Friday, September 30, 2022
Thursday, September 29, 2022
Wednesday, September 28, 2022
Tuesday, September 27, 2022
Monday, September 26, 2022
கடமை மறந்தனர்
கடமை மறந்தனர்!
கூட்டுக்குள் சேய்ப்பறவை! பெற்றோர் பறவைகள்
கூட்டைவிட்டுச் சென்றுவிட்டார்! தாத்தாவும் பாட்டியும்
கூட்டுக்குள் ஆர்வமுடன் பார்ப்பதற்கு வந்துவிட்டார்!
வேற்றுமையை எண்ணிக் கடமை, பொறுப்புகளைக்
காற்றில் பறக்கவிட்டார் காண்.
மதுரை பாபாராஜ்
சீட்டுக் கிளியும் கைபேசியில் விரல்களும்!
சீட்டுக் கிளியும்! கைபேசியில் விரல்களும்!
கூண்டைத் திறந்தே கிளியை வரச்சொன்னார்!
தாண்டியே வந்தது! சீட்டுகளை ஒவ்வொன்றாய்
ஆவலுடன் பார்த்தே எடுத்ததே தேர்ந்து!
தொடர்பெண்ணைத் தேடவே கைபேசி தன்னைத்தான்
ஆவலுடன் பார்த்தேதான் தேடி எடுத்திடுவார்
பாசமுடன் தானறிந்த மாந்தருடன் பேசிடுவார்!
சீட்டுகளைத் தேர்ந்தெடுக்கும் ஜோசியரின் அக்கிளியும்
தேடுகின்ற நண்பரின் எண்வரும் மட்டுமிங்கே
தேடும் விரல்களும் ஒன்று
மதுரை பாபாராஜ்
Saturday, September 24, 2022
தாய்ப்பாசம்
தாய்ப்பாசம்!
கூட்டுக்குள் குஞ்சுப் பறவைகளை விட்டுவிட்டுத்
தாய்ப்பறவை சென்றது! வேகமாக வன்புயல்
காற்றடிக்க தாய்ப்பறவை சேய்களைக் காப்பதற்குக்
கூட்டுக்குள் மீண்டும் திரும்பியதே அன்புடன்!
தாய்ப்பாசம்! ஈடற்ற பண்பு.
மதுரை பாபாராஜ்
Monday, September 19, 2022
தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம் வாழ்க!
தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம் வாழ்க வளர்க!
ஐந்தாண்டு நிறைவு
ஆறாவது ஆண்டு தொடக்கம்!
புலவர் ஐயாவுக்கு வாழ்த்து:
ஒல்காப் புகழ்கொண்ட தொல்காப் பியத்திற்கே
அல்லும் பகலும் அருந்தொண்டு செய்துவரும்
தொல்காப் பியச்செம்மல் காளியப்பன் நற்றமிழ்போல்
பல்லாண்டு வாழ்க மகிழ்ந்து.
மதுரை பாபாராஜ்
Sunday, September 18, 2022
ஜாடியை குலுக்கியது யார்?
நெருப்பிலும் தூங்கலாம்
நெருப்பிலும் துஞ்சலாம்!
அலைச்சல் உளைச்சல் நிலையாகிப் போனால்
மலைப்பிலே தூக்கம் விலகித்தான் ஓடும்!
நெருப்பிலும் துஞ்சலாம்! இத்தகைய வாழ்வில்
ஒருகாலும் தூக்கமில்லை சொல்.
மதுரை பாபாராஜ்
Saturday, September 17, 2022
Wednesday, September 14, 2022
கவிஞர் இமயம் வாழ்க
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் வாழ்த்து!
ஈரோட்டுப் பாதையிலே
ஈர்க்கப் பட்டு
ஈராண்டே ஆண்டாலும்
இருண்ட தமிழ்நிலத்தை
காரிருளைக் கிழித்தெறியும்
கதிரவனாய் வந்துதித்து
இன்னலுற்ற எம்மக்கள்
இன்பமுடன் இருந்திடவே
இருமொழிக் கொள்கையை
இருவிழியாய்த் தந்து
தாய்த்திரு நாட்டிற்கு
தமிழ்நாடு பெயரைச்சூட்டி
சுயமரியாதைத் திருமணத்தை
சட்டப்படி செல்லவைத்து
இன்றைய திராவிடமாடலுக்கு
அன்றே வித்திட்டு
ஆணிவேராய் இருக்கும்
அறிவாசான் அண்ணாவே!
அன்பையும் அறிவையும்
ஆயுதமாய்க் கொண்டு
சொல்லும் திறனாலும்
செயற்கரிய செயலாலும்
அனைவரையும் ஆட்கொண்ட
அறிஞர் அண்ணாவே!
