Wednesday, March 29, 2023

தென்காசி வள்ளுவர் மன்றம்

 2023  ஆம் ஆண்டு தென்காசி திருவள்ளுவர் கழக 95 வது ஆண்டு விழா தொடங்கும் நாள் ஜூன் 3 ஆம் தேதி சனிக்கிழமை 


10  நாள்கள் நடைபெறும்!


தென்காசி வள்ளுவர் மன்றத்தில் பத்துநாட்கள்

பன்முக ஆற்றலைக் கேட்டு ரசிப்பதற்கு

நண்பர்கள் மேடை அரங்கேற்றம் உள்ளதாம்!

பண்பட்டோர் வாய்ப்புள்ளோர் வள்ளுவச் சான்றோர்கள்

அன்புடன் பங்கேற்றே உள்ளம் மகிழ்வதற்கு

அங்கே வருக உவந்து.


மதுரை பாபாராஜ்

Tuesday, March 28, 2023

அகந்தை



 மருமகன் ரவி அனுப்பிய சொல்லோவியத்திற்குக் கவிதை!


அகந்தையோ உன்னை எரிப்பதற்கு முன்னால் 

அகந்தையை நீதான் எரித்துவிடு! உந்தன்

அகமிங்கே தூய்மை அடைந்துவிடும்!

வாழ்க்கை

மகத்தாக மாறிவிடும் சொல்.


மதுரை பாபாராஜ்

Monday, March 27, 2023

தம்பி கெஜராஜுக்கு வாழ்த்து


தம்பி கெஜராஜுக்கு வாழ்த்து!


பன்முக ஆற்றலைத் தன்னகத்தே கொண்டுள்ள

தம்பி கெஜராஜ் திரைத்துறையில் ஆற்றலை

நன்கு வெளிப்படுத்தி முன்னேற்றம் காணுகின்றார்!

வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

 

Sunday, March 26, 2023

Nature



Joys knew no bounds!

----------------------------------

Oh my enchanting Nature

What a treasure of pleasure you have

A gift indeed to the human race

Otherwise this world is dull and empty!

Your delectable fragrance

Floats in the tender breeze!

The musical notes of the stream

Hug the ears and scintillate the nerves

Mighty majestic huge mountains

The wandering clouds of the mountain top

The tall and hefty standing trees

And its green fluttering leaves

Leaves from the branches bid good bye

To the falling breathren leaves

The falling leaves float with despondency

The wind that bristlesthe standing crops

The chirping sounds of the beautiful birds

The murmuring lullabies  that they carry

The  drizzles drop from the gathering clouds

Suddenly transformed into heavy rain

What a sight and what a sight!

It cannot be explained

But should be enjoyed like a poem!

These are scenes i saw and enthralled!

My joys knew no bounds! 

And the ecstacy entwined my frame!


Babaraj


Great Sir. Really nature offers pleasure to all five senses of the human body. Nature is great. Your observation of the nature and your vocabulary are really admirable. 

👏👏👏👍👍🙏

VOV Ramasamy


*My* *joy knows no bounds* when I realise that I am related to an extraordinary personality like you, Sir. 😊

Excellent poem by you Sir. 👍👍👍

Rajkumar Jothi

Super poem 
Indeed my joys knew no bounds
Many Many Thanks

Ramu,OK friend

இரு மொழி புலமை👍👍
இரு மொழிக் கவிஞர். இரு மொழி கொள்கை.
👍👍👏👏🌹🌹🤝🤝🙏
Mogaleeswaran vizag

 

Wednesday, March 22, 2023

தன்னலமற்ற தலைவர்களை வணங்கு


தன்னலமற்ற தலைவர்களை வணங்கு!

இந்திய  நாட்டை நடுநிலைப் பாதையில்
செம்மாந்து வீரநடை போடவைத்தார் நேருதான்!
நேர்மை நியாயம் எளிமை நடுநிலைமை
வாழ்வியலாய்ப் பின்பற்றி வாழ்ந்தவர் காமராசர்!
ஏழைகள் நாயகன் காமராசர், தேன்மழலை
நாயகர் நேரு இருவரும் புன்னகையில்
தேசத்தின் தூண்களாக உட்கார்ந்து பேசுகின்றார்!
பாடுபட்டு வாழ்த்தவரை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்
 

வேண்டாம் டாஸ்மாக் கடைகள்


மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு

வணக்கம்.

அற்புதமாக சாதனைகள் படைத்துவரும் முதல்வரின் கவனத்திற்கு இந்தக் கவிதையைத் தருகின்றேன்.

எண்ணற்ற ஏழை்நடுத்தரக் குடும்பங்களில் ஒளிவிளக்கு ஏற்றப் பயன்படும் என்று நம்புகிறேன்.

இவண்

தங்கள் உண்மையுள்ள

மதுரை பாபாராஜ்

9003260981


வேண்டாம் டாஸ்மாக் கடைகள்!


குறள் 957:

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்

மதிக்கண் மறுப்போல் உயர்ந்தென்றார் ஐயன்!

குடிவெறிக்கு வாய்ப்பளிக்கும் டாஸ்மாக் கடைகள்

மதியில் மறுப்போல் உள்ளதே ஐயா!

