Friday, May 31, 2024

Fenner Marisamy


 பென்னர் நண்பர் மாரிசாமி அனுப்பியதற்குக் கவிதை!


கரும்பை உடைக்கலாம் இல்லை நசுக்கிப்

பிழியலாம் இல்லை கசக்கலாம் இல்லை

அடித்துத் துவைக்கலாம் இப்படிச் செய்தும்

இனிமை தருவதே அந்தக் கரும்பு!

மனிதருள் நல்லார் உறவும் கரும்பாய்

இனிக்குமே எப்படியும் இங்கு.


மதுரை பாபாராஜ்

நண்பர் இசக்கிராஜன்


 நண்பர் இசக்கிராஜன் அவர்களுக்கு வாழ்த்து!


படித்தேன்! முடித்தேன்! படித்தேன் குடித்தேன்!

படிக்கப் படிக்கப் படிக்கத்தான் தூண்டும்!

நெறிகள் விளக்கம் அருமை! புதுமை!

தெறித்த கருத்தில் தெளிவின் வெளிச்சம்!

நிறைவான நூலினை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

Thursday, May 30, 2024

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


எண்ணத்தால் மட்டுமல்ல மற்றும் அதைத்தொடர்ந்து
செய்யும் செயல்களாலும் நம்பிக்கை ஈட்டலாம்!
என்றும் நடைமுறை யாக தரமாக
நன்முறையில் நேரம் செலவழிக்க முன்வருக!
ஒவ்வொரு நாளும் முயல்.

மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


எப்போதும் உங்களை மற்றவரைப் பார்த்தேதான்
ஒப்பிட வேண்டாமே! நேரம் அமைதியும்
கட்டாயம் வீணாகும்! நீங்கள் தனித்துவம்
மிக்கவர் மற்றும் சிறந்தவர்  நீங்களிங்கே
எங்கிருந்த போதிலும் நன்றாய்ச் செயல்படுங்கள்!
உங்களுக்கு நீங்கள் நிகர்.

மதுரை பாபாராஜ்

Wednesday, May 29, 2024

G. கார்த்திக் சுப்பாராஜ்


 

திருமணநாள் 50 ஆவது ஆண்டு

29.05.2024
ஐம்பதாவது மணநாள் ஆண்டு


*கவிஞர் பாபா அம்மா வசந்தா பொன்விழா ஆண்டு திருமண வாழ்த்து!*

இல்லறத்தின் இலக்கணத்தை
இன்புற்று கடைபிடித்து
இல்லறத்தை நல்லறமாய்
இயல்பாக நடத்திவரும்
வாழ்விணையர் கவிபாபா
அவரிணையர் அம்மாவசந்தா
வாழ்வாங்கு வாழ்கவென
வாழ்த்துகிறேன் நெஞ்சார
இருமனம் இணைந்த
திருமண நன்னாளாம்
பொன்விழா ஆண்டில்
பல்லாண்டு வாழ்கவென!

கோ.இமயவரம்பன்
29.05.2024

மணநாள் வாழ்த்துப்பா உவந்தளித்த நண்பர் இமயத்திற்கு நன்றி!

உள்ளத்தில் ஊறிவந்த தேனமுதச் சொற்களைத்
தெள்ளுதமிழ்ப் பாவாக்கி வாழ்த்தி மகிழ்ந்திட்ட
வெள்ளைமன நண்பர் இமய வரம்பனுக்கு
நன்றி நவில்கின்றேன் இன்று.

மதுரை பாபாராஜ்

வாழ்த்துகள் ஐயா.  வாழிய பல்லாண்டு வளம் அனைத்து ம் பெற்று.. 
ப. திருமலை, மதுரை

VOV வாழ்த்துகள்

IG CHANDRSEKAR (RTD)

வணக்கம்..

பாரதிதாசனின், மணவழகனார் - தங்கம் அம்மையார் இனையரைப் போல்,

புதுமைப்பித்தனின், பிரமநாயகம் பிள்ளை - செல்லம்மாள் இனையரைப் போல்,

முதிர்ந்த காதல் வாழ்விற்கு இலக்கணமாய் வாழ, இதயம் நிறை வாழ்த்துகள்..

💐💐💐💐💐

பொன்விழா காணும்  பாபாராஜ் அய்யா தம்பதியருக்கு  எங்களது மனம் நிறைந்த வாழ்த்துகள் .

