Monday, September 30, 2024

அமைச்சரவை மாற்றம்


 

Sunday, September 29, 2024

வள்ளுவ உடைமைகளே உடைமை


 

குறளுக்கு சர்பத்


 குறள்களைச் சொன்னால் சுவைநீர் கிடைக்கும்!

சிறப்பான தொண்டு குறள்தொண்டே என்று

நிறைவுடன் செய்கின்றார் வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

Saturday, September 28, 2024

கீழடி சங்கநாதம்


 

தமிழியலன் ஐயாவுக்கு வாழ்த்து 30.09.24


 

இருநிலையே வாழ்வு


 

நண்பர் ஜெயராமன்




 நண்பர் ஜெயராமன் அனுப்பிய காணொளிக்குக் கவிதை!


(நண்பர் தென்காசி கணியன் கிருஷ்ணன் தூண்டுகோல்!)


முதுமை வருடும் பறவை களுக்கு

இளமை வருடும் பறவை உணவை

உளமார ஊட்டி மகிழுகின்ற காட்சி!

இவைகளோ பள்ளிக்கோ கோயிலுக்கோ சென்று படித்து வணங்கவில்லை! உள்ளுணர்வு உந்த

வளர்த்தபாசம் நன்றி மறவாமை என்றே

உயர்தரப் பண்பின் இலக்கணமாய் இங்கே

இயற்கைதரும் செய்தியைப் பார்.


மதுரை பாபாராஜ்

Thursday, September 26, 2024

சிக்கலின் அளவுகள்


 

Wednesday, September 25, 2024

இருவருக்கு வாழ்த்து


 சத்தியப்பிரியா& உஷா

இருவருக்கும் வாழ்த்து!


யானையைச் சுற்றி அழகான வண்ணத்தில்

கோலமிட்டார் ஆர்வ முடனே இருவரும்!

வாழ்க வளர்க மகிழ்ந்து.


மதுரை பாபாராஜ்

Tuesday, September 24, 2024

சருகும் கணக்கிறதே


 

வாழ்க்கை நிலையில்லை


 

Monday, September 23, 2024

நன்னெறி விலகாதே


 

Sunday, September 22, 2024

மகிழ்ச்சியான ஏமாற்றம்


 

Saturday, September 21, 2024

பேத்தி சுபாதேவியின் நன்றி

தாத்தா தெய்வத்திரு முத்துசுப்பு அவர்களுக்குப் பேத்தி 

R. சுபாதேவியின் நன்றி!


புற்றுநோய் பாதித்த மாந்தருக்கு நாள்தோறும்

அக்கறையாய்ச் சாப்பாடு தந்தேதான் தொண்டாற்றும்

பண்பில் மனிததேயச் சிந்தனையைப் போற்றுகின்றார்!

வண்டமிழ்போல் வாழியவே தொண்டு.


நம்மால் இயன்றதைச் செய்தல் கடமையாம்!

அன்புடன் மாசின்றி இத்தகையோர் 

உள்ளங்கள்

என்றும் குளிரவேண்டும் இங்கு.


மதுரை பாபாராஜ்

வசந்தா










 

நாமே பொறுப்பு



 

Friday, September 20, 2024

அப்பாவின் பிறந்தநாள்


 வணக்கம் பாபா.
தங்களின் தந்தை குறித்து ஒரு பதிவு 21-9-24 அன்று செய்திருந்தேன். அந்த பதிவு தங்களை வந்து சேரவில்லை என கருதுகிறேன். தங்களின் தந்தை ஓர் சிறந்த பெரிய மனிதர். அவரின் ஆசி எனக்கும் உண்டு. அவராகவே எனக்கு பென்னரில் சேர ஒரு வாய்ப்பு தந்தவர்.ஆசிரியப் பணியில் நாட்டம் இருந்ததால் அவரின் உதவியைப் பெற முடியவில்லை.
அவர் மீது எனக்கு எப்போதும் நன்றியும் மரியாதையும் உண்டு.

தம்பா
KRS KARAIKUDI

Wednesday, September 18, 2024

மகள் R.சுபாதேவி


 

மகள் R.சுபா அனுப்பிய படத்திற்குக் கவிதை!


மேகங்கள் கூட்டத்தில் செங்கதிரோன் மாலையில்

ஆவலுடன் உள்ளே வெளியே விளையாடும்

காட்சியைக் கண்டேன் ரசித்து.


