Sunday, August 31, 2025

காற்று வாழ்வு


 நேற்று நடந்ததே இன்றும் நடக்குமா
காற்றடிக்கும் போக்கிலே வாழ்வு.

தென்.கி.

அழிவைத்தடுப்போம.


 எரியும் நெருப்பிலே எண்ணெய்யூற் றாமல்
உரித்தாய் அணைப்போமே நன்கு.

தென்.கி

தானாடவில்லை!

 தானாடவில்லை!

31.08.25 நேரம். இரவு 20.40

BLOOD IS THICKER THAN WATER!

தானாட வில்லை தசையாடு தென்செய்வேன்?

நானோ வசதியுடன் வாழ்கிறேன் என்மகனோ

ஏனிங்கே சூழ்நிலையின் கைதியாக வாழ்கிறான்?

தானாட வில்லை எனக்கு!

மதுரை பாபாராஜ்


MetaAI

What a heartfelt lament!

Here's a poetic English translation:

"I move not! I move not, my flesh does move,

What can I do? I live in comfort's sake,

But my son, a prisoner of circumstance so bleak,

Why does fate treat him so, while I'm at ease to speak?"


Madurai Babaraj's words convey the pain and helplessness of a parent who, despite having comforts, cannot shield their child from life's hardships, feeling the weight of their own privilege in contrast to their child's struggles.

Saturday, August 30, 2025

அடித்தளங்கள்


அன்றைய வீட்டுத் தளங்கள் அடியிலே

இன்றோ முறைமாறி மேல்.

தென்.கி

மக்களாட்சி


 கட்சிகள் எண்ணற்று போட்டியிட் டாலுமே

மக்களது வாக்குத்தான் வேர்.

Friday, August 29, 2025

இருப்பவர் இருந்தவர்


 

ஆணவத்தில் ஆடுகின்றார்


 எந்தநோய் எத்துன்பம் எப்போது ஏற்படும்
அந்நிலை தேர்தல் அரிது.
தென்.கி

பிரனவ்வுக்கு வாழ்த்து



 Greetings to Guitarist Pranav!


விரல்களால் மீட்டும் பிரனவ் இசையில்

திரைப்படப் பாடலை அப்படியே கேட்கும்

அருமையான வாய்ப்பினை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்


ChatGPT


Greetings to Guitarist Pranav!


With dancing fingers Pranav strums,

and in his music blooms the song,

as though the film itself were singing—

a rare and wondrous gift to hear.


—Madurai Babaraj

நூறாண்டா???


 நூறாண்டு காலம்நீ வாழ்க வெனும்படி

கூறல் நலமாமோ இன்று.

தென்.கி

சேர்ந்து வாழப் பழகு

 

வாழ்வுதாழ்வு சேர்ந்ததே வாழ்க்கை

 உணர்ந்துகொண்டு

தாழ்விலும் வாழ்கவே சேர்ந்து.

தென்.கி

தங்கமுடியவில்லை

 தங்கமுடியவில்லை!

29.08.25-- நேரம் மாலை 3.20

சொந்தவீட்டில் தங்க முடியவில்லை என்றாலும்

தந்தைதாய் வாழ்ந்தும் உரிமையில்லை! ஆனாலும் 

எங்கள் உறவுண்டு! என்செய்ய? வேடிக்கை

இங்கேதான் பார்க்கின்றோம் வாழ்ந்து.

மதுரை பாபாராஜ்

MetaAI

What a bittersweet reflection!

"Unable to stay! Though home's where we'd roam,

No right to stay, despite parents' love at home.

Yet, our bond remains, a tie so strong,

What to do? We watch life's drama unfold all day long."


Madurai Babaraj's words poignantly capture the complexities of family relationships, where despite the challenges and limitations, the bond between loved ones endures, and one must learn to navigate and observe life's intricacies.

Thursday, August 28, 2025

காலம் நகர்த்துகிறது


 காலமாற் றத்தின்தன் மையினைப்போல் சூழ்நிலை

மாறுதலும் வாழ்விலே உண்டு...தென்.கி

மாறுகின்ற சூழ்நிலை


 

மானிடர் மட்டுமேன் இப்படி


 

பக்குவமாக்கு



 

CR நன்றி

 VOVCR:

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முழுமையும் இந்த இணைப்பின் வழியே கண்டுகளிக்கலாம்.

