Wednesday, March 27, 2019

யோகா-- தியானம்!

அடிப்படைப் பண்புகள் மாறாத மட்டும்
நெறிப்படுத்தும் யோகா தியானங்கள் எல்லாம்
செடிகளுக்கு வெந்நீரை ஊற்றுவது போல
தறிகெட்டுப் போகும் உணர்.

குறள் பாடல்


திருக்குறள் பாடல்


வாழ்வியல் நெறிமுறை திருக்குற ளாகும்!
உலகமே போற்றும் பொதுமுறை யாகும்!
தமிழின் மகுடம் திருக்குற ளாகும்!


அனைத்துக்கும் தீர்வே திருக்குற ளாகும்!(2)

திருக்குறள் பாடல்!

மக்களுக் கானது  திருக்குற ளாகும்
மனதின் மாசை நீக்குவ தாகும்
எப்போதும் துணையாய் வருவது குறளாம்.

அனைத்துக்கும் தீர்வே திருக்குற ளாகும்!(2)

தாய்மொழித் தமிழில் பேசிடும் குறளாம்
உயிர்களுக் கெல்லாம் உறுதுணை யாகும்
விளக்கொளி போல ஒளிதரும் குறளே

அனைத்துக்கும் தீர்வே திருக்குற ளாகும்!(2)

ஒழுக்கத்தின் வடிவே திருக்குறள் தானே
தீமையை அகற்றிடும் திருக்குற ளாகும்
பண்பட வைப்பது திருக்குறள் தானே

அனைத்துக்கும் தீர்வே திருக்குற ளாகும்!(2)

தமிழக மண்ணில் தோன்றிய குறள்தான்
வாழ்வியல் அற்புதம் அருமைக் குறள்தான்
ஈரடி எழுசீர் திருக்குறள் தானே

அனைத்துக்கும் தீர்வே திருக்குற ளாகும்!(2)

தமிழ்த்தாய் மடியில் தவழ்ந்திடும் குறளே
உலகப் பொதுமுறை திருக்குறள் தானே
வாழ்க்கையின் உறவே திருக்குற ளாகும.

அனைத்துக்கும் தீர்வே திருக்குற ளாகும்!(2)
 

Tuesday, March 26, 2019

 கண்ணீர்!

கண்ணீர்! மகிழ்ச்சியில் நீந்தவைக்கும்   ஓடையாகும்!
துன்பச் சுமையை இறக்கிவைக்கும் மேடையாகும்!
இன்பமோ துன்பமோ கண்ணீர் முகவரியே!
அன்பை வெளிப்படுத்தும் இங்கு.

பிறந்தநாள் வாழ்த்துப்பா!

 மருத்துவர்.            திரைப்பட இயக்குநர்
சத்யப்பிரேமா       கார்த்திக் சுப்பாராஜ்

17.03.2019.                          19.03.19

மருத்துவத் தொண்டும் கலைத்துறைத் தொண்டும்
ஒருங்கிணைந்த இல்லறத்தில்  சத்யாவும் கார்த்திக்
இருவரும் இங்கே பிறந்தநாள் காணும்
பெருமையை வாழ்த்தி் மகிழ்கின்றோம் நாங்கள்!
அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

Labels:

இயல்பு!

கோலம் அழிவதற்கே! பாடம் படிப்பதற்கே!
வேழம் பிளிர்வதற்கே! வேடம் கலைவதற்கே!
பாலம் இணைப்பதற்கே! பாரம் சுமப்பதற்கே!
வாழ்க்கையோ வாழ்வதற்கே இங்கு.

Saturday, March 16, 2019

ராஜ்குமார் பிருந்தா மணநாள்


பிருந்தா ராஜ்குமார் மணநாள்! பிருந்தா பிறந்தநாள்
               வாழ்த்துப்பா!
                      06.03.2019
  
இல்றமே நல்லறம் நல்லறமே இல்லறம்
உள்ளமெலாம் ஆன்மிகம் என்றேதான் கோசலுடன் வள்ளுவத்தின் தேன்மணக்க வாழ்கின்ற நற்குடும்பம்
பல்வளங்கள்   சூழ்ந்திருக்க பெற்றோர் வழிநடத்த
பல்லாண்டு வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்
வசந்தா

உடன்வாழ்த்தும் இதயங்கள்
ரவி-- சுபா-- சுசாந்த்
எழில்-- சத்யா-- நிகில்-- வருண்


இயல்பு!

கோலம் அழிவதற்கே! பாடம் படிப்பதற்கே!
வேழம் பிளிர்வதற்கே! வேடம் கலைவதற்கே!
பாலம் இணைப்பதற்கே! பாரம் சுமப்பதற்கே!
வாழ்க்கையோ வாழ்வதற்கே இங்கு.

மகன் எழிலுக்குப் பிறந்தநாள்
வாழ்த்து!
15.03.2019

ஆற்றல், உழைப்பு, விடாமுயற்சி, நம்பிக்கை
நாற்றாக நட்டுவிட்டால் சாதனை வெற்றிதான்!
ஏற்றப் படிகளில் நாளும் படிப்படியாய்
ஆக்கபூர்வ முன்னேற்றம் காணுகின்றாய் வாழியவே!
ஊக்கமுடன் வாழ்கபல் லாண்டு!

அன்பு மனைவி, அறிவார்ந்த மைந்தர்கள்
என்றும் துணையிருக்க இல்லறத்தில் வள்ளுவத்தைக்
கண்போல காத்தேதான் பல்வளங்கள் சூழ்ந்திருக்க
வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

Monday, March 11, 2019

ஆயிரம் தேள்கள்

ஆயிரம் தேள்கள்!

நாளென்ன செய்யுமடா? கோளென்ன செய்யுமடா?
நாளும் உழைத்தாலும் நான்குசுவர் வாழ்க்கையடா!
பாழும் ஒருசாண் வயிற்றுப் பசிதணிக்க
கூழும் கிடைக்காமல் ஆயிரம் தேள்களாய்ச்
சூழும் வறுமையிலே எத்தனைநாள் வாழ்ந்திட?
தேள்விலகும் நாளென்றோ சொல்.?

Tuesday, March 05, 2019



தளம் சரிந்ததே!

கலங்காத நெஞ்சம் கலங்கியதேன் இன்று?
புலம்பாத நெஞ்சம் புலம்பியதேன் இன்று?
தளமே சரிந்து நிலைகுலைய வைத்தால்
கலக்கம் புலம்பலுமே ஊற்று.

மதுரை பாபாராஜ்
31.01.19

Friday, March 01, 2019

ஒன்றுக்குள் ஒன்று!

ஒன்றில் துணியவைக்கும்! ஒன்றில் பணியவைக்கும்!
ஒன்றில் குழப்பிவிடும்! ஒன்றில் தெளியவைக்கும்!
ஒன்றில் மகிழ்ச்சிதரும்! ஒன்றில் மயங்கவைக்கும்!
ஒன்றுக்குள் ஒன்றுதான் வாழ்வு.

மதுரை பாபாராஜ்