Thursday, November 30, 2023

ரகு பணிநிறைவு வாழ்த்து



 மருமகன் துணை ஆட்சியர் M.ரகுவீரகணபதிக்குப் பணிநிறைவு வாழ்த்து!


RETIRED AS DEPUTY COLLECTOR!

நாள்: 30.11.23

அரசுப் பணியில் படிப்படி யாக

உயர்ந்தேதான் முப்பத்து ஏழாண்டு காலம் 

அயாரமல் நாளும் உழைத்தேதான் ஏற்றம்

பலகண்டாய் வாழ்கபல் லாண்டு.


பலவகை ஊர்களில் பன்முக ஆற்றல்

களத்தில் கடமைகள் செய்தே வாழ்வில்

பணிநிறைவைக் காணும் மருமகன் வாழ்க!

தனித்திறமை காட்டி பலபொறுப்பை ஏற்றே

விருதுபல பெற்றே தலைநிமிர்ந்தே நிற்கும்

அருமையை வாழ்த்தி மகிழ்கின்றோம் இங்கே!

அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


எந்தவிதத் தொய்வுமின்றி இங்கே தொடர்ச்சியாக
எந்தச் செயலையும் நாளும் நிறைவேற்ற
கற்கவேண்டும்! ஆகையால் ஆற்றலை மேம்படுத்தி
முற்றும் விரைவாக மற்றும் செயல்திறனை
அற்புதமாய் மாற்றும் உணர்.

மதுரை பாபாராஜ்

நடுங்கிச் சாகின்றேன்

 நடுங்கிச் சாகின்றேன்!


உள்ளம் உடைந்துவிட்ட கோலத்தில் வாழ்கிறேன்!

எல்லாம் கைவிட்டுப் போனதுபோல் வாடுகிறேன்!

பள்ளம் பறிக்கின்றார் நிற்க முடியவில்லை!

கிள்ளி எறிந்தார் சினந்து.


மதுரை பாபாராஜ்


மழை-- விடுமுறை அறிவிப்பு

 மழைக் காலத்தில் விடுமுறை அறிவிப்பு!

அநேகமாக எல்லா பள்ளி கல்லூரிகளுக்கு வாகனங்கள் உள்ளன. எனவே தூரம் ஒரு பொருட்டல்ல. சென்னை,செங்கல்பட்டு,திருவள்ளூர்,காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து மாணவ மாணவிகள் பள்ளி கல்லூரிகளுக்குச் செல்கின்றனர். கனமழை நேரத்தில் இந்த மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கவேண்டும்.

ஒரே இடத்தில் பக்கத்து வீட்டு குழந்தைக்கு விடுமுறை.மற்றொரு குழந்தையின் பள்ளிக்கு விடுமுறை இல்லை. பள்ளி வாகன ஓட்டுநர்கள் எப்படி வருவார்கள்? 

நிர்வாக வசதிக்காக மாவட்டங்களைப் பிரித்துவைத்து மழைக்காலத்தில் விடுமுறை அறிவிப்பு குழப்பமாக உள்ளது.

நிர்வாக வசதி வேறு; நடைமுறை வேறு!

என்பதை உணர்ந்து இனிமேல் அறிவிக்க வேண்டிக்கொள்கிறேன்.

மதுரை பாபாராஜ்

Tuesday, November 28, 2023

Dr.சேது


 Dr.சேது அனுப்பியதற்குக் கவிதை!


நம்பிக்கை கொண்டால் அமைதியைக் கூடநாம்

நன்கு புரிந்துகொள்வோம்! நம்பிக்கை இல்லையென்றால்

ஒவ்வொரு சொல்லும் தவறாக நாமிங்கே

என்றும் புரிந்துகொள்வோம்! நம்பிக்கை மட்டுமே

இங்கே உறவுக்கு ஆன்மாவாய் நிற்கிறது!

நம்பிக்கை வாழ்வுக்கு வேர்.


மதுரை பாபாராஜ்

BSNL RESCUE OPERATION IN UTTARKAND


 சுரங்கத்தொழிலாளர் மீட்புப் பணியில் BSNL!


சுரங்கத்திற்கு உள்ளே சிக்கியிருந்த போழ்து அவர்தம் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள BSNL தொலைப்பேசி நிலையம் அமைத்து கொடுத்தது 22 மணி நேரத்திற்குள்.


எழில்புத்தன்.


BSNL தொண்டுக்கு நன்றி!


சுரங்கத்தில் சிக்கித் தவித்திருந்த நேரம்

தொழிலாளர் தங்கள் உறவுடன் பேச

தொலைத்தொடர்பு தன்னை உருவாக்கித் தந்து

மலைப்பை அகற்றிய இந்திய நாட்டின்

தொடர்பு நிலையத்தை வாழ்த்து!


மதுரை பாபாராஜ்

எலிவளை தொழில் வல்லுநருக்கு வாழ்த்து


 

சுரங்கத்தொழிலாளர் மீண்டநாள்


 உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா!


குறள் 619:


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்.


41 தொழிலாளர்கள் 17 நாள்கள்

மீட்புப் பணியில் அனைவரின் முயற்சி!


மீண்டநாள்: 28.11.23


சுரங்கத்துப் பாதை அமைத்தபோது அங்கே

சரிந்து விழுந்த நிலம்மூட உள்ளே

தொழிலாளர் சிக்கினர்! சிக்கியோரை மீட்க

பதினேழு நாள்களாகப் போராடி இன்று

புதிதாய்ப் பிறந்தது போல வெளியே

வருகின்றார் சிக்கியோர் தான்


கூட்டு முயற்சி! இமாலய வெற்றியை

நாட்டியது என்றே முழங்கலாம்! திக்திக்திக்

காட்சிகள் கண்முன் அரங்கேற எப்போது

பார்ப்போமோ எப்படி மீட்பாரோ என்றேதான்

ஆர்வமுடன் உற்றார் உறவினர்கள் காத்திருக்க

நாள்கள் நகர்ந்தன வே.


பதினேழு நாள்கள் முயற்சியால் வெற்றிக்

கனிபறித்த நிர்வாகந் தன்னைத்தான் வாழ்த்து!

மனிதர்கள் ஆற்றலை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

Monday, November 27, 2023

ICE VENDOR



 

Education shapes


 EDUCATION FIRST; EVERYTHING NEXT!


EDUCATION SHAPES


OUR ATTITUDE


OUR CHARACTER


OUR HUMILITY


OUR HUMAN NATURE


OUR COURTESY


OUR QUALITY


OUR WORDS


OUR APPROACH


OUR WISDOM


OUR OBEDIENCE


OUR POSITIVE THOUGHTS


OUR RESPECT TO OTHERS


OUR DUTIES 


IN SHORT OUR LIFE!


STRUCTURES OUR LIFE!


BABARAJ

இப்படி ஒரு தீயா நூல்


 

எதிர்மறைப் பண்புகள் மாறவேண்டும்


 

Sunday, November 26, 2023

Prarthana c3


 PRARTHANA C3 


திருமதி அனுதெய்வநாயகி அவர்கள் வீட்டு வாசலில் கார்த்திகை விளக்கு!

26.11.23

குத்து விளக்கிலே மாலை அணிவித்து

பக்தி மணங்கமழ வாசலில் கோலமிட்டே

பற்றுடன் கார்த்திகை மாத விளக்கேற்றி 

சுற்றம் மகிழ்ந்திருந்தார் வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

நன்றி மறவேன்


 நண்பர் பண்பாளர் மனிதத்தேனீ 

இரா. சொக்கலிங்கம் அவர்களுக்கு


வணக்கம்.

எழுதத்தோன்றியது எழுதினேன்!


நன்றி மறப்பவன் நானல்ல! அப்படியே

நன்றி மறந்தால் மனிதனல்ல! உள்ளவரை

என்றும் மறவாமல் நான்வாழ்வேன்! சொக்கலிங்கம்

பண்பிற்கும் ஈடுண்டோ சொல்!


மதுரை பாபாராஜ்

Saturday, November 25, 2023

நாட்டு நடப்பு


 நாட்டு நடப்பு!


பிள்ளையைக் கிள்ளி விடுவாராம்! அப்பிள்ளை

குய்யோ முறையோ எனக்கத்தி ஊராரை

எல்லாம் திரட்டும்! பிறகிங்கே தொட்டிலாட்டிப்

பிள்ளைய பாடித்தான் தூங்கவைத்துச் செல்வாராம்!

இங்கே நடப்புகளைக் காண்.


மதுரை பாபாராஜ்

விளம்பரம் தணிக்கை வேண்டும்

 விளம்பரத்திற்குத் தணிக்கை வேண்டும்!


விளம்பரத்தைப் பார்த்துப் பொருள்கேட்ப தில்லை!

விளம்பரம் ஏனோ தெரியவில்லை! நாளும்

விளம்பரங்கள் ஊடகத்தில் காட்டுகின்றார்! மேலும்

விளம்பரத்தில் காட்டுவதை கூசுதே பார்க்க!

தணிக்கைக்கே உட்படுத்தச் சொல்.


மதுரை பாபாராஜ்

LRC பிறந்தநாள்


 தம்பி L.R. சந்திரசேகரன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!


BOYHOOD FRIENDSHIP!


அகவைத் திருநாள்: 25.11.23


இல்லறமுத்துக்கள்:

மனைவி: திருமதி. தெய்வலட்சுமி

மகள்: செல்வி ஜனனி


அன்றிருந்து இன்றுவரை நட்பின் இலக்கணம்!

அன்பினிலே உண்மை! நகைச்சுவை நாயகன்!

பண்பினிலே மாசற்ற தங்கமென்பேன்! இன்பத்தில்

துன்பத்தில் பங்கெடுக்கும் தோழமையில் ஈடில்லை!

வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

Friday, November 24, 2023

தென்காசி கிருஷ்ணன்


 Vovkaniankrishnan: 

பாபா என்றால் எளிய வெண்பா.

கிருஷ்ணன் என்றால் கிறுக்கல் பா.


 நண்பர் தென்காசி கிருஷ்ணனுக்கு வாழ்த்து!

கிருஷ்ணனென்றால் கண்கவரும் வண்ணத்தால் தீட்டி

நுணுக்கத்தால் பார்க்க உயிரூட்டும் நண்பர்!

மனதார வாழ்த்துகிறேன் நான்.

மதுரை பாபாராஜ்

MRS DHURGA PARAMESWARI KAZA


 MRS.DURGA PARAMESWARI KAZA


திருமதி துர்காவுக்கு வாழ்த்து!


நேற்று மதுரையில்! இன்று வெளிநாட்டில்!

ஆற்றலைக் காட்டி அறவுரைகள்

காணொளியால்

போற்றுகின்ற வண்ணந்தான் ஆர்வமுடன் கூறுகின்றார்!

வாழ்த்துகிறேன் துர்காவை இங்கு.


 மதுரை பாபாராஜ்

உறவைத் தொடர்

 உறவைத் தொடரவேண்டும்!

வளர்ந்த தலைமுறை வேறுபட்டு வாழ்ந்தால்

வளரும் தலைமுறை தங்களது வாழ்வில்

உறவைத் தொடரவைத்து வாழ்தல் சிறப்பு!

பெருந்தன்மை எண்ணம் உயர்வு.

மதுரை பாபாராஜ்

தீர்வு கிடைக்குமா?

 தீர்வு கிடைக்குமா?

வாடி வதங்கும்  செடிமீது நீர்தெளித்தால்

வாடுவதை விட்டே செழித்து வளர்ந்துவிடும்!

வாடும் மனதிற்குள் சிக்கலைத் தீர்ப்பதற்குத்

தீர்வென்னும் நீர்கிடைத்தால் நன்று.


மதுரை பாபாராஜ்

ஈனச் செயலைத் தவிர்

 ஈனச் செயலைத் தவிர்!

கூட்டைச் சிதைத்தவள் யாரெனினும் தண்டனைச்

சாட்டைக்குத் தப்ப முடியாது! யாருக்கும்

நானிங்கே எந்தவகைத் தீங்கையும் செய்யவில்லை!

ஈனச் செயலைத் தவிர்.

மதுரை பாபாராஜ்


நண்பர் சேதுமாதவன்


 நண்பர் சேதுமாதவன் அவர்களுக்கு இரவு வணக்கம்!


கண்ணாடிப் பாத்திரத்தில் பூக்கள்தான்! காம்புகளில்

பச்சைவண்ணப் பூக்கள்! மெழுகுதிரி வைத்தேதான்

மங்கலமாய் நன்கு விளக்கேற்றி நண்பரும்

தந்தார் இரவு வணக்கத்தை அன்புடனே!

வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

Thursday, November 23, 2023

அன்றும் இன்றும்



 அன்று உள்ளே வா! 

இன்று வெளியே போ!


அன்று!


மாலைப் பொழுதில், விடுமுறை நாட்களில்

சாலையில் வீட்டருகில் நாளும் விளையாடும்

வாழ்க்கைதான்! பெற்றோர் அழைத்திருப்பார் உள்ளேவா!

சாப்பிட நேரமாச்சு! தூங்கணும் என்றேதான்

போவோம் மனமின்றி தான்.


இன்று!


மாலைப் பொழுதில் கணினி விளையாட்டில் 

மூழ்கி அறையில் அடைந்து கிடக்கின்றார்!

மாலைப் பொழுதில் வெளியேதான் போங்களேன்!

நாலுபேர் சூழ விளையாடி வந்தால்தான்

வாழ்க்கை நலமாகும் என்றேதான் சொன்னாலும்

கேட்க மறுக்கிறார் இன்று.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில் புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொற்களுக்குக் கவிதை!

மற்றவர்கள் என்னசெய்ய வேண்டுமென்று எண்ணுமுன்
என்னசெய்ய வேண்டுமென்றும் செய்ய முடியுமென்றும்
சிந்திக்க வேண்டும்நாம்! உற்பத்தி திட்டங்கள்
மற்றும் செயல்திறன் போன்றவற்றில் நாம்கவனம்
கொண்டாலே நல்லது செப்பு.

மதுரை பாபாராஜ்
 

வெள்ளை மனம்


 

அகத்தில் உளைச்சல்


 அகத்தில் உளைச்சல்!


உடலிலே நோய்கள் ஒருபுறம் தாக்க

அகத்தில் உளைச்சல் ஒருபுறம் வாட்ட

அகத்தின் களைப்பு முகத்தில் தெரிய

முகமலர் வாடி வதங்குகின்ற காட்சி!

நடப்பதே கேள்விக் குறி?


மதுரை பாபாராஜ்

Wednesday, November 22, 2023

பெற்றோரைப் போற்று


 

Tuesday, November 21, 2023

நீ மாறு!


 நீ மாறு!


மழைக்காலம் என்றால் குடைகளே தேவை!

குளிர்காலம் என்றால் குளிராடை தேவை!

வெயில்காலம் என்றால் பருத்தியாடை தேவை!

இவையின்றிச் சென்றால் நலத்திற்குக் கேடு!

பருவத்திற் கேற்றவாறு ஆடையை மாற்று!

தரணியில் வாழ்க்கை அமைவதற் கேற்ப

மனநிலையை நீமாற்றப் பார்.


மதுரை பாபாராஜ்

மகாத்மா காந்தி


 குறள்நெறியில் மகாத்மா காந்தி!


இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்.


இந்தக் குறள்நெறியைப் பின்பற்றி வாழ்நாளில்

அண்ணல் மகாத்மா  விடுதலைப் போராட்ட

நன்னெறியாய் ஏற்றே இறுதிவரைப் போற்றியதால்

இன்றும் மகாத்மா பெயர்நிலைக்க வாழ்கின்றார்!

அண்ணலின் வாழ்க்கையை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

Monday, November 20, 2023

விஎன்சிடி வள்ளியப்பன்


 பேசும் தலைமை!

ஊடகம் News 7 காணொளி!

சிறப்பு விருந்தினர் 

திரு விஎன்சிடி வள்ளியப்பன்

கமலா சினிமாஸ் இயக்குனர்!


தந்தை சிதம்பரம் ஐயாவின், அம்மாவின்

அன்பான ஆசியுடன் பண்புகளைக் கற்றேதான்

இங்கே கிடைத்த அனுபவத்தின் மூலமாக

இன்று வளர்ந்திருக்கும் நல்ல வளர்ச்சிக்கு

நன்னெறியே காரணம் என்றவரை வாழ்த்துகிறேன்!

வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

நம்வாழ்க்கை நம்கையில்


 நம்வாழ்க்கை நம்கையில்!


என்ன நடக்குமோ? ஏது நடக்குமோ?

என்றே நடுங்கித்தான் வாழ்வதைக் காட்டிலும்

சந்திக்கும் உள்ளத் துணிவுடன் வாழவேண்டும்!

நம்வாழ்க்கை நம்கையில் தான்.


மதுரை பாபாராஜ்

நண்பர் சேதுமாதவன்


 நண்பர் சேதுமாதவன் அவர்களுக்கு வாழ்த்து!


மழையில் மலர்நனையக் கூடாது என்றே

குடைவிரித்துப் பாதுகாக்கும் நற்கருணை உள்ளம்!

அகங்குளிர காலை வணக்கத்தை நண்பர் முகமலர்ந்து சொல்வதை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


முழுமனதும் நம்பிக்கை யும்கொண்டே எந்தச்
செயலையும் நீங்களிங்கே செய்யவேண்டும் நாளும்!
பயன்களை நீங்கள் அடையலாம் செய்து!
முயற்சியே வெற்றியின் வேர்.

மதுரை பாபாராஜ்

Sunday, November 19, 2023

உலகக்கோப்பை கிரிக்கெட்


 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி! வாழ்த்துகள்!


AUSTRALIA CAPTAIN: PAT CUMMINS!

INDIA CAPTAIN : ROHIT SHARMA!


இந்தியாவும் ஆஸ்திரேலி யாவும் கிரிக்கெட்டில்

இங்கே குஜராத்தில் போட்டிபோட்டே ஆடினார்கள்!

வெற்றிபெற்றார் ஆஸ்திரேலி யாதான்

இறுதியிலே!

வெற்றிவாய்ப்பை இந்திய நாடு இழந்தது!

வெற்றிபெற்ற நாட்டணியை வாழ்த்தி மகிழ்ந்திடுவோம்!

வெற்றி இழந்தவரை ஊக்கப் படுத்துவோம்!

வெற்றிக் குழைப்போம் முயன்று.


மதுரை பாபாராஜ்

Vovkaniankrishnan: *

உரை நடையையே கவி நடையாக்கும் அற்புதத் திறன் தங்களுக்கே உரித்தானது.*

பிள்ளைகள்




 

S.கார்த்திகேயன்



 

தயாரிப்பாளர் S. கார்த்திகேயன் அவர்களுக்கு வாழ்த்து!

PRODUCER S.KARTHIKEYAN
A STONEBENCH PRODUCTION!

JIGARTHANDA XX

முன்னணியில் இங்கே படங்கள் வருவதற்குப்
பின்னணியில் உள்ளோர் தயாரிப்பா ளர்களே!
இந்த ஜிகர்தண்டா பானம் ருசியாக
வந்ததற்கு கார்த்திகேயன் ஆற்றலை வாழ்த்துகிறேன்!
செந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

சோம்பல் தவிர்


 சோம்பல் தவிர்!


எள்ளென்றால் எண்ணெயைத் தந்தால் சுறுசுறுப்பு!

எள்ளையே தேடித்தான் எள்ளிருந்தும் இல்லையே

எள்ளென்றால் சோம்பலின் உச்சமென்றே சொல்லவேண்டும்!

என்றுமே சோம்பல் தவிர்.


மதுரை பாபாராஜ்

நடிக்கின்றேன்


நடிக்கின்றேன்!


எந்தன் புறத்தோற்றம் ஒன்று! அகத்தோற்றம்

ஒன்று! இரண்டுமே வெவ்வேறாய் ஆனதால் 

இங்கேநான் வாழ்வில் நடிக்கின்றேன் நாள்தோறும்!

என்னைப்போல் எண்ணற்றோர் உண்டு.


மதுரை பாபாராஜ்

 

Saturday, November 18, 2023

ஒதுங்கிவாழ்தல் நல்லது

 ஒதுங்கி வாழ்தல் நல்லது!


அனைவரின் மீதும்நான் அக்கறை கொண்டே

அலைவதினால் எல்லோரும் என்னைத்தான் நாளும்

பலவகையில் தொந்தரவாய் எண்ணுகின்றார் பார்த்து!

வயதான காலம் ஒதுங்கித்தான் வாழ

முயற்சிகள் செய்தலே நன்று.


மதுரை பாபாராஜ்


வாழ்க்கையின் இருபக்கம்

 வாழ்க்கையின் இருபக்கம்!


என்னுடைய துன்பம் எனக்குப் பெரிதாகும்!

