Sunday, June 30, 2024

நண்பர் எழில் புத்தன்



 

நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!

என்ன நடக்குமோ எப்படியோ என்றேதான்
இங்கே கவலைப் படுவதில் ஒன்றுமில்லை!
நன்றாய் நடக்குமென்றே நம்புங்கள் எப்போதும்!
உங்கள் குறிக்கோளே வாழ்வு.

மதுரை பாபாராஜ்

Friday, June 28, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


மகிழ்ச்சியாக வாழ்வதற்கு காரணம் வேண்டாம்!
அகிலத்தில் வாழ்வதே அன்பளிப்பு தானே!
அதுவே மகிழ்ச்சியின் காரணமாம்! மேலும்
அதுவொன்றே ஆசியாகும்! கொண்டாட நல்ல
தகுதியாம் என்றே உணர்.

மதுரை பாபாராஜ்

Dr அஷ்ரப் பிறந்த்தாள்


Dr.அஷ்ரப் பிறந்தநாள் வாழ்த்து

அகவைத் திருநாள்: 28.06.24
 

கோளென்ன செய்யும்?


 

ஆயிரம் தேள்கள்


 

Thursday, June 27, 2024

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில் புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


புன்னகைக்கக் கற்கவேண்டும் நாள்தோறும் எப்போதும்!
உங்களுக்கு மட்டுமல்ல மற்றவர்க்கும் நல்லதே!
புன்னகை என்றும் எதையுமே சாதிக்கும்!
இன்ப மகிழ்ச்சி பரவத் துணைபுரியும்!
புன்னகைத்து வாழப் பழகு.

மதுரை பாபாராஜ்

Wednesday, June 26, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


ஒருவரை இங்கே ஒருவர் மதித்தல்
பெருமைக் குரிய உணர்ச்சிதான்!
அந்தப்
பெருமை வலிமையாம்! கற்பதற்கு வாய்ப்பை
உருவாக்கும்! நன்கு செயலாற்றல் கூடும்!
பெருகும் குழுவுணர்வால் உள்ளத்தில் இன்பம்!
பெருக்கெடுத் தோடும் மகிழ்வு.

மதுரை பாபாராஜ்

Tuesday, June 25, 2024

ஓவியர் திருமதி திலமங்கை துரைசாமி


 ஓவியர் திருமதி நிலமங்கை துரைசாமி அவர்களுக்கு நன்றி!

இந்திய நாட்டுப் பறவைதான் தோகைமயில்!

கண்கவர ஓவியமாய்த் தீட்டி அனுப்பிய

நட்பினை நன்றியுடன் வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

இன்றைய வாழ்நிலை


 

உறவு


 

Monday, June 24, 2024

நண்பர் அன்வர் பாட்சா


 நண்பர் முனைவர் அன்வர் பாட்சா அவர்களுக்குக் குவைத்நாட்டில் விருதளித்தார்!


குறள்தூதர் அன்வர் குவைத்நாட்டில் அன்னார்
இலக்கியத் தொண்டை வாழ்த்தி விருதை
அகங்குளிரத் தந்திட்டார் வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

திருமதி நிலமங்கை துரைசாமி


 

இதயவேந்தன்


 VOV Stalin Ramakrishnan

அருமை ஐயா. 👍. 

கவிதையின் தலைப்பு இதய வேந்தன் . 

கலைஞரும் நம் இதயத்தில் வேந்தனாகவே வீற்று இருக்கிறார்.  கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா முடிந்த நிலையில், 44 ஆண்டுகளுக்கு முன்பு , கலைஞரை கொண்டாடி நீங்கள் எழுதியக் கவிதையை, அதுவும் முரசொலி இதழில் வெளிவந்த கவிதையை படிக்கும் போது மனம் மகிழ்கிறது. 

காலம் எனும் பெட்டகத்தில் , அழியாத கருவூலமாய் உங்கள் கவிதை என்றென்றும் நிலைத்திருக்கும். 🙏


24.06.24

அருமை ஐயா!

     தங்களின் தமிழ்த் தொண்டு அளவற்றது.

     பெருமைக்குரியீர்! வாழி நீவிர் பல்லாண்டு நல் வளத்துடன்!

VOV இராமாநுஜன்

24.06.24

நண்பர் எழில்புத்தன்



 பொறுமை! சிறந்த செயலின் திறவுகோலாம்!

தற்காலந் தன்னிலே தக்கவைக்க
ஊக்கமூட்டும்!
நல்ல அணுகுமுறை மற்றும் வியத்தகு
நல்லதீர்ப்பை நீங்கள் எடுக்கத் துணைபுரியும்!
உங்கள் இலக்கே குறி.

Sunday, June 23, 2024

எதையெண்ணி நோவேன்?

 எதையெண்ணி நோவேன்?