பேராற்றல் கொண்ட
பேரறிஞர் அண்ணாவே!
நின்தடம்பற்றி எந்நாளும்
நிலம்காக்கும் அரணாய்
திராவிடத் தலைமகனாம்
செயலறிஞர் ஸ்டாலின்
வாளும் கேடயமாய்
நாளும் இருப்போமென்று
அண்ணா! நின்புகழ்
போற்றி வணங்குகின்றேன்!
கோ.இமயவரம்பன்
15.09.2022
கவிஞர் இமயம் வாழ்க.
ஒவ்வொரு சொல்லும் உண்மையே! உள்ளத்தில்
உள்ளதை அப்படியே பாவில் வடித்தளித்த
வல்லவர் பாவலர் நண்பர் இமயமே!
தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.
மதுரை பாபாராஜ்
காலமே மாற்றும்
காலமே மாற்றும்!
வாழ்க்கையில் காட்சிப் பிழைகள் தோன்றிடும்
நேரத்தில் உள்ளம் தடுமாறும்! தத்தளிக்கும்!
வேரூன்றி நகைக்கும் நிகழ்வுகள்! நாமிங்கே
சாரம் இழந்துவிட்ட சக்கைபோல் மாறிடுவோம்!
காலமே மாற்றும் உணர்.
மதுரை பாபாராஜ்
புதுமைப் பூ
Rajublr: 👆👆👆👆👆👆👆 Beauty of this flower is...it is WHITE in pre-noon (locate the buds there) and, slowly turns into pink by evening...and, there its end..one-day-life !
@mjr-gala53m5g-220914
வியக்கவைக்கும் மலர்!
நண்பர் ராஜூ அனுப்பிய படத்திற்குக் கவிதை!
முற்பகலில் மொட்டின் நிறம்வெண்மை! மாலையில்
அற்புதமாக கண்கவரும் வண்ணம் இளஞ்சிவப்பு!
முற்றும் புதுமைப்பூ! செப்பு.
மதுரை பாபாராஜ்
Tuesday, September 13, 2022
அற்பமன மாந்தர்
அற்பமன மாந்தர்!
அற்ற குளத்து அறுநீர்ப் பறவைகள்
முற்றும் பறந்துவிடும் நீர்வற்றிப் போய்விட்டால்!
கொட்டியும் ஆம்பலும் நீர்வற்றிப் போயினும்
ஒட்டி உறவாடும் ! சேர்ந்தே உடன்வாடும்!
தட்டுத் தடுமாறும் சூழ்நிலையில் கைநீட்டி
உற்றதுணை யாகவேண்டும்! தட்டிவிட்டுப் போவோர்கள்
அற்பமன மாந்தரெனச் சாடு.
மதுரை பாபாராஜ்
Sunday, September 11, 2022
கவிஞர் ராஜூ பிறந்தநாள்
கவிஞர் நண்பர் ராஜூ பிறந்தநாள்!
அகவைத் திருநாள் வாழ்த்து
நாள் 11.09.22
எழுபத்து மூன்றை நிறைவுசெய்தே இன்று
எழுபத்து நான்கில் அடியெடுத்து வைக்கும்
கெழுதகை நண்பராம் ராஜூ வளமும்
நலமும் நனிசூழ வாழ்வாங்கு வாழ்க!
குடும்பத்தார் நண்பர்கள் வாழ்த்திசைக்க வாழ்க!
வளர்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
[9/11, 11:59] Rajublr:
மொழிக்கு இலக்கணம்..
முத்தமிழுக்கு மகுடம் !
நட்புக்கு இலக்கணம்..
நான்மறையும் பகரும் !
அன்பு நண்பர் பாபாவின்
நட்பு, அன்றும், இன்றும், என்றும்,
ஆல்போல் வளர்ந்(த)து.. ஆண்டுகள், ஐம்பது கடந்தும் !!
இறையருள், தொடர வேண்டும் !!
Saturday, September 10, 2022
கணிப்பு
கணிப்பு!
வெற்றியா? தோல்வியா? என்றே கணிப்பதற்குள்
முற்றிலும் மூச்சிழந்து வாழ்வை முடித்திருப்போம்!
சுற்றிநிற்போர் தங்களுக்குள் பேசிக் கணித்திருப்பார்!
எப்படி வாழ்ந்தவரோ இப்படிப் போய்விட்டார்!
என்றே வியந்திருப்பார் இங்கு.