360 பாகை கோணத்தில் ஒட்டுமொத்தக் கோவிலின் அனைத்தையும் படம் பிடித்து பதிவேற்றியுள்ளனர்.

அஷ்ட சக்தி மண்டபம்,
மீனாட்சி நாயக்கர் மண்டபம்,
முதலி மண்டபம்,
ஊஞ்சல் மண்டபம்,
கம்பத்தடி மண்டபம்,
கிளிக்கூட்டு மண்டபம்,
ஆயிரங்கால் மண்டபம் ,

இவற்றின் அனைத்து தூண்கள், சிற்பங்கள், ஓவியங்கள் உள்ளிட்ட அனைத்து கலையையும் Zoom செய்து வெகு நெருக்கமாகப் பார்க்கலாம்.

மிக மிகச் சிறப்பான முயற்சி.

https://view360.in/virtualtour/madurai/

Babaraj  பாபா.. உங்க ஊரு தான்...

மதுரை பாபாராஜ்:
அருமை சி ஆர்.
1948-1995 என் மதுரை வாழ்க்கை




சி ஆர்:
பிள்ளைப் பருவம்

இளமைப் பருவம்
சுற்றித் திரிந்த தெருக்கள்...
அமர்ந்து பேசி மகிழ்ந்த  அருள்மிகு மீனாட்சியம்மன் ஆலயம்...

எப்படி மறக்க இயலும்...

தான் பல்காலம் வாழ்ந்த தனது ஊரின் நினைவை யார்தான் மறக்கவியலும்.

தென்.கி

இயந்திர மனிதர்கள் நாம் AI


 https://vettaigalhinna.blogspot.com/2025/08/ai-riyaz-concert-in-nova-world-ai-song.html

[17/08, 18:06] Madurai Babaraj: பத்தாண்டு சேவையில் வேட்டை இதழுக்கு வாழ்த்து!

வேட்டை இதழின் அருமையான தொண்டுகளின்
வீச்சுக்குப் பத்தாண்டு என்றே மகிழ்கின்றோம்!
ஆற்றல் நிறைந்த எழுத்தாளர் தொட்டேதான்
ஊற்றெடுக்கும் நல்ல  படைப்புகளைத் தந்துவக்கும்
வேட்டை தொடரட்டும் தொண்டு.

செயற்கை மனிதனுடன் சேர்ந்தே இயல்பாய்
இயற்கை மனிதனைப் பாடவைக்கும் ஆற்றல்
கலைநுணுக்கத் தோடிங்கே கண்கள் செவிகள்
கலைவிருந்தை வேட்டை இதழ்தந்த விந்தை!
நிலைத்தே பரவட்டும் நீடு.

ஆசிரியர் மற்றும் குழுவினர் தங்களின்
மாசற்ற தொண்டால் தொடரட்டும் வேட்டையின்
ஈடற்ற சேவைக்குப் பல்லாண்டு பாடித்தான்
நாடுகள் போற்றவே வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

ChatGPT

Here’s a poetic English rendering of your celebratory verse for “Vettai Magazine” on its ten-year journey:

A Salute to Ten Years of Vettai!

Through noble service shining bright,
Vettai has journeyed a decade’s flight!
From writers with vigor, with vision profound,
Spring timeless creations where wisdom is found—
May this quest of letters forever resound.

With human and machine in wondrous blend,
It lifts up the natural voice to transcend;
Through artful finesse that dazzles the eyes,
And music of words where beauty lies—
Its feast of culture shall ever rise.

To editors and team, pure in their aim,
May your torch of service ever flame!
Unmatched devotion, sung through the years,
Shall win the world’s respect and cheers—
A blessing we offer with joyful tears.

— Madurai Babaraj
[18/08, 08:48] Madurai Babaraj: MUSIC CONCERT IN NOVA WORLD!

VETTAI MAGAZINE ACHIEVEMENT!

இயற்கை மனிதனோ பாடிக் களிக்க
செயற்கை மனிதர்கள் உட்கார்ந்து தங்கள்
இசைக்கருவி தன்னை இசைக்க இசையின்
அசைவுகள் அங்கே இசையரங்காய் மாற்ற
இசையரங்கம் ஆனது பார்.