ஹெலினா கிறிஸ்டோபர்
பொன்விழா - திருமண நாள் வாழ்த்துகள் ஐயா. நலமும், வளமும் பெற்று பல்லாண்டு, பல்லாண்டு வாழ்க.🙏
Stalin Ramakrishnan

விரைவில் பொன்விழா கொண்டாட இருக்கும் ஐயா அவர்களுக்கும், அவரது துணைவியாருக்கும் பல்லாண்டு பல்லாண்டு வா வாழ்த்துகள்.🙏🙏🙏🙏
Krishnamoorthy ramanujam

பொன்விழா காணும் மதுரை பாபாராஜ் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றேன்!
Kavignar iravakabilan

Happy to note this. Wish you to recover from the current difficult situation. Wish to see your wife back in action with good health. 
Ponrajan

Golden Jubilee wedding anniversary wishes Naina 💓💞 Amma
Ramya narayanan
அன்பர்க்கு
நலம்மிகு நல்வாழ்த்துகள். இன்று தம்பதியர் தினம் ஆகவே நல்ல வாழ்நாள் தம்பதியர்க்கு மீண்டும் நல்நாள் நல்வாழ்த்துகள். 
தம்பதியர் வாழ்க பல்லாண்டு  நம் வள்ளுவன் வகுத்த வழியில். 💐⭐️🎊🎉🥮🙏
Duraisamy thiryvasagam, Vizag

Happy Anniversary naina & bedhi 🙏🏻
Need your blessings always 🙏🏻🙏🏻
Aarthi govind

My hearty prayers for the wellbeing of akka and this divine couple🙏🙏🙏🙏🙏 kindly shower your blessings on us Bhava and akka🙏🙏🙏💐💐💐💐
Uma Ramkumar

Happy wedding anniversary to both of you and God bless you
Malliga gajaraj

DrSethu: 
தங்க மணநாள் ஆண்டு விழா கண்டு மகிழும் தங்கதம்பதியற்கு இனிய மணநாள் வாழ்த்துக்கள் .நலேமே பெருகட்டும்.
Madurai Babaraj: குழந்தை மருத்துவரின் வாழ்த்திலே நாங்கள்
உவகை அடைகிறோம் இன்று.

மதுரை பாபாராஜ்
வசந்தா

DrMallikagovindababu: 
Happy 50th Wedding day, dear Anna & Vathinai💐💐💐💐💐
 Wishing you both many more happy healthy peaceful years together 🍭🌹🎂🍬

💐💐Congratulations Anna and Vadhinai. So happy to know that you are stepping into your  50th year of Wedding 
Wishing you both many many years togetherness with good health and lots of happiness.
Kala navaneethan

💐💐Happy 50th Wedding Anniversary. Wish you many more happy returns of the day
God bless🙏🙏
Rajaram

Hearty congratulations  Anna and  vadhinai. Great you are  celebrating  the beginning of your 50th wedding anniversary. May God bless you Abundantly to celebrate many more  anniversaries together with good health and happiness. 💐💐👏👏👌

Jeyasaraswathi

Many more happy returns of the day
Santhanam sambandhi,Madurai

Dear Mama and Athai , Wishing you both many more happy returns of the day.
Narayanan blr

Congratulations mama ❤️ 💐
J Govind

தங்கள் ஐம்பதாவது ஆண்டு திருமண விழா அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் அந்த திருமண நாள் என்றும் நமது மனதை விட்டு அகலாது மிக்க மகிழ்ச்சி தாங்கள் நீடூழி வாழ நானும் என் குடும்பத்தாரும் உளமாற வாழ்த்துகிறோம் நிடூழி  வாழ்க பல்லாண்டு

LRC Madurai

வணக்கம்
 அம்மா அப்பா.
*"அன்பும் அறமும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது "*
என்னும் குறள் நெறிக்கேற்ப வாழ்ந்து வரும்
உங்கள் இருவருக்கும் *இனிய 50 வது(பொன் விழா ஆண்டு)திருமண நாள்* *நல்வாழ்த்துக்கள்.*
 நீண்ட காலம் ஆரோக்கியத்துடனும், மன மகிழ்ச்சியுடனும் வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறோம்.