மதியை மயக்கி குடியைக் கெடுக்க

வெறியைத் தூண்டுகின்ற டாஸ்மாக் கடையை

மறுக்காமல் மூடுங்கள் இங்கு.


எத்தனை நற்செயல்கள் நாள்தோறும் செய்தாலும்

அத்தனையும் டாஸ்மாக் குடிவெறி முன்பிங்கே

வான்மதியில் உள்ள மறுப்போல் தெரிகிறதே!

டாஸ்மாக் கடைவேண்டாம் சொல்.


மதுரை பாபாராஜ்

9003260981


 

Tuesday, March 21, 2023

சாடு

 சாடு!

ஆத்திகமோ? நாத்திகமோ? நல்லொழுக்கம் போற்றவேண்டும்!

ஆசைக் கயிற்றிலே ஆடுகின்ற பம்பரமாய்

ஊசலாடும் உள்ளமோ ஐம்புலனைக் கட்டவிழ்த்தால்

வேடதாரிக் கும்பலென்று சாடு.


மதுரை பாபாராஜ்


எடுப்பார் கைப்பிள்ளை!

 




Monday, March 20, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன்
சொல்லோவியத்திற்குக் கவிதை!

உங்களைச் சுற்றியுள்ள சூழல் வசதியாக
இல்லை உகந்ததாக இங்கே இருக்காது!
நீங்கள் செயல்படக் கூடாது என்றதற்கோ
அர்த்தமில்லை! நீங்கள் சிறப்பாய் செயல்களை
எப்போதும் செய்வதே நன்று.


மதுரை பாபாராஜ்
 

Friday, March 17, 2023

நண்பர் பன்னீர் செல்வம்


நண்பர் பன்னீர் செல்வம் அனுப்பிய ஆங்கிலச் சொல்லோவியத்திற்குக் கவிதை!


எதிர்மறை யான கனவுகளை இங்கே

மகிழும் கனவுகளாய் மாற்றுகின்றாய்! வாட்டும்

கவலைகளை மாற்றுகின்றாய் நாளும் மகிழ்ச்சி

அலைகளாய்! அச்சங் களைகளை அன்பாய்

நிலையாக மாற்றுகின்றாய்! மாற்றத்தை ஏற்கும்

மனப்பாங்கே வாழ்க்கைக்கு வேர்.


மதுரை பாபாராஜ்

 

நா காக்க!

 நா காக்க!

கருத்துகள் ஏற்புடைத்தா? ஏற்போம் மகிழ்ந்து!

கருத்துகள் மாறுபட்டால் வாதம் தவிர்ப்போம்!

வரம்பற்ற வாதங்கள் நட்புக்குக் கேடு!

சுழல்கின்ற நாவை அடக்கு.

மதுரை பாபாராஜ்




நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!

உந்தன் இலக்கில் கவனம் செலுத்துதல்
அந்த அளவு எளிதல்ல! மற்றவர்கள்
நம்மிடம் நாளும் எதிர்பார்க்கும் தன்மைமுதல்
நம்சேவை தன்னைத் தருவது ஈறாக
கண்போல் கடமை நிறைவுடன் செய்தலாகும்!
உண்மை உழைப்பே உயர்வு.

மதுரை பாபாராஜ்!
 

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில் புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!

இதுவரை வந்தபின் பின்செல்ல ஏனோ
நினைக்கவேண்டும்? நற்பயன் தன்னை நமக்குத்
தருவதாய் இங்கிருந்தால் மீண்டும் இணைந்து
பணியை விரைந்து முடிப்பதற்குத் திட்டம்
கனியவைத்தல் என்றுமே நன்று.

மதுரை பாபாராஜ்
 

பிரசாந்த் மருத்துவமனைக்கு வாழ்த்து


பிரசாந்த் மருத்துவமனைக் குழுவினருக்கு வாழ்த்து!


மனைவி வசந்தா!

அறை எண்: 2005 A


அன்பு கருணை இரக்கம் இவைமூன்றைக்

கண்ணும் கருத்துமாய்ப் பின்பற்றி நோயாளி

நன்கு குணமாகிச் செல்ல உழைக்கின்ற

பண்பில் சுணக்கமின்றி ஒற்றுமையாய்த் தொண்டுசெய்யும்

தன்மையை வாழ்த்துகின்றேன் இன்று.


மதுரை பாபாராஜ்

16.03.23

 

Wednesday, March 15, 2023

முரண்

 வாழ்வின் முரண்!


நின்றால், சிரித்தால், படுத்தால்  பணமழை

என்றே விளம்பரத்தில் ஏக வருமானம்!

அங்குமிங்கும் நாளும் கடின உழைப்பெனினும்

துன்பம், பணக்குறை  தான்.


மதுரை பாபாராஜ்


Thursday, March 09, 2023

செல்வன்நவில் பாட்டிக்கு நன்றி


செல்வன் நவில் பாட்டிக்கு நன்றி!


மின்னலின் தாக்கத்தால் தாழை மலருமென்ற

உண்மையை நானறிந்தேன் இந்தப் பதிவாலே!