மதுரை பாபாராஜ்
Friday, September 09, 2022
Thursday, September 08, 2022
Wednesday, September 07, 2022
Tuesday, September 06, 2022
Monday, September 05, 2022
Sunday, September 04, 2022
பாலுவுக்குப் பிறந்தநாள்
மருமகன் மு. பால முரளிக்குப் பிறந்தநாள் வாழ்த்து!
அகவைத்திருநாள் : 05.09.22
மகிழ்ச்சியுடன் வாழ்க! மகத்தாக வாழ்க!
அகங்குளிர வாழ்க! அருந்தமிழ்போல் வாழ்க!
நிறைவுடனே வாழ்க! அறம்மணக்க வாழ்க!
திறம்பட வாழ்கபல் லாண்டு.
மனைவி மகள்கள் மருமகன் சூழ
மனையறம் காத்து மனங்குளிர வாழ்க!
இணையற்ற இல்லறத்தில் இன்பமுடன் வாழ்க!
அனைத்துவளம் பெற்றுவாழ்க நீடு.
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்
Saturday, September 03, 2022
ஒன்றுபோனால் ஒன்று
ஒன்றுபோனால் ஒன்று!
ஒருகவலை தீர்ந்ததே என்றேதான் இங்கே
ஒருவாறாய் ஓய்வெடுத்தேன்! தோள்களைத் தட்டி
மறுகவலை பார்த்துச் சிரித்ததும் நொந்தேன்!
கவலைகள் ஒன்றுபோனால் இன்னொன்று வந்தே
துவளவைத்துப் பார்க்கின்ற வாழ்க்கை -- அவலை
நினைத்தே உரலை இடிக்கும்
நிலையால்
கணப்பொழுது நிம்மதியும் போச்சு.
மதுரை பாபாராஜ்
ETERNAL SLEEP
ETERNAL SLEEP!
OH! MY ETERNAL SLEEP!
WHERE ARE YOU?
WHEN WILL YOU COME?
TELL ME! TELL ME!
COME AND HUG ME SOON!
RELIEVE ME FROM THIS GLOOM!
IF YOU COME IT IS A BOON!
OTHERWISE IT IS A BANE!
PAINS AND SUFFERINGS ARE ENOUGH!
THIS DUSTY LIFE IS ENOUGH!
HAPPINESS IS ALWAYS ELUSIVE!
SORROW IS ALWAYS EXCLUSIVE!
HANDS OF TIME BEAT ME
RUTHLESSLY HERE AND THERE
THRASH ME EVERYWHERE I GO
TAUNT ME WITH UNBEARABLE WORDS !
I AM STAGGERING AND SOBBING
I AM WANDERING IN SEARCH OF PEACE!
PEACE IS MIRAGE INVITING ME YONDER!
WHEN I GO NEAR IT GOES FAR AND FAR!
SO I WANT TO HUG THE ETERNAL SLEEP!
PLEASE COME AND HUG ME SOON!
MADURAI BABARAJ
Friday, September 02, 2022
மதுரை நினைவு
நினைவில் நிற்கும் மதுரை:
1952--1995
சிகையழகு நிபுணர்களும் நிலையங்களும்:
மோதிலால் 2 வது தெரு:
நிபுணர்கள் இராமு மற்றும் லட்சுமணன். தரையில் பலகையில் உட்காரவேண்டும். பிறகு நாற்காலியில் பலகை போட்டு உட்கார்ந்தேன்.
மோதிலால் முக்கியச்சாலை:
நிபுணர் கணபதி, கிருஷ்ணன்.
கணபதி கண்டிப்பானவர். கிருஷ்ணன் அரசியல் அரட்டை அதேசமயம் கடமை உணர்வு.
வடக்குமாசி வீதி சந்திரா திரையரங்கு எதிரில் சிங்கப்பூர் சலூன்:
தந்தையுடன் செல்வேன்.
வீட்டிலே தந்தை,நான்,தம்பி,பாவா,
4 சிறுவர்கள் எனவே சிங்கப்பூர் சலூனில் இருந்து வீட்டுக்கு நிபுணர் வந்து சிகையழகு செய்த காலமுண்டு.
டவுன்ஹால் ரோடு புளூ மவுண்டன் சலூன்:
போனதும் ஒருவர் பணிவுடன் வந்து அழைத்துச் சென்று உட்காரவைப்பார்.
நவீன சலூன் அதுதான்.
குரு திரையரங்கு அருகில் பைபாஸ் ரோடு முத்து சிகையழகு நிலையம் சிலகாலம்.
வெளியிலே பேச்சு இருக்கும் .அங்கே அமர்ந்து நண்பர் ராஜுவுடன் அரசியல் பேசியே பொழுது போகும்.
நட்புடனே பழகியவர் முத்து.
மதுரை பாபாராஜ்