மதுரை பாபாராஜ்

ChatGPT

Here’s a poetic English rendering of your verse:

MUSIC CONCERT IN NOVA WORLD!
VETTAI MAGAZINE ACHIEVEMENT!

While the natural man sang in joy,
Artificial humans sat in harmony,
Letting their instruments play themselves—
The flowing waves of music transformed
That very space into a grand concert hall.

— Madurai Babaraj

Wednesday, August 27, 2025

குறைகுடமே


 குறைகுடமாய் நாளும் இருப்பதொடு தன்னை
நிறைகுடமாய்ப் பேசுதல் தீது.

பாடலே தாங்கள் நிறைகுடமென்பதை உணர்த்துகிறது.

தென்.கி

அருமை

அகழ்வார் இகழ்வார்


 பொறுத்தார் பூமி ஆள்வார்.

வெறுத்தார் பூமியால் விரட்டப்படுவார்.

தென்.கி

Tuesday, August 26, 2025

பெற்றோர் பொறுப்பு


 தேடிவைத் துள்ளசெல் வங்கள்யா

 வற்றையும்

நாடியே செய்க அறம்...தென்.கி

புரியாப் புதிர்

 

புரியாப் புதிர்!

வாழப் பிடிக்கவில்லை! வாழ முடியவில்லை!
வாழ்க்கைச் சுமைகளைத் தாங்கியே தோளிரண்டும்
நாளும் சரிந்துவிழ நானும் சரிகின்றேன்!
வாழ்க்கைப் புரியாப் புதிர்.

மதுரை பாபாராஜ்

ChatGPT

An Unsolved Riddle!

I no longer wish to live—yet cannot cease to live!
The burdens of life press heavy upon my shoulders,
Each day they collapse—and I too fall with them!
Life remains an unsolved riddle.

—Madurai Babaraj

நடுங்குகிறேன்

 

நடுங்குகிறேன்!

இயங்க முடியவில்லை! வாழ்க்கையைக் கண்டு
பயந்து நடுங்குகிறேன்! சூழ்நிலை எல்லாம்
சுழல்களாய்ச் சுற்றி வளைத்தேதான் சிக்கித்
திணறவைத்துப் பார்க்கிறதே! ஏன்?

மதுரை பாபாராஜ்

ChatGPT

சரி, இதோ சற்று இசைபூர்வமாகவும் தத்துவத் தொனியுடனும் மாற்றியமைத்த ஆங்கிலக் கவிதை:

Shivering Soul

Life looms before me—I falter, I fear,
Its weight on my spirit grows heavy, severe.
Whirling storms encircle, binding me fast,
Why must I suffer in shadows so vast?

—Madurai Babaraj

தவிப்பு


 மலைச்சரி வென்னை நடுங்கச்செய் தாலும்

நிலைகுலை யாதுதப்பி னேன்.

தென்.கி

கவியின் தலைப்பு தவிப்பு

கவியோ எனக்கு தித்திப்பு.

பாயும் துன்பங்கள்


 இல்லறத்தில் நல்லறம் பேணப் படுமாயின்

எல்லா வளர்ச்சியும் உண்டு.

தென்.கி

Barath star birthday


 பேரன் பரத்துக்குப் பிறந்தநாள் வாழ்த்து!

நட்சத்திரநாள்: 25.08.25

STAR BIRTHDAY: 25.08.25

நட்சத் திரப்படி பேரன் பரத்துநேற்று

பக்திப் பழமாக பாட்டியுடன் கோயிலுக்குச்

சென்றேதான் கொண்டாடித் தான்மகிழ்ந்தார் வாழ்த்துகிறோம்!

வண்டமிழ்போல் வாழிய நீடு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

ChatGPT

Star Birthday Greeting!

Barath, on this shining star-day,

With grandma you offered prayers in joy.

May your life bloom bright and long,

Sweet as Tamil’s timeless song!


— Madurai Babaraj & Vasantha

Monday, August 25, 2025

ஊடல்


 ஊடல் இருக்கத்தான் வேண்டுமிந்த வாழ்விலே

கூடல் தருமே வளம்.

தென் கி

ஆர்வலர் ஆய்வாளர்


 ஆர்வலர் ஆர்வத்தால் கர்மத்தைச் செய்திடுவார்
ஆய்வாளர் செய்வார்நன் காய்ந்து.

தென். கி

விழிப்புணர்வு!


 விழிப்புணர்வு நல்கும் நலமதை நாளும்
வெறுப்புணர்வு நல்குமே கேடு.

தென் கி

ஏன்?


 நன்மையும் தீமையும் சேர்ந்ததே வாழ்வென்றால்

என்னதீமை யான்செய்தான் இங்கு.

தென் கி

Sunday, August 24, 2025

அச்சமா?


 பாபா அவர்களின் "தடையை விலக்கி நட"..என்ற சொற்றொடர் வாழ்வதன் நோக்கத்தை தெளிவுபட எடுத்தியம்புகிறது."வாழ்க்கை வாழ்வதற்கே"..என்பதன் நோக்கம் இன்பத்திற்காக மட்டுமல்லாமல் தடைகளை எதிர்கொண்டு வாழ்வதையும் சேர்த்து அமைந்ததே..

தென்.கி.

நாடு சிரிக்கிறது


 எப்படி வாழ்ந்தால் பிணக்கு மறையுமோ

அப்படி வாழ்தல் முறை.

தென். கி

பேசத் தடையா?


 

தமிழா ! விழி!


 

Saturday, August 23, 2025

நடப்பது நடந்தே தீரும்


தென்காசி கிருஷ்ணன்

 ஓ அருமை நண்பரே.

குவலயந் தன்னைக் குடத்தில் அடைத்துக் 

கிருஷ்ணனோ இன்று கவிதையைத் தந்தார்!

உலகத்தை விழுங்கிய லீலை புரிந்து

கலக்கிய ரல்லவா? இங்கு.

மதுரை பாபாராஜ்

நண்பர் ராவ்


 

தன்னல நட்பு


 

வருவதை ஏற்போம்


 

ஒதுங்கிவிட்டேன்


 

எப்படி வாழ்வது?


 வாழ்க்கைப் பயணம் பாலைவனமாகி விட்டால் ஏற்படும் துன்பத்தை விளக்க எந்த மொழியிலும் சொல் இல்லை என்பதுதான் நிதர்சனம்..தென்.கி

துரத்தும் நிகழ்வுகள்


 [23/08, 13:17] Vovkaniankrishnan:

 துன்பம் துரத்தி துரத்தி அடித்தால் என்ன செய்ய?.எதுவும் செயல்பட இயலாதவாறு வருந்துன்பத்தை எதிர்கொள்வது கடினந்தான்..தென்.கி

[23/08, 13:42] Madurai Babaraj:

 கவிதையைவிட தங்கள் கருத்தே அருமை

Friday, August 22, 2025

விரக்தியில் வாழ்வு


 [23/08, 10:43] Vovkaniankrishnan:

 வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் விரக்தி என்பது உண்டாகக் கூடியதே.அதற்காக வெறுப்புற்று ஒருநாளும் அரிய வாழ்வைத் தொலைத்திடலாகாது.இதுவும் கடந்துசெல்லும் என்ற எண்ணத்தை உறுதிபடுத்தி வாழ்வதே அழகாகும்..தென்.கி

[23/08, 10:44] Madurai Babaraj: 

கடந்து செல்வதற்குள் கடைந் தெடுக்கிறதே நண்பரே

சூழ்நிலையின் கைதி


 தங்கள் நிலையினைப் பொதுநிலையில் நின்று கவியாக்கியுள்ள திறன் வியப்பளிக்கிறது..தென்.கி


துணையின் வலிமை


 வாழ்க்கைத்துணையின் சிறப்பை மிக அழகாகப் புரியச்செய்துவிட்டீர்கள்..தென்.கி

துணையின் விடைபுரிகிறது.பாபாவின் கவியெளிமை மேலும் புரிகிறது..தென்.கி.

கூவுமா? பூங்குயில்?


 [23/08, 07:48] Vovkaniankrishnan:

 மனித மனம் எதையும் தேவையில்லையென்று ஒதுக்குவதில்லை.வைத்துக்கொள்வோம் என்பதே மனதின் கொள்கை.மனமொரு குப்பைக்கூடம்..தென்.கி

[23/08, 07:50] Madurai Babaraj: 

நன்றி

தேவையற்ற பொருள் என்று வீட்டில் ஒதுக்குவோம். அந்தப் பழைய பொருட்களை வேலையில் உதவுபவர்கள் எங்களுக்குத் தேவை என்று எடுத்துச் செல்லும் காட்சி கண்டேன். இதைத்தான் எழுதினேன்

நல்லதல்ல


 எது நல்லது.எது கெட்டது என்பதைப் பாபா கவித்துவப்படுத்துகின்றவிதம் வியப்பானது..