அன்புடன் 
செந்தில் குமார் 
அகிலா 
*பேரன்*
பரத் குமார் 
தருண் குமார்
 மகிழ்வுடன்
மனதார வாழ்த்துகிறோம்
நீடூழி வாழ்க என்று
வணங்கி
வேண்டிக் கொள்கிறோம்
மதுரை
மு.முருகேசன் 
குடும்பத்தார்
🪻🪻🙏🪻🪻
[29/05, 08:29] Murugu: மண நாள் பொன்விழா மலரும் ஆண்டில்
இன்னும் பல்லாண்டு வாழ வேண்டும்.
🪻🪻🙏🪻🪻
Many happy returns of the day, Sir. 💐💐💐
Rajkumar jothi

Valthukal Appa
Valli

50 th Yr super naina 👏👏👏👏
Anu

Happy anniversary ❤️🙏🏻
Ashraff wife

Happy anniversary thatha and paati🥳🥳🥳
Barath kumar

எல்லா மங்கல நாணும் பொன்னால் ஆனவையே!
ஆனால் பொன்விழா காண்பது அவற்றில் சிலவே! பொன்போல மனமும், பூப்போல மணமும் கொண்டால், பொன், விழாக் காணும்! இறையருளே, விழா விழாமல் காக்கும்! பாபாராஜ்,அவர் மனம் நிறைந்த இராணி!
பல்லாண்டுகள் மன நிறைவோடு, வாழ்க! வளர்க! இறை அருள்க!

VOV Swaminathan swaminathan

Superb Mama,
Delayed wishes mama.

May all your wishes, dreams and efforts brings success with showers of god's blessings mama.

May your blessings will bring wisdom and knowledge to us.

Happy Wedding Anniversary Mama and Athai.

 B.Rohini Dindugal

விரக்தியில் வாழ்வு

 விரக்தியில் வாழ்வு!


தொடங்குகின்ற புள்ளி தவறாக வைத்தால்

தொடர்கின்ற புள்ளிகள் தப்பாகிப் போகும்!

உளைச்சல் கிடங்காய் மனம்மாறிப் போகும்!

விரக்தியில்  வாடுமே வாழ்வு.


மதுரை பாபாராஜ்

Monday, May 27, 2024

மதிப்பிற்குரிய ஆர. மணிமோகனார்


 VOV.

திரு.ஆர். மணிமோகன் அவர்களுக்கு வாழ்த்து!


சாய்வுநாற் காலியில் கையில் இதழுடன்

ஓய்வாய்ப் படிக்கும் மணிமோக னாருக்கு

ஆழ்மன அன்புடன் வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

Saturday, May 25, 2024

தென்காசியில் வள்ளுவர் குடும்பம்



 வள்ளுவர் குரல் குடும்ப அரங்கம்!


வள்ளுவப் பாதையோ சிங்கத்தின் பாதையாம்!
தெள்ளத் தெளிவாக வள்ளுவத்தின் தூதர்கள்
அள்ளி வழங்கும் அமுத உரைகளை
உள்ளம் ரசிக்கும் உவந்து.

மதுரை பாபாராஜ்

தென்காசியில் வள்ளுவர் குடும்பம்


 வான்மழையும் வள்ளுவச் சாரலும் தென்காசி

மாநகரில் தேன்மழை யாய்ப்பெய்யும் காட்சியின்

காட்சியைக் கண்டோம் ரசித்து.

மதுரை பாபாராஜ்

Friday, May 24, 2024

நண்பர. பன்னீர் செல்வம்


 நண்பர் பன்னீர்செல்வம் அனுப்பியதற்குக் கவிதை!


கோப்பைக் குளம்பியும் காலை வணக்கமும்

ஆக்கபூர்வ  உற்சாகம்  ஊற்றெடுக்க வந்தது!

ஊக்கத்தைத் தந்தவரை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

வசந்தாவும் பனிக்குழைவும்





 சுபா


எழுவருடன் எட்டாக அம்மா சுவைத்தே

அழகாய் பனிக்குழைவை உண்கிறாள்! ஆகா!

சுபாவும் ரசிக்கின்றாள் பார்த்து.


மதுரை பாபாராஜ்

Thursday, May 23, 2024

இன்று எனக்கு! நாளை உனக்கு!

 இன்று எனக்கு! நாளை உனக்கு!


இன்றிருப்போர் நாளையில்லை என்றிருக்கும் வாழ்க்கையில்

என்னென்ன ஆட்டங்கள்! என்னென்ன ஆசைகள்!

எல்லாமே தூசிகளாய்க் காற்றில் மறைந்துவிடும்!

இன்றெனக்கு! நாளை உனக்கு.


மதுரை பாபாராஜ்

Wednesday, May 22, 2024

பேரன் ஆதித்யா அம்மா


 பேரன் ஆதித்யா அம்மா அனுப்பிய படத்திற்குக் கவிதை!


19 ஆம் நூற்றாண்டு!