மனைவியின் நோயெண்ணி நோவதா? இல்லை

மகனின் செயலெண்ணி நோவதா? இல்லை

மகன்குடும்ப  வேதனைக்கு நோவதா? இல்லை

மகன்வழிப் பேரன்கள் கல்வியெண்ணி எண்ணி

அலறவா? என்செய்வேன்? சொல்.

மதுரை பாபாராஜ்

எப்படித்தான் சொல்வது?

 எப்படித்தான் சொல்வது?


இப்படிச் சொன்னாலோ அப்படி என்கின்றார்!

அப்படிச் சொன்னாலோ இப்படி என்கின்றார்!

எப்படிச் சொன்னாலும் எப்படியோ என்கின்றார்!

எப்படித்தான் சொல்வது? சொல்.


மதுரை பாபாராஜ்

தள்ளாடும் வாழ்வு

 தள்ளாடும் வாழ்வு!


ஒருநாள் ஒருயுகமாய்ப் போகிறதே! என்னை

உருக்குலைத்துப் பார்க்கிறதே! என்செய்வேன்? நான்தான்!

பெரும்பாறைக் கல்லோ தலைமீது வைத்தார்

சுமப்பதற்குத் தள்ளாடும் வாழ்வு.


மதுரை பாபாராஜ்


Saturday, June 22, 2024

மருமகன் ரவி


 மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


அவரவர்க் குள்ள மனநிலை கொள்ள

அனுமதிக்க வேண்டும்! பிறரின் நிலைகள்

அணுவளவும் உங்களைப் பாதிக்க என்றும்

அனுமதித்தல் தப்பு! உணர்.


மதுரை பாபாராஜ்

மதுவிலக்கா! வாக்களிப்போம்!


 

Friday, June 21, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


நல்லநல்ல எண்ணங்கள் உள்ளத்தில் ஊறிவரும்!
அத்தகைய எண்ணத்தை நாமோ செயல்படுத்த
எத்தனிக்க வேண்டுமிங்கே! இவ்வாறு எண்ணங்கள்
இப்படித் தோன்றாது மீண்டும்! அதைவிட்டால்
இப்படி விட்டுவிட்டோம் என்று வருந்துகின்ற
வண்ணம் வருந்துவோம் பின்பு.

மதுரை பாபாராஜ்

தீ


 

Thursday, June 20, 2024

கடமை மறக்கவில்லை


தங்களது யதார்த்த கவிதை எப்போதும் என்னுள்ளத்தைச் செதுக்கும்.

தென்காசி கணியன் கிருஷ்ணன்

Outcome of your current feelings. The situation will change. We will continue to discharge our responsibilities.

N.Ponrajan

 பெற்றோர் கடமை மறக்கவில்லை!


இயன்றதைச் செய்தோம் இயலாத ஒன்றை

முயன்றேதான் செய்தோம்! விளைவுகளை ஏற்றோம்!

களத்திலே வாழ்த்தும் வசைச்சொல்லும் கேட்டோம்!

உளைச்சலையும் தாங்குகிறோம் இன்று.


மதுரை பாபாராஜ்

வசந்தா


சாதனை நாயகன் ஸ்டாலின்


வேட்டை இதழில் வெளிவந்த பாடல் 

ஆசிரியர் நண்பர் திரு காலிட் அவர்களுக்கு நன்றி!

சாதனை நாயகன் ஸ்டாலின்!


கலைஞரின் மகனாம் ஸ்டாலின்

கருணை நிறைந்தவர் ஸ்டாலின்

தந்தை பெரியார் அண்ணா

கலைஞரின் வழியில் நடப்பார்!

சாதனை நாயகன் ஸ்டாலின்

சரித்திர நாயகன் ஸ்டாலின்

எங்கள் முதல்வர் ஸ்டாலின்

புன்னகை மன்னர் ஸ்டாலின்

உழைப்பின் உருவம்  ஸ்டாலின்

களைப்பே அறியா ஸ்டாலின்

திராவிட மாடல் ஸ்டாலின்

திசைகள் புகழும் ஸ்டாலின்

காலை உணவுத் திட்டம்

மாணவர்க் களித்த ஸ்டாலின்

விடியல்  பேருந்துப் பயணம்

மகளிர்க் களித்த ஸ்டாலின்

மகளிர் உரிமைத் தொகையைத்

தந்தவர் எங்கள் ஸ்டாலின்

புதுமைப் பெண்ணின் திட்டம்

புரட்சித் திட்டம் ஆகும்

இல்லந் தேடிக் கல்வி

இடைநிற் றலையே தடுக்கும்!

மக்களைத் தேடி மருத்துவம்

நோய்நொடி தன்னைத் தீர்க்கும்

ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீடு

தொகையை உயர்த்தினார் ஸ்டாலின்

முதல்வரின் முகவரி திட்டம்

மக்கள் குறைகளைப் போக்கும்

மக்க ளுடனே முதல்வர்

அருமை யான திட்டம்

நான்

முதல்வன் என்ற திட்டம்

மாணவ மாணவி யர்க்கு

கல்வியில் ஆற்றலைக் காட்டும் 

வெற்றிக் கொடியை நாட்டும்!