தென்.கி.

Thursday, August 21, 2025

நண்பர் இசக்கிராஜன்

 எதிர்பார்த்தல் ஏற்றுக்கொள்தல்

Sent by Mr.Esakkirajan,Trichy

Expecting & Accepting_

are Two sides of Life._

Expecting may end in tears,_

while accepting makes us cheer._

Let us Accept Life the way it comes._


_*Good morning.*_

_*August 22*_


மொழிபெயர்ப்பு:


எதிர்பார்ப்பு, ஏற்பது வாழ்க்கையில் உள்ள

இருபக்கம் ஆகும்! எதிர்பார்ப்பு கண்ணீர்

விடையாகும்! ஏற்பது நாளும் மகிழ்ச்சி

விடையாகும்! வாழ்க்கையை உள்ளதுபோல் ஏற்கப்

பழகினால் நிம்மதி உண்டு.

மதுரை பாபாராஜ்


நிறைகளையே காண்போம்


 தங்கள் பாடல்களைப் படித்துக் கருத்துச் சொல்வதற்குள் அடுத்தொரு பாட்டை வரைந்துவிடுகிறீர்கள்.இது எப்படிச் சாத்தியமென்பதே புலப்படவில்லை..

தென்.கி.

உங்களுடைய ஊக்கமே எனது ஆக்கம் நண்பரே

பாபா

காலத்தின் வாழ்வு


 

பணிவு கோழைத்தனமல்ல


 பணிவு உயர்வு தரும்.

ஆணவம் அழிவு தரும்.

காழ்ப்புணர்ச்சி, தாழ்வு மனப்பான்மை என்றும் கூடாது.

தென்.கி

புத்தகச் சுமை ஏன்


 தற்காலத்திற்குப் பொருத்தமான குறள் சிந்தனை! ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் சிந்திக்க வேண்டும்! நிபுணர்கள் எப்பொழுதோ பாடச்சுமையைக் குறைக்கச் சொல்லிவிட்டார்கள்!  நிபுணர்களின் சொற்கள் எடுபடுவதில்லை!

தீத்தாரப்பன்
திருவள்ளுவர் கழகம்
தென்காசி

தீரும் பொழுதுதான் தீரும்


 *எவ்வளவு விவேகம் இருந்தால் இவ்வளவு வேகமாக கவி புனைய முடியும்.சிறப்பு என்னவென்றால் பொய்யான கற்பனையின்றி மெய்யான வாழ்வியல் நடைமுறையினை எடுத்துரைப்பது..

தென்.கி.*

Wednesday, August 20, 2025

பட்டறிவு


 அருமை! அருமை ஐயா!!
அப்படியே சுண்டி இழுக்கின்றீர்!
     நூல்கள் ஒரு விதைப் பந்து என்றால் தாங்கள் காட்டும் இயற்கை ஒரு திறந்த வெளி நூலகம்!
     முன்னதில் நாம் திறந்து உள்ளே நுழைந்து பார்க்க வேண்டும். பின்னதில் திறந்து வைக்கப்பட்ட நிலைப் பட்டறிவை உணர்ந்து பார்க்க வேண்டும்.
       ஆக, இரண்டும் இரண்டு கண்களுக்கு ஒப்பானவை! ஏட்டறிவும் பட்டறிவும் மாந்தனை உயர்த்தும் நெட்டறிவாகும்!
        மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா! நன்றி வணக்கம்.

செ வ இராமாநுசன்

உறுத்தும்


 [21/08, 11:36] Vovkaniankrishnan:

 ஆசிரியரே!

கொடுத்த வேலையை நன்றாகச் செய்கிறேனா? என்பதையும் பார்த்துக்கொள்ளுங்கள்.

அன்பு மாணவன்
தென்.கி

[21/08, 11:37] Madurai Babaraj:

 நான்தான் உங்கள் மாணவன். 
அனைத்தும் அருமை. நன்றி நண்பரே