மேசையில் சாப்பாடு உண்டு! குடும்பத்தார்

பூசை மனத்தால் வழிபட்டே உண்பார்கள்!

பாசமுடன் உண்பார்கள் பார்த்து.


21 ஆம் நூற்றாண்டு!


மேசையில் சாப்பாடு உண்டு! குடும்பத்தார்

ஆசையாய்க் கைபேசி தன்னிலே கண்களைப்

போகவிட்டு சாப்பாடு தட்டில் இருக்கவே

வேகமாக உண்பார் எழுந்து.


மதுரை பாபாராஜ்

மருமகள் ரோகிணி பூபாலன்


 

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில் புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


சரியான நேரத்தில் மற்றும் இடத்தில்
தெளிவாய் நமக்கிங்கே தேவையாய் உள்ள
எதையும் தருவதில் நாளும் இயற்கை
வலிமையாய் உள்ளது! ஏற்றேதான் வாழ்வோம்!
மகிழ்ந்திருப்போம் மற்றும் மகிழ்ச்சி பரப்பு!
இயற்கைத் துணையுடன் வாழ்.

மதுரை பாபாராஜ்

Tuesday, May 21, 2024

கலங்கும் நெஞ்சம்


 

Sunday, May 19, 2024

நண்பர் k.p. கண்ணன் சவுதி அரேபியா


 நண்பர் கே.பி. கண்ணன் அவர்களுக்கு வாழ்த்து!


அரபுநாட்டில் வாழ்ந்தாலும் நட்பின் மகிழ்வைச்

சுரக்கும் அணுகுமுறை வாழியவே! காலை

வணக்கத்தை நாளும் தவறாமல் சொல்லும்

மனங்கொண்ட கண்ணனை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

பாவலர் தமிழ் இயலன் ஐயா


 பாவலர் தமிழ் இயலன் ஐயா அவர்களுக்கு வாழ்த்து!


தூய தமிழின் பயிலரங்கந் தன்னிலே

பாவலர் ஆசான் தமிழியலன் பேசுகின்றார்!

நாவலரை நற்றமிழால் வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

Saturday, May 18, 2024

ஏர்வாடியார்


 இன்று அகவை 77 காணும் பாவலர் ஏர்வாடியார்

வண்டமிழ்போல் வாழ்க!


அகவைத்திருநாள்: 18.05.24


வங்கிப் பணியிலே சாதனை நாட்டிய

வண்டமிழ்ப் பாவலர் ஏர்வாடி யார்வாழ்க!

பண்பாளர் புன்னகை ஏந்தும் கவிமுரசு!

தண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்


Wednesday, May 15, 2024

நடிகர் சௌந்தரராஜா


 நடிகர் சௌந்தர ராஜாவுக்கு வாழ்த்து!


முப்பத்து ஏழாம் திரைப்படத்தில் தோன்றித்தான்

இப்புவியில் சாதித்த சௌந்தர ராஜாவின்

அற்புத ஆற்றலை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

நண்பர் முரளி



 நண்பர் முரளி அனுப்பியதற்குக் கவிதை!


மரங்கள் நிறைந்திருக்கும் பூங்காவில் ஓய்வாய்ச்

சிலநேரம் உட்கார சாய்வாய் அழகாய்

மரத்தாலே ஆன இருக்கை இருக்கும்

பலர்வருவார் என்றேதான் பார்த்து.


காலை வணக்கத்தை அன்புடன் தந்தவரை

நாளும் வாழ்கவென்றே வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

Sunday, May 12, 2024

திருமண வாழ்த்து


 

Saturday, May 11, 2024

நண்பர் முரளி


 நண்பர் முரளி அனுப்பியதற்குக் கவிதை!


வெண்கோப்பை ஏந்தும் குளம்பியுடன், வெண்புறா 

நின்றிருக்க வானொலி நீலமலர் பூத்திருக்க

நண்பரின் காலை வணக்கம் அனுப்பினார்!

நன்றி நவில்கின்றேன் இன்று.


மதுரை பாபாராஜ்

Friday, May 10, 2024

வாழ்வோம் உழன்று


 வாழ்வோம் உழன்று!


சுற்றாத கோயிலில்லை! கும்பிடாத சாமியில்லை!

பக்தியில்  யார்க்கும் சளைத்ததில்லை! ஆனாலும்

சிக்கல்கள் சுற்றித்தான் பின்னி வருகிறதே!

முற்பிறவி செய்த வினையென்பார் நம்பமாட்டேன்!

நல்லது என்றால் கடவுளருள் என்கின்றார்!