மதுரை பாபாராஜ்

Tuesday, September 17, 2024

நன்னெறி நழுவாதே


 

கோப்பைக்குள் நாய்க்குட்டி



 

Monday, September 16, 2024

செல்வி சத்யப்பிரியா


 செல்வி சத்யப் பிரியாவின்கை வண்ணம் இன்று.

17.09.24

மலர்கள் இலைகள் பறவைகள் மற்றும்

விளக்குடன் கோலம் அழகாக வாசல்

வரவேற்க வண்ணமயந் தான்.


மதுரை பாபாராஜ்

மூடநம்பிக்கை


 

Sunday, September 15, 2024

புரியாப் புதிர்


 

பெற்றோரை அழவைக்காதே

 பெற்றோரை அழவைக்காதே!


பெற்றோரை வாழவைத்துப் பார்க்கின்ற பிள்ளைகள்

இத்தரணி போற்ற மகிழ்ச்சியாய் வாழ்வார்கள்!

பெற்றோரை நாளும் அழவைக்கும் பிள்ளைகள்

எத்தகையோர்  என்றாலும் தூசு.


சொல்ல முடியாத துன்ப துயரங்கள்

எல்லை களைமீறிச் செல்லும் பொழுதிலே

உள்ளம் துடிக்கிறது! கண்ணீர் வழிகிறது!

துள்ளித் துவள்கிறது நெஞ்சு.


மதுரை பாபாராஜ்

நிக்கில் நண்பன் சரண் புதுமனை புகுவிழா

 புதுமனை புகுவிழா வாழ்த்து!


இடம் படூர் நாள்: 15.09.24


பெற்றோர் 

அப்பா: திரு.கணேசன்

அம்மா: திருமதி G. விமலா


நண்பன் சரண் சுப்ரபாத்!


அக்கா: ஜோஷிதா


குறள்நெறி போற்றிக் குடும்பத்தார் சூழ

சிறப்புடன் வாழ்கபல் லாண்டு.


புதுவீடு கட்டிக் குடிபோகும் நீங்கள்

எடுப்போடு வாழ்க எழுச்சியுடன் வாழ்க!

புதுப்பொலிவு மங்கலம் நாளும் பெருக

அகங்குளிர வாழ்க மகிழ்ந்து.


நிக்கில் அபிசேக்

மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்


Saturday, September 14, 2024

உளைச்சல் சுனாமி


 

முப்பெரும் விழா

முப்பெரும் விழாக்கள்!


பகுத்தறிவுப் பகலவன் பெரியார் பிறந்தநாள்!

அறிஞர் அண்ணா பிறந்தநாள்!

தி மு க தொடங்கிய நாள்!


15.09.24--16.09.24--17.09.24


தமிழ்நாடு தன்னெழுச்சி காண்பதற்கு

என்றும்

இமைபோல் கடமையை, காலத்தைப் பொன்போல்

கருதி உழைக்கின்ற பாங்கினை இங்கே

பெருமையுடன்  முப்பெரும்  நாளின் விழாவாய்

நடத்துகின்றார் ஆண்டுதோறும் தான்.


மதுரை பாபாராஜ்

 

நான்கு பருவங்கள்


 

நண்பர் பழனி


 நண்பர் திரு.பழனி அவர்களுக்கு வாழ்த்து!


மகிழ்ச்சியான ஞாயிறாய் மாறட்டும் என்றே

அகங்குளிர கோப்பைக் குளம்பி அனுப்பி

அகநட்பைத் தூதுவிடும் நண்பர் பழனி

மகத்தாக வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

துபாயில் பேரன் சுசாந்த்


 துபாய் அடுக்களையில் சுசாந்த்!


வெண்பூண்டு கோழி வறுவலுடன் நானுமிங்கே

கண்கவர நின்றே துபாயில் கடமையாய்

உண்டு களிக்க சமைக்கின்ற பேரனான

அன்பு சுசாந்த்தைத்தான் பார்.


மதுரை பாபாராஜ்

உண்மையான உறவு


 

Friday, September 13, 2024

வசந்தா எழுந்து வா!


 *தங்களின் மன வேதனையை நன்கு அறிய முடிகிறது.காலத்தின் கையில் நாம்.உலகம் என்றால் என்னவென்று தங்களுக்கு தெரியாததா?.மன வேதனை மனிதனுக்கு இடும்பைதான்.என்ன செய்ய.வசந்தம் உண்டாகும் வாழ்வில்.நம்பிக்கை ஒன்றே பலம்.*

நண்பர் கணியன் கிருஷ்ணன்

தென்காசி

Thursday, September 12, 2024

வாழ்வை நகர்த்து



 

Wednesday, September 11, 2024

நண்பர் வெங்கனேஷ் பேரன்களுடன்


 நண்பர் வெங்கடேஷ் பேரன்களுடன் ஆட்டம்!