நாடாளு மன்றத் தேர்தலில்

நாற்பது இடங்களை வென்றார்!

ஆதிக்கக் குவியலை அகற்றுவார்

அடிமைப் பள்ளத்தை நிரப்புவார்!

கோடானு கோடி மக்கள்

வாழ்த்தி மகிழும் ஸ்டாலின்!

சாதனை நாயகன் ஸ்டாலின்

சரித்திர நாயகன் ஸ்டாலின்

இந்திய நாட்டின் மாநிலம்

அன்பைப் பொழியும் ஸ்டாலின்

உலகமே திரும்பிப் பார்க்கும்

ஆட்சியைத் தருபவர் ஸ்டாலின்!

வாழ்க வாழ்க வாழ்க

தமிழ்போல் வாழ்க ஸ்டாலின்!

மதுரை பாபாராஜ்









நவில்தொறும் நூல்நயம் 21.06.24


 நவில்தொறும் நூல்நயம் நிகழ்வுக்கு வாழ்த்துகள்!


நவில்தொறும் நூல்நயம் என்னும் நிகழ்வில்
மலர்க்கொடி ராஜேந்ரன் இங்கே படைத்த
நிழலினைக் காட்டும்  நிஜங்களென்ற நூலை
நயவுரை மூலம் அணுகி வழங்கும்
இளங்கோவன் ஐயாவை வாழ்த்துகிறேன் இன்று!
வளர்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


சூழ்நிலைகள் எப்படி வந்தாலும் உங்களது
வாழ்க்கையில் நற்பண்பை என்றும் தொடருங்கள்!
நாளும் எதிர்பார்த்த தைவிடவும் ஈட்டலாம்!
நீங்கள் அதைக்கைவிட் டாலோ மறைந்துவிடும்!
போற்றுங்கள் நற்பண்பை இங்கு.

மதுரை பாபாராஜ்

குறளும் கவிதையும்

 குறளும் கவிதையும்!


நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்

உயிர்க்கிறுதி ஆகி விடும்.

(குறள் 476)


கவிதை!

ஆணவத்தின் உச்சியிலே நின்றேதான்  மார்தட்டும்

ஈனமனப் பித்தரும், நிற்கும் மரக்கிளையில்

ஆனமட்டும் உச்சிக்குச் சென்று விழுவோரும்

ஊனமனங் கொண்டோர்தான் சாற்று.

மதுரை பாபாராஜ்


Wednesday, June 19, 2024

ஊடக அணுகுமுறை மாறவேண்டும்!


 

Sunday, June 16, 2024

பேரன் ஆதித்யா அம்மா அனுப்பியதற்குக் கவிதை


 பேரன் ஆதித்யா அம்மா அனுப்பிய படத்திற்குக் கவிதை!


ஏழை நடக்கின்றார் இங்குணவைத் தேடித்தான்!

ஏழ்மை அறியாத செல்வந்தர் தானுண்ட

நால்வகை நல்ல உணவு செரிப்பதற்கு

கால்வலிக்க நாளும் நடக்கின்றார் ஆர்வமுடன்!

வாழ்வின் முரண்களைப் பார்.


மதுரை பாபாராஜ்

திரு& திரும்மி சசிதரன்& அரி


 திரு &திருமதி சசிதரன்&

மகன் அரியின் அன்பிற்கு வாழ்த்து!

வள்ளுவரும் ஐந்துமுகப் பிள்ளையார் பொற்சிலைகள்!

அள்ளிவந்தே தந்தார் சசியிணையர் மைந்தனுடன்!

நல்லவர்கள் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

Saturday, June 15, 2024

தோட்டத்தில் பத்மா


 தோட்டத்தில் திருமதி பத்மா பிரபாகரன்


தோட்டத்தில் பத்மா அமர்ந்தேதான் சிந்திக்கும்

காட்சியைக் காண்போம் ரசித்து.

மதுரை பாபாராஜ்

பாட்டியும் பேத்தியும்!


 பாட்டியும் பேத்தியும்!


பேத்தி குடைக்குள் இருக்கும் அழகுபார்த்தே

பாட்டி ரசிக்கின்றார் பார்.


மதுரை பாபாராஜ்

Friday, June 14, 2024

வேட்டை 10 ஆண்டுகள்


கன்னத்தில் முத்தமிட்டாள் குறும்படப் பாடல் அருமை. பாடலாசிரியருக்கும் பாடியவர்களுக்கும் நடித்தவர்களுக்கும் வாழ்த்துகள். பாடல் பரவசம்! நடிப்பு அருமை! பாடகரின் குரலின் ஏற்றத் தாழ்வுகள் அற்புதம்! பல நாடுகளின் கூட்டுறவுப் பறவைகளால் ஆன கன்னத்தில் முத்தமிட்டாள் குறும்படத்திற்கு வாழ்த்துகள். கண்கவரும் