Tuesday, September 30, 2025
Monday, September 29, 2025
Sunday, September 28, 2025
இசையருவி சந்தோஷ் நாராயண்
இசையருவி
சந்தோஷ் நாராயண் அவர்களுக்கு வாழ்த்து!
மெய்மறந்து நாள்தோறும் வெல்லும் இசையமைக்கும்
பன்முக ஆற்றல் கடமை உணர்வுடன்
துள்ளித் தலையசைக்கும் பாங்கோ கவர்ந்திழுக்கும்!
நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Musical Stream – A Salute to Santhosh Narayanan!
Day by day, with inspired flame,
He weaves his music, conquering hearts—
A many-sided gift, with duty bound,
That makes us sway and smile in tune.
Like noble Tamil, may it live and last
For countless years to come!
—Madurai Babaraj
இனியவை நாற்பது வாழ்த்துப்பா
இனியவை நாற்பது வாழ்த்துப்பா!
இனியவை நாற்பதை
இன்பப்பா ஆக்கிய
கனிவான கவிஞர்
மதுரை பாபாராஜ்
கருத்தான நாற்பதை
கவின்மிகு நடையில்
பொருளின் மேன்மையை
பொருந்தக் கூறினார்
இன்றைய தலைமுறை
இனிதேப் படிக்க
வென்றிடும் தமிழில்
பயன் செய்தார்
வாழ்க அவர்தம் பணி
வளர்க அவர்தம் முயற்சி
கவிஞர் கா. செல்வராசு
கேளம்பாக்கம்
வள்ளுவர் குரல் குடும்பம்
மிக்க நன்றி
அருமையான கவிதை.
செந்தமிழ்ப் பாதந்த செல்வராசு பாவலர்
வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
Saturday, September 27, 2025
மணிவிழா ஆண்டு வாழ்த்து
வாழ்த்துகிறோம்!
மணிவிழா ஆண்டு 2025
திரு & திருமதி கிருஷ்ணமூர்த்தி
அவர்களுக்கு வாழ்த்து!
இந்திய நாட்டின் இராணுவத்தில் தொண்டாற்றி
கண்ணுங் கருத்துமாய் நாளும் கடமைகள்
பண்புடனே செய்தேதான் பக்குவம் ஆகிவிட்டார்!
வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
பண்பாளர் பாவலர் நாளும் உடற்பயிற்சி
தன்னைத் தவறாமல் செய்யும் முயற்சியுண்டு!
புன்னகை ஏந்தும் முகத்திலோ மீசையோ
கண்டாலே அச்சுறுத்தும்! ஆனால் பழகினாலோ
அன்பில் நெகிழவைக்கும் நண்பராவார்! அன்பராவார்!
வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
மணிவிழா ஆண்டில் மகத்தாக வாழ்க!
குடும்பத்தார் சூழ குதூகலமாய் வாழ்க!
நிறைவுடன் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்
ChatGPT
Diamond jubilee 2025
Greetings to
Mr. & Mrs. Krishnamoorthy!
Serving the Indian Army with steadfast eyes and mindful heart,
He bore his duties with discipline and grace,
Ripened in wisdom, seasoned in service,
May he flourish for countless years like radiant Tamil verse!
A noble soul, a poet at heart,
Never missing his daily exercise with will and care,
That smiling face—framed with a bold moustache—
May seem stern at first, yet when you know him,
He melts with love, a true friend, a cherished companion!
May he flourish for countless years like radiant Tamil verse!
On this jubilee day, may joy surround you,
May family gather in harmony and delight,
May life be full, abundant, and bright—
Live on for countless blessed years!
Madurai Babaraj
Vasantha
& Family
Friday, September 26, 2025
இருளை நீக்கு
*இருளான தீயபண்பை ஓட்டி
மிகவும்*
*அருளான நற்பண்பு கொள்.*
தென்.கி.
நமது சுவாமிநாதன் ஐயாவும்
நமது பாபாராஜ் ஐயாவும்
மற்றும் பல கவிவாணர்களும்
இத்தளத்தில் பதிவிடுவது
சங்கப்பலவையாக வுள்ளது.
வேறெந்த தளத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு.
இதனையே நம் குரல் குடும்பம் தேர்வு செய்து நூலாக்கினால்,தலைமுறை தாண்டியும் வாழும் நம் குடும்பம்.
நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் என்பார்கள்.
நம் குடும்பம் பலதரப்பட்ட தகவல்கள்கொண்ட அறிவுக் களஞ்சியம்.
தென்.கி.
Wednesday, September 24, 2025
திருக்குறள் சிறுவர் பாடல் வெளியீடு
இப்படிப் பார்ப்பதே கண்கொள்ளாக் காட்சியாகவுள்ளது.தள்ளாத வயதிலும் தமிழன்னைக்கு மகுடம் சூட்டும் வகையில் நூல் வெளியிடுவது வெகு சிறப்பு.
வாழ்க பல்லாண்டு பல்வளத்துடன்.
தென்.கி 24-09-2025
தாய்த்தமிழின்பால் தனியாக காதலும், வள்ளுவத்தின்பால் வசீகரமான காதலும்,
இல்லத்தரசின்பால் இனிமைமிகு காதலும்
நட்பு பாராட்டுவதில் நயமான காதலும்,
நமது பாபாராஜ் ஐயாவின் எண்ணற்ற படைப்புகள்.
பண்மொழி வித்தகரின்
படைப்புகள் தொடரட்டும்🙏🙏
நேர மேலாண்மையை நெறிப்படுத்தும் திறனை உங்களிடம் இருந்து நமது வள்ளுவர் குரல் குடும்ப நட்பு வட்டம் இனிதே பெற்றுக்கொள்கிறோம் ஐயா.🙏😊
Tuesday, September 23, 2025
இல்லறத்தின் கேடு
இல்லறத்தின் கேடு!
ஆண்களோ பெண்களோ வில்லங்கம் ஏற்படுத்திக்
கோணலாக்கி வாழ்விலே நிம்மதியைப் பந்தாடி
வேண்டுமென்றே வீட்டின் அமைதியைச் சிக்கலாக்கிச்
சீண்டுவோர் இல்லறத்தின் கேடு.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Ruin of Wedded Life!
When men or women stir up strife,
Twisting peace in home and life,
Deliberately sowing storms of discord,
They are the ruin of household accord.
— Madurai Babaraj
நெருடலில் வாழ்க்கை
நெருடலில் வாழ்க்கை!
இருப்பதா? இல்லை இறப்பதா? என்ற
நெருடலில் வாழ்கிறேன்! வாழ்வில் விரக்தி
வருடத் துடிக்கிறேன் நாள்தோறும்! என்று
தணியுமோ இந்த நிலை?
மதுரை பாபாராஜ்
Meta AI
"Life's dilemma! To be or not to be,
A question that haunts, a constant plea.
Frustration festers, day by day,
When will this plight fade away?
In life's labyrinth, I search for a way."
Monday, September 22, 2025
இருளாகிப் போகும்!
இருளாகிப் போகும்!
அகமெல்லாம் வஞ்சகம் தேக்கியே நாளும்
புறமெல்லாம் வேடங்கள் போட்டே நடிக்கும்
மனங்கொண்ட மாந்தர்கள் வாழ்க்கையோ இங்கே
இருளாகிப் போகும் உணர்.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Darkness it becomes!
When hearts are filled with cunning and deceit within,
When faces wear masks and roles without end,
The lives of such men, though they strut in the day,
Shall sink into darkness—remember this way.
—Madurai Babaraj
உளைச்சலின்றி வாழ
உளைச்சலின்றி வாழ!
ஒருபக்கம் என்னை மதிப்பாரும் இங்கே
ஒருபக்கம் என்னை மிதிப்பாரும் உண்டு!
இரண்டையும் ஏற்றுப் பொறுமையுடன் வாழ்ந்தால்
உளைச்சலின்றி வாழலாம் நம்பு.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Live without distress!
Some will respect me with honor in this world,
Some will despise me and trample me low!
If I embrace both with patience and calm,
Life can be lived, free from distress.
— Madurai Babaraj
Sunday, September 21, 2025
பொய்யன்பை நம்பாதே
[22/09, 08:20] Vovkaniankrishnan:
_உங்கள் பணியோ ஒரு வீட்டையே கட்டுவது.ஆனால் என் பணியோ அதற்கு வெள்ளை அடிப்பது மட்டுமே.படைப்பவனே பெரியோன்.நானோ சிறியன்.ஆனால் அன்பானவன்.உங்களைப் போன்ற பெரியோர்களை உயிரெனக் கருதுபவன்.வாழும் காலம் குறைவு.எனவே இணைந்து வாழ்வோம் நினைந்து..தென்.கி_
[22/09, 08:32] Madurai Babaraj:
உங்கள் நட்பு அகநக நட்பு. நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்.
Saturday, September 20, 2025
Friday, September 19, 2025
Wednesday, September 17, 2025
வாய்ப்பளித்துப்பார்
வாய்ப்பளித்துப் பார்!
யாரிடத்தில் என்னென்ன ஆற்றல்கள் எப்படி
வேரோடி உள்ளதென்று யாரறிவார்? வாய்ப்பளித்தால்
பார்போற்ற காட்டி வியக்கவைத்தே முன்னணியில்
சாதிப்பார்! வாய்ப்பளித்துப் பார்.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Give a Chance!
Who can ever know what hidden powers,
what deep-rooted strengths lie in a heart?
When given a chance, they’ll rise, unfold,
astonish the world, and lead from the front!
So—give a chance, and see!
—Madurai Babaraj
வாய்ப்பில்லா மையால் பலருயர்வ
தில்லையே
வாய்ப்பளியுங் கள்திறன் கண்டு.
தென் கி


















