தலைமேல் ஒருபேரன் மார்பிலொரு பேரன்

விளையாடும் ஆசையில் தாத்தா ஆகா!

களித்திருக்கும் காலத்தைக் காண்..


மதுரை பாபாராஜ்

பேரன் வருணருகில் பூனை



 

பேரன் வருணருகில் பூனை!


பேரன் வருணின் கணினித் திறமையை

ஆர்வமுடன் பார்த்தே அமர்ந்திருக்கும் பூனையார்!

பேரனும் பூனையும் பார்க்கின்ற காட்சியைப்

பார்த்திருந்தேன் வீட்டில் ரசித்து.


மதுரை பாபாராஜ்

தாத்தா

Tuesday, September 10, 2024

நண்பர் நித்யானந்தம்


 

நண்பர் சேதுமாதவன்



 நண்பர் சேதுமாதவன் அனுப்பியதற்குக் கவிதை!


தானியங்கி வண்டியும் மாற்றுத் திறனாளி

தானியக்கும் வண்டி மிதிவண்டி காலாற

சாலையில் மெள்ள நடக்கும் சிறார்களும்

காலைப் பொழுதினை அந்த மருதநிலம்

சாலையோரத் தென்னையுடன் கூறவே அன்புடன்

காலை வணக்கத்தைக் கூறுகின்றார் வாழ்கவே!

காலை விடியலை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

உளைச்சல்


 

எனக்கு மட்டும் ஏனிப்படி?

 

உற்றார் உறவினர் நண்பர்கள் எல்லோரும்

எப்படியோ வாழ்கின்றார்! ஆனாலும் என்வாழ்க்கை

இப்படி ஆனதே? ஏனென்று யார்சொல்வார்?

குற்றத்தை யார்செய்தார் கூறு?

குடும்பத்தைச் சீரழித்தே புன்னகைத்து வாழ்வோர்

நடுத்தெருவில் நின்றிடுவார்!  காலம் உணர்த்தும்!

ஒருதப்பும் செய்யாத என்னைத்தான் நாளும்

துடிதுடிக்க வைப்பதேன் சொல்.?

எங்கோ இருக்கின்றாய் ஏதேதோ பேசுகின்றாய் !

உன்தாய் படுத்த படுக்கையிலே நொந்துபோய்

இங்கே துடிக்கின்றார்! நன்றி உணர்வின்றி

பண்பிழந்தே பேசுகின்றாய் ஏன்?

இங்கிருந்தே உன்கடமை செய்வதற்குச் சொல்கின்றேன்!

சொந்தபந்தம் எல்லாம் உதறிவிட்டே

வாழ்வது

கொஞ்சமும் ஏற்புடைத்த  தல்ல! திருந்தினால்

நல்லது! இன்றிருக்கும் உன்வாழ்க்கை வாழ்க்கையல்ல!

முள்மண்டிக் கிடக்கின்ற காடு.

பேரப் பிள்ளைகள் 

நிக்கில் ஆறாண்டும் 

வருண் பத்தாண்டும் படிக்கவேண்டும். 

மருமகள் சத்யாவுக்கு உடல்நலம் சரியில்லை!

மகள் சுபாவுக்கு உடல்நலம் சரியில்லை!

எனக்குத் தள்ளாட்டம் அதிகமாகிக் கொண்டே வருகிறது!

அம்மா படுத்த படுக்கையில் துடித்துக் கொண்டிருக்கிறாள்!

இதையெல்லாம் தெரிந்தும் தெரியாதது போல இருப்பது தப்பு.

உன்கடமைகளைச் செவ்வனே செய்யவேண்டும் இங்கிருந்து.


இரந்து கேட்கும் அப்பா

மதுரை பாபாராஜ்


நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


இலக்கை அடைய சிறிய முயற்சி
அனைத்துமே தேவை எனினும்
அதைநாம்
சிறப்பாக  மேம்படுத்தி நாளும்  கிடைத்த
முறையான வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும்!
முயற்சியே வெற்றி தரும்.

மதுரை பாபாராஜ்

விலகுதல் தப்பு