நன்றி நவில்கின்றேன் இன்று.


மதுரை பாபாராஜ்

 

Wednesday, March 08, 2023

நண்பர் கணியன் கிருஷ்ணன்


நண்பர் தென்காசி கணியன் கிருஷ்ணனுக்கு வாழ்த்து!

எந்தன் கவிதைக்கு வண்ண மகுடத்தை
நண்பர் கணியன் கிருஷ்ணன் அழகாக
கண்கவரும் வண்ணந்தான் சூட்டி அளிக்கின்றார்!
வண்டமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்
 

வீட்டுச் செடியில் செம்பருத்திப் பூ


வீட்டுச் செடியில் செம்பருத்திப் பூ!


விடியல் பொழுதிலே வீட்டிலே உள்ள

செடியிலே செம்பருத்திப் பூவோ மலர்ந்து

சிரித்திருந்த காட்சியைப் பார்த்து மகிழ்ந்தேன்

அழகின் சிரிப்பை உணர்ந்து.


மதுரை பாபாராஜ்

 

Sunday, March 05, 2023

நண்பர் எழில் புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக்  கவிதை!

நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியுமே
நீங்கள் எடுக்கும் பணியை நிறைவேற்றத்
தூணடுகோ லாகும்! சிறிது விவரங்கள்
வேகமாக அச்செயலை இங்கே முடிப்பதற்கே
ஏதுவாகும் என்றே உணர்.

மதுரை பாபாராஜ்


 

மதிப்பிற்குருய அப்துல்கலாம் ஐயா


மதிப்பிற்குரிய அப்துல் கலாம் ஐயாவின் பொன்மொழிக்குத்

தமிழாக்கம்!


நெருக்கமாக உள்ளோரை  விட்டுவி டாதே!

ஒருசில தப்புகளைக் கண்டுவிட்டால் கண்ணை

விரைந்தேநீ மூடிக்கொள்! நண்பருடன் நீயோ

கலந்துரை யாடி மகிழ்ந்த சிறந்த

தருணத்தை எண்ணிக்கொள்! ஏனென்றால் அன்பு

முழுமையைக் காட்டிலும் முக்கிய மாகும்!

விலைமதிப் பற்றதே அன்பு.


மதுரை பாபாராஜ்

 

Friday, March 03, 2023

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


செயல்களைச் செய்ய சிறிதுநேரம் தேவை!
விவேகமாய் நாளும் ஒதுக்கவேண்டும்! மேலும்
சிலபல எல்லைகளைத் தாண்டாமல்  பார்த்து
கவனமுடன் அந்தப் பணிகளை இங்கே
நிறைவேற்ற வேண்டும் உணர்.

மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!

நீங்கள் தொடர்ச்சியாக உங்கள் முயற்சிகளை
நாளும் முதலீடு செய்து கவனமாக
வேலைசெய்தால்  நல்ல முடிவுகள் காணலாம்!
தாமத மானாலும்  நிச்சயம் வெற்றியுண்டு!
வேகம் விவேகத்தைக் காட்டு.

மதுரை பாபாராஜ்
 

கவிஞர் இமயவரம்பன்


02.03.23

கவிஞர் இமயவரம்பன் இன்று எந்தன் இல்லத்திற்கு வருகைதந்த மகிழ்வான தருணம். பெரியார் இன்றும் என்றும் என்ற நூலைப் பரிசளித்தார்

மதுரை பாபா அவர்களுக்கு வாழ்த்து!

பன்முகத் தன்மையை
         தன்னுள் கொண்டு
கண்ணில் காண்பதை
         காதால் கேட்பதை
கவியாய் வடித்து
         கருத்துடன் அளிக்கும்
ஆற்றலை மிகையாய்
         அகத்தில் கொண்ட
அகவை எழுபதில்
         அன்பைப் பொழியும்
அருமைக் கவிஞர்
         அய்யா பாபா!
நொடிக்கொரு கவிதை
         துடிப்புடன் யாத்து
அடிக்கடி கொடுத்து
         அடைவார் இன்பம்!
மதுர கவிராயர்
         மாண்புறு பாபா!

கோ.இமயவரம்பன்
 

Thursday, March 02, 2023

மாண்புமிகு முதல்வர் பிறந்தநாள்

 மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!

அகவைத் திருநாள் 01.03.23

அகவை. 70

குறள் 67:


தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயலென்றார் வள்ளுவர்!

தந்தை கலைஞர் கடமையைச் செய்துவிட்டார்!

அன்பு மகனை அவையிலே முன்னணியில் 

நிற்கவைத்தார் வாய்ப்பை அளித்து.


குறள் 69:


ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாயென்றார் வள்ளுவர்!

தன்மகன் ஸ்டாலினைச் சான்றோர் எனப்புகழும் 

இன்சொல்லைக் கேட்கின்றார் தாய்.


குறள் 70:


மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்லெனும் சொல்லென்றார் வள்ளுவர்!

அன்பகம்  ஸ்டாலினோ ஆற்றலால் 

சாதித்தே

இந்தக் குறளுக்கு நற்புகழ் சேர்த்துவிட்டார்!

வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

9003260981