இன்பத்தின் சூழ்நிலையில் உள்ளவர்கள் ஏனிங்கே

என்னுடைய துன்பத்தில் பங்கேற்று வாடவேண்டும்?

இன்பமும் துன்பமும் வாழ்வு.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


மனதோடு வேலையில் ஈடு படுதல்
மிகவும் சவாலான ஒன்றாகும்! மேலும்
புரியவைத்துப் பாராட்டி நம்முடைய தேவைக்
குரியதை செய்யவைத்தல்  இங்கே மிகவும்
கடினமான ஒன்றே! உணர்.

மதுரை பாபாராஜ்

Friday, November 17, 2023

ஊடகவாதம் வீண்


புகழ்பெற்றோர் ஒன்றுசொன்னால் ஊடக வாதம் தொடங்கிவிடும்! 


இப்படிச் சொன்னாரோ? அப்படிச் சொன்னாரோ?

எப்படிச் சொன்னாரோ? என்றேதான் ஊடகத்தில்

உட்கார்ந்தே வாதங்கள் செய்யத் தொடங்கிடுவார்!

இக்கட்சி அக்கட்சி எல்லாமே தங்களின்

கட்சி நிலைப்பாட்டைச் சொல்லியே சென்றிடுவார்!

சொன்னதை ஏன்சொன்னார்? யாருமே சொல்லமாட்டார்!

இத்தகைய வாதங்கள் வீண்.


மதுரை பாபாராஜ்

 

திருமதி நிலமங்கை துரைசாமி


அம்மாவின் ஓவியம் அருமை!


நம்பிக்கை தேவைதான்! ஆனாலும் இவ்வளவு

நம்பிக்கை வேண்டுமா? கொக்கே! நுனிக்கொம்பில்

நிற்கின்றாய் பார்த்து கவனமாக நிற்கவேண்டும்!

கொம்பொடிந்தால் வீழ்வாய் உணர்.


மதுரை பாபாராஜ்

 

கடிவாளம்-- பிடிமானம்!

 கடிவாளம்-- பிடிமானம்!


கடிவாளம் இல்லாமல் தாறுமாறாய் ஓடும்

குதிரைபோல் வாழ்க்கை உருள்கின்ற போக்கில்

பிடிமானம் இன்றித்தான் வாழ்கின்றோம் நாங்கள்!

புதிரும் புரியவில்லை யே.


மதுரை பாபாராஜ்

Thursday, November 16, 2023

வீடே கதி!


வீடே கதி!


அங்குசெல்வோம்! இங்குசெல்வோம்! என்றே பரபரப்பாய்

எங்கெங்கோ சென்ற இளமைதான் போனதே!

எங்குமே செல்லப் பிடிக்காமல் வீட்டுக்குள்

தங்கும் முதுமையில் இன்று.


மதுரை பாபாராஜ்

 

பிடிவாதம் கேடு


 பிடிவாதம் கேடு!


OBSTINACY IS BAD!


முடக்குவாதம் பக்கவாதம் தீர்க்கலாம் இங்கே!

வறட்டுப் பிடிவாதம் தீர்க்கவழி இல்லை!

பகைவளர்க்கும் நோயே பிடிவாத மாகும்!

புகைச்சல் பிடிவாதம் கேடு.


மதுரை பாபாராஜ்

எல்லை உண்டு

 எல்லை உண்டு!


அள்ளி எறிகின்ற குப்பையாய் எண்ணுகின்றார்!

தள்ளும் கருவேப் பிலையாக எண்ணுகின்றார்!

எள்ளி நகையாடி வேடிக்கை பார்க்கின்றார்!

எல்லை எதற்குமே உண்டு.


மதுரை பாபாராஜ்


யாரைத்தான் நோவதோ?


யாரைத்தான் நோவதோ?


நாளும் அழுதழுது வாழவேண்டும் என்பதே

வாழ்வின் நிலையென்றால் என்னதான் செய்வது?

நேரத்தை நொந்துகொண்டு வாழ்வதே

வாழ்வாகும்!

யாரைத்தான் நோவதோ சொல்?


மதுரை பாபாராஜ்

 

Wednesday, November 15, 2023

வேடதாரி மாந்தர்கள்


வேடதாரி மாந்தர்கள்!


குற்றங் குறைகளைத் தாங்கள் சுமந்துகொண்டு

மற்றவரைப் பார்த்தேதான் ஏளனம் செய்கின்றார்!

