear with me sir for sometime

Sunday, January 18, 2026

சிதையும் உறவு

 சிதையும் உறவு!


பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும்

விட்டும் விடாமலும் எட்டநின்று நாள்தோறும்

அப்படி நாம்தான் பழகவேண்டும்!

இல்லையென்றால்

முற்றும் சிதையும் உறவு.


மதுரை பாபாராஜ்


ChatGPT


Relatiinship That Falls Apart


Neither touching nor not touching,

Neither holding nor letting go,

Standing just within reach, day after day—

This is how we must learn to be.

Otherwise,

Relationship

Will crumble completely.




அமைதியாக வாழப் பழகு!

 அமைதியாக வாழப் பழகு!


சுமையென்று  எண்ணினால் வாழ்க்கை சுமைதான்!

சுமையில்லை என்றால் சுமையில்லை வாழ்க்கை!

அமைதியாக அன்பாக வாழப் பழகு!

சுமைகள்  எளிதாகும் இங்கு.


மதுரை பாபாராஜ்

Saturday, January 17, 2026

நல்லொழுக்கம் அடிப்படை

 நல்லொழுக்கம் அடிப்படை!

எத்தனைக் கோயிலுக்கு எப்படித்தான் சென்றாலும்

எத்தனை தெய்வத்தை எப்படித்தான் கும்பிட்டும்

அத்தனையும் வீணாகும் நல்லொழுக்கப் பண்புகள்

சற்றும் மனிதனிடம் இல்லாது போய்விட்டால்

பட்டமரம் போலாகும் வாழ்வு.


மதுரை பாபாராஜ்

Thursday, January 15, 2026

வாழ்த்தில் எதிர்மறைச் சொற்கள்


 

தைமாத எழுச்சி


 

Wednesday, January 14, 2026

நம்மவீட்டுப் பொங்கல்


பொங்கல் சமைக்கும் வசந்தா



 

கோலங்கள்

சுபா வீட்டுக்கோலம்
திருமதி அனுதெய்வநாயகி வீட்டுக்கோலம்


 சத்யா வீட்டுக் கோலம்

Tuesday, January 13, 2026

புதுவசந்தம்




 புதுவசந்தம் நூல்வெளியீடு!

நாள்: 13.01.26 

இடம்: எங்கள் இல்லம்

எனது மனைவி எழுதிய புதுவசந்தம் நூலை மனைவி வெளியிட முதல் நூலை 

திரு. செல்வராஜ் பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியான தருணம்.

கவிஞர் இமயவரம்பன் அவர்களின் முயற்சியில் வெளிவந்த நூல்.

மதுரை பாபாராஜ்

Monday, January 12, 2026

தேவைகள் மாறுபடும்


 

கரும்பும் நானும்


 

தோழராய்க் கருது


 

Sunday, January 11, 2026

ஓவியர் நிலம் துரை


 அம்மா ஓவியர் திருமதி நிலம்துரை அவர்களுக்கு வாழ்த்து!


கைத்தடி ஊன்றி கணவன் நடந்துவர

கைகளோ அன்பாய் ஒருவர்க் கொருவரை

நன்கு அரவணைக்க இந்த முதுமையிலே

தங்களது வாழ்வை நினைத்தே நடக்கின்றார்!

தென்றலாய் வாழ்க இனிது.


மதுரை பாபாராஜ்

கூச்சல்

மிகவும் சிறப்பு.

பாபா என்றாலே சிறப்புத்தான் போல!.

பாபா=சிறப்பு..தென்.கி

 

வேகும் குளிரும்


 

Saturday, January 10, 2026

செல்வன் அதர்வா


 

Friday, January 09, 2026

அம்மா ஓவியர் நிலம்துரை


 அம்மா ஓவியர் திருமதி நிலம் துரை அவர்களுக்கு வாழ்த்து!


முகத்திலே கண்ணாடி மாறலாம் நாளும்!

அகத்திலே பார்க்கின்ற கண்ணாடி மாற்றம்

நடைமுறை யானால் இகழ்வார் உலகில்!

அகமாசு இல்லாமல் வாழ்.


மதுரை பாபாராஜ்

தமிழிசைக் கூடல்


 தமிழிசைக் கூடல் இசைவிழா வெற்றிக்

கொடிநாட்ட வாழ்த்துகிறேன் இன்று.


மதுரை பாபாராஜ்

10.01.26

நண்பர் பாலு B1

 நண்பர் பாலுவீட்டுப் பணியாரம் சுவைத்தோம்! மகிழ்ந்தோம்!


நண்பர் பாலுவுக்கு வாழ்த்து!


பாலுவீட்டில் செய்த பணியாரம் காரசட்னி

நாவில் சுவைநடனம் செய்திடவே மெய்மறந்தோம்!

காவியச் செந்தமிழால் நன்றி நவில்கின்றோம்!

பாத்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

Thursday, January 08, 2026

கடவுள் எங்கே?


 

Wednesday, January 07, 2026

சீரடி சாய்பாபா


அம்மா ஓவியர் திருமதி நிலம் துரை அவர்களுக்கு வணக்கம்.


 இவர் பெயரைத்தான் எனது தாத்தா எனக்கு வைத்தாராம்.

அவர்பெயர் சுந்தர்ராஜன்

அவர் பெயரையும் இவர்பெயரையும் பிரித்து என் சித்தப்பா மகனுக்கு

சாய்சுந்தர்

என்றும்

எனக்கு 

பாபாராஜ்

என்றும் பெயர்வைத்ததாக என் பெற்றோர் சொல்லக் கேட்டுள்ளேன்.

1955 களில் என்தாத்தா வியாழக்கிழமை தோறும் சாய்பாபா பூஜை நடத்துவார். உறவினர் குழந்தைகள் கலந்துகொண்டு பிரசாதம் வாங்குவோம்.

Sunday, January 04, 2026

பெருமை தருவது பண்பே


 I want to say actually வயது ஏற ஏற நல்லொழுக்கம் பக்குவத்தால் அதிகரிக்கணும்


திருமதி கற்பக சுந்தரி
Rtd AGS AUDITOR

Saturday, January 03, 2026

ஓவியர் திருமதி நிலம்துரை


 வண்ணத்துப் பூச்சிகள் அங்கங்கே உள்ளவாறு

கண்கவரும் ஓவியத்தைத் தீட்டி

 அளித்திட்ட

அம்மா நிலம்துரைக்கு வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

புறநானூறு 183


 கல்வியின் முக்கியத்துவம் கூறும் நல்ல செய்யுள் 
பள்ளி கல்லூரிகளில் படித்துள்ளேன்

திருமதி கற்பகசுந்தரி
Rtd AGS Auditor

தமிழருவி மணியன்


 பண்பாளர் தமிழருவி மணியன் வாழ்க!


எந்தத் தலைப்பெனினும் அந்தத் தலைப்பிலே

செந்தமிழ்ப் பாடும் அருவியென மேடையிலே

பண்பாளர் நண்பர் தமிழருவி பேசுவார்!

வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்


ChatGPT


Long live the man of culture, Tamilaruvi Manian!


Whatever the theme, upon that very theme

A cascade of chaste Tamil flows on the stage.

Our cultured friend, Tamilaruvi, speaks

A living river of words!

May he live long, flourish, and rise

Like the timeless sweetness of ancient Tamil


தமிழ ருவிமணியன் வாய்திறந்தால்

 இன்பத்

தமிழருவி யாய்க்கொட்டும் நன்கு.

தென்.கி.

Friday, January 02, 2026

புன்னகை பூகம்பம்


 

குறள்களைப் படித்தால் உயர்வு