கெட்டது என்றாலோ உன்வினை என்கின்றார்!

இப்படியும் வேண்டாமே! அப்படியும் வேண்டாமே!

எப்படியோ வாழ்வோம் உழன்று.


மதுரை பாபாராஜ்

Thursday, May 09, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


எதிர்காலந் தன்னிலே திட்டமிடல் மற்றும்
செயல்படுத்தல் என்பதைக் காட்டிலும்  உங்கள்
உளத்தில் அமைதி கிடைத்திட வைத்தல்
அவசிய முக்கியம் சூழலை ஏற்கும்
நிலையெடுத்தல் என்றே உணர்.

மதுரை பாபாராஜ்

Tuesday, May 07, 2024

ஒழுக்கமே வாழ்வு


 ஒழுக்கமற்ற வாழ்வும் புதைமணலில் சிக்குவதும் ஒன்று!

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில் புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


தொடர்ச்சி பொறுப்புணர்ச்சி இந்த இரண்டும்
இலக்கைச் சவால்களிலும் மற்றும் கடினம்
நிறைந்திருக்கும் சூழலிலும் சாதிக்க இங்கே
உதவும்! அவைகள் கவனமுடன் நாளும்
செயல்படவும் வைக்கும் உணர்.

மதுரை பாபாராஜ்

Sunday, May 05, 2024

நண்பர் ரவி


 குறும்பா வேந்தர் ரவி!


நாவலர் பாவலர் முத்தமிழின் காவலர்!

பாசமிகு நண்பர் ரவி.


மதுரை பாபாராஜ்

Saturday, May 04, 2024

நண்பர் முரளி


 நண்பர் முரளி அனுப்பிய படத்திற்கு வாழ்த்து:


பூவுக்குள் பூகண்டேன் 

நட்பின் மணம்கமழ்ந்த

காலை வணக்கத்தை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்


Friday, May 03, 2024

நண்பர் திருமலை


 நண்பர் திரு.ப.திருமலை அவர்களுக்கு வாழ்த்து!


படிப்பாற்றல் - எழுத்தாற்றல்- படைப்பாற்றல்- பேச்சாற்றல்

நட்பாற்றல்-உழைப்பாற்றல்- 

பண்பாற்றல்!


திருமலையில் உள்ளதோ ஏழுமலை! இந்தத்

திருமலைக்குள் ஏழாற்றல் உள்ளதைக் கண்டேன்!

எழுத்தாற்றல் மற்றும் படிப்பாற்றல் நல்ல

படைப்பாற்றல் பேச்சாற்றல் நட்பாற்றல் மற்றும்

உழைப்பாற்றல் பண்பாற்றல் என்றேதான் ஏழு

மலையாற்றல் கொண்டவரை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்


காலமாற்றம்- கோலமாற்றம்

 காலமாற்றம்-கோலமாற்றம்!


நாளெல்லாம் கட்டிலிலே நான்படுப்பேன்! என்வசந்தா

காலடியில் நாளும் படுத்திருப்பாள்! காலமோ

நாள்தோறும் என்வசந்தா காலடியில் நான்படுக்க

நாளெல்லாம் கட்டிலிலே தான்படுக்கும் கோலமேற்றாள்!

காலமிங்கே செய்தகோலம் இஃது.


மதுரை பாபாராஜ்

Thursday, May 02, 2024

மருமகன் ரவி


 மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


எல்லோரும் வேறு மொழிகளில் பேசினாலும்
கள்ளமின்றி வாய்திறந்து நாமோ சிரிக்கையிலே
உள்ளங் கவரும் ஒலிகளில் வேறுபாடே
இல்லை உணர்ந்தாயா? இங்கு.

மதுரை பாபாராஜ்

நண்பர் எழில் புத்தன்


 நண்பர் எழில் புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


எண்ணம் சிறியதோ இல்லையிங்கே எங்கிருந்தோ
வந்த பொறியோ அதனை முறையாக
நம்முள்ளம் கையாண்டால் ஏராள அற்புதங்கள்
உண்டாகும்! நல்லநல்ல எண்ணங் களையென்றும்
பின்பற்றி வாழ்தல் சிறப்பு.

மதுரை பாபாராஜ்

Wednesday, May 01, 2024

நண்பர் முரளி



 நண்பர் முரளி அனுப்பியதற்கு வாழ்த்து!


கோப்பைக் குளம்பி குடித்தோம் மகிழ்ந்தோம்!

காலை வணக்கத்தை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்