இப்படி வாழ்பவர்கள் வேடதாரி் மாந்தர்கள்!

அற்பர்கள் என்றேதான் சாடு.


மதுரை பாபாராஜ்

 

பொம்மைகள்

 பொம்மைகள்!


மதுரை பாபாராஜ்-- பா.வசந்தா-- 

திருமதி. சி. பவானி


பொம்மை இரண்டாக நானும் மனைவியும்

இங்கே தனிமையில் நேரம் கழித்திருந்தோம்!

சம்பந்தி அம்மாவும் எங்களுடன் சேர்ந்ததால்

பொம்மைகள் மூன்றாகி நாங்கள் இருக்கின்றோம்!

அம்மா! தனிமையே வாழ்வு.


மதுரை பாபாராஜ்

நீரின்றி அமையாது உலகு


நீரின்றி அமையாது உலகு!


மேக வெடிப்பா திடீர்மழை கொட்டிவிடும்!

மேகமூட்டம் அங்கங்கே சாரல் மழையுண்டு!

மேகம் திரண்டுவந்தால் நல்ல மழைபெய்யும்!

மேகம் திரண்டதென்றே பார்த்தால் நகர்ந்துவிடும்!

ஆழியிலே தோன்றிப் பருவமழை பெய்துவிடும்!

ஈவிரக்கம் இல்லாமல் மாமழை பெய்வதுண்டு!

ஆயிரம் நன்மைகள் தீமைகள் உண்டெனினும்

நீரின் றமையா துலகு.


மதுரை பாபாராஜ்

 

Tuesday, November 14, 2023

தள்ளாட வைக்கும் தரைகள்


தள்ளாட வைக்கும் தரைகள்!


முன்பெல்லாம் வீட்டுக்குள் மண்தரை போட்டிருப்பார்!

ஒன்றும் வழுக்காது! ஊன்றி நடக்கலாம்!

இன்றோ வழுக்குகின்ற வண்ணத் தரைகள்தான்! 

நம்கால்கள் ஊன்றினாலும் நிற்காமல்

தள்ளாடும்!

இந்தத் தடுமாற்றம் ஏன்?


மதுரை பாபாராஜ்

 

நண்பர் சேதுமாதவன்


🙏நண்பர் சேதுமாதவன் அவர்களுக்கு வாழ்த்து!


நீலக் கடலுக  கடியிலே சிப்பிகள்

காணக் கிடைக்காத விண்மீன் வடிவத்தில் 

மீன்கள் அழகாக காட்சி தரவைத்தே

காலை வணக்கத்தைக் கூறிய நண்பரை

வாழ்த்தி மகிழ்கிறேன் இன்று.


மதுரை பாபாராஜ்

 

அம்மா வரைந்த ஓவியம்


அம்மா திருமதி நிலமங்கை துரைசாமி வரைந்த ஓவியம்!

அம்மாவுக்கு வாழ்த்து!

ஒற்றைக்கால் நின்று தவம்செய்யும் கொக்கினைப்

பற்றுடன் ஓவியமாய்த் தீட்டிய அம்மாவை

நற்றமிழால் வாழ்த்துகிறேன் இன்று.


மதுரை பாபாராஜ்

 

மாட்டின் முதுகில் பறவை!


மாட்டின் முதுகில் பறவை!


மாட்டின் முதுகில் பறவை அமர்ந்திருக்க

மாடும் சுமந்தேதான் அந்தப் பறவையுடன்

நாட்டு நடப்பை ரசித்தே நகர்ந்திருக்க

காட்சிகள் மாறிமாறித் தோன்ற விருட்டென்றே

வான்பரப்பில் அந்தப் பறவை பறந்ததே!

காணக் கிடைக்குமா? சொல்.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் திருமலை


நண்பர் திருமலை அவர்களுக்கு வாழ்த்துகள்!


வாய்ப்பினை ஆற்றலுடன் நன்கு பயன்படுத்தி 

நாடிப் படிப்பதற்குத் தூண்டும் தலைப்பிலே

ஆளுமை சிற்பியில் நண்பர் திருமலை

ஆர்வமுடன் கட்டுரை தன்னை எழுதுவதை

வாழ்த்துகிறேன் இங்கே மகிழ்ந்து.


மதுரை பாபாராஜ்