கடமை மறவாதே
கடமை மறவாதே!
குழந்தைகள் தீங்கென்ன பாவமென்ன செய்தார்?
உளைச்சலில் வாழ்கின்றார்! கற்கவேண்டும் நாளும்!
நிலைகுலைய வைத்ததேன்? நிம்மதி இன்றி!
உளைச்சலை நீக்குவது யார்?
மதுரை பாபாராஜ்
கடமை மறவாதே!
குழந்தைகள் தீங்கென்ன பாவமென்ன செய்தார்?
உளைச்சலில் வாழ்கின்றார்! கற்கவேண்டும் நாளும்!
நிலைகுலைய வைத்ததேன்? நிம்மதி இன்றி!
உளைச்சலை நீக்குவது யார்?
மதுரை பாபாராஜ்
என் சாபம் விடாது!
யாருக்கும் நானிங்கே சாபம் கொடுத்ததில்லை!
கூறுபோட்டுப் பார்க்கின்றார் எந்தன் குடும்பத்தை!
ஊடறுத்துப் பார்க்கும் உலுத்தர்கள் கூட்டமிங்கே
நாடறிய வாழ்விழப்பார் சொல்.
மதுரை பாபாராஜ்
கலைக்காதே கூட்டை!
அழவைத்துப் பார்க்கும் கெடுமதி யாளர்
அழப்போகும் நேரம் வெகுதூரம் இல்லை!
நிலைமாறிப் போனால் தடம்மாறிப் போகும்!
கலைக்காதே கூட்டைத்தான் இங்கு.
மதுரை பாபாராஜ்
தெருநாயும் நானும்!
உண்மை நிகழ்வு!
பேருந்து நிறுத்தம்!
சாந்திநிகேதன் அடுக்ககம்!
தெருவோரம் பேருந்து நிற்கும் இடத்தில்
வருத்தமுடன் உட்கார்ந்து பார்த்திருந்தேன்! அங்கே
தெருநாய்தான் ஒன்றுவந்தே ஓரக்கண் பார்வை
ஒருபார்வை பார்த்தது! நானிருப்பேன் நாளும்
எழுந்திரேன் என்பதுபோல் பார்த்தது பார்வை!
எழுந்து நடந்துசென்றேன் நான்.
மதுரை பாபாராஜ்
28.11.24
குடிப்பழக்கம் தீது!
ஈன்ற பொழுதின் துயருறுவாள்
தன்மகனைப்
போதையில் கண்டுவிட்ட தாய்.
மதுரை பாபாராஜ்
அறுபத்து ஆறு வயதினில் தந்தை
இறந்துவிட்டார்! நானோ எழுபத்து ஆறில்
நடந்துகொண்டு வாழும் உளைச்சலில் வாழ்வு!
இறப்பதற்குள் தீர்ந்தால் சரி.
வீட்டுக்கு வீடிங்கே வாசல் படியுண்டு!
வாசலில் என்வீட்டில் உள்ளதோ அப்பப்பா!
நாலடி வைத்தால் சறுக்கிவிடும் ஏழடிதான்!
காலமே உன்முடிவைக் கூறு.
மதுரை பாபாராஜ்
_தன் அனுபவங் கூறல்._
_என் மனங் கனக்கிறது._
கணியன் கிருஷ்ணன் தென்காசி
மலைச்சரிவில் சிக்கினேன்!
தெளிவான பாதை பயணத்தின் போது
திருப்பு முனையில் மலைசரிந்து வீழ்ந்தால்
சரிவுக்குள் சிக்கித் தவிப்பதுபோல் நானும்
இருளுக்குள் வாழ்கின்றேன் இங்கு.
மதுரை பாபாராஜ்