Wednesday, December 31, 2025
Tuesday, December 30, 2025
துவாதசி
துவாதசி் சமையல்!
31.12.25
பத்திரண்டு ஏழுவகைக் காய்கள்
குழம்பாக
முத்துமுத்தாய் ஆகா உருளைக் கிழங்குடன்
பச்சை அகத்தி, அவரையுடன் வாழையும்
முற்றும் பொரியலாக மொச்சை வறுவலும்
அப்படியே சேனை வறுவலுடன் வெண்டைக்காய்
பச்சடி ,கேரட்டும் வெள்ளரியும் வெண்தயிர்
பச்சடியும் வாழைப்பூ வாலே வடைகளும்
இச்சையுடன் நீள்புடலைக் கூட்டும்
சுவைசேர்க்க
பச்சைப் புதினாவால் சட்னியும்
பீர்க்கங்காய்
வைத்த துவையலும் அப்பளம்
மற்றுமிஞ்சி
வைத்தேதான் பச்சடியும் வீட்டில் துவாதசிநாள்
சுற்றுச் சமையலாக வைத்தார் விருப்புடன்!
எப்படி எங்கள் விருந்து?
மதுரை பாபாராஜ்
ChatGPT
Dwadashi Feast! — Poetic English
Twelve and seven kinds of greens,
simmered into a single gravy;
pearl-like potatoes saying ah! in delight.
Tender green agathi, broad beans, and plantain
all brought together as crisp stir-fries;
field beans roasted just so,
elephant yam fried beside okra.
Pachadi of carrot and cucumber,
bathed in cool white curd;
banana blossom shaped into garlanded fritters.
With longing, long snake gourd joins the spread,
while fresh mint lends its chutney’s green kiss.
Ridge gourd turns into a tempered relish;
papad crackles, and what remains becomes yet another pachadi.
At home, on Dwadashi day,
the kitchen circled with loving care—
a feast prepared with willing joy.
Tell me now—
how was our banquet?
Madurai Babaraj
Monday, December 29, 2025
சொர்க்கம் நரகம்
என்னை பொறுத்த வரை இரண்டும் இருக்கலாம் உண்மையான இறை அன்பு சக மனிதனையும் கண்டிப்பாக நேசிக்க வைக்கும்
Sunday, December 28, 2025
Saturday, December 27, 2025
குறளினிது சோம வீரப்பன்
Somaveerappan:
Photo from Soma Veerappan
Somaiah family 2 days gettogether in DESHADAN CHOLA Resort near Thanjavur
25 Dec evening to 27 Dec morning
4 generations
My daughter Srividya and Brother Soma Valliappan's son Karthik co ordinated
[28/12, 07:22] Madurai Babaraj:
நான்கு தலைமுறைகள் தஞ்சைக் கருகிலே
ஓய்வகத்தில் கூடி மகிழ்ந்த படங்களைப்
பார்த்தேன்! மகிழ்ந்தேன்! களித்தேன் உவகையில்!
வாழ்க உறவு வளர்ந்து.
மதுரை பாபாராஜ்
[28/12, 07:25] Madurai Babaraj:
குறளினிது வீரப்பன் ஈருருளி ஓட்டும்
சிறப்பான காட்சிக்கு வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
அறிஞர் அண்ணா
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா!
திருத்தணி மலைமீது எதிரொலிக்கும்!
(பாடலின் ராகம்)
மெரினா கடற்கரையில்
நீ சிரித்தால் அண்ணா
தமிழர்கள் இதயத்திலே
எதிரொலிக்கும்!
தமிழோடு உறவாடி நாவசையும்
உன்
தமிழ்ப்புகழ் பாடியே உயிராடும்
மெரினா கடற்கரையில்
நீ சிரித்தால் அண்ணா
தமிழர்கள் இதயத்திலே
எதிரொலிக்கும்!
காஞ்சியிலே பிறந்த மழலைப் பழம் நீ
தூளியிலே ஆடிவந்த அன்புப்பழம்
பெரியார் சோலையிலே முதிர்ந்த பழம்
கொள்கைப் பசியோடு வருவோர்க்கு அறிவுப்பழம்!
தம்பிகளின் கழகக் கோட்டையுண்டு
உன்
கண்ணியத்தைக் காப்பதற்குப் படையுமுண்டு
உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை
அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை
மெரினா கடற்கரையில்
நீ சிரித்தால் அண்ணா
தமிழர்கள் இதயத்திலே
எதிரொலிக்கும்!
தமிழோடு உறவாடி நாவசையும்
உன்
தமிழ்ப்புகழ் பாடியே உயிராடும்
மெரினா கடற்கரையில்
நீ சிரித்தால் அண்ணா
தமிழர்கள் இதயத்திலே
எதிரொலிக்கும்!
மதுரை பாபாராஜ்
Friday, December 26, 2025
கூடிப் பொழிவதே நன்று
கூடிப் பொழிவதே நன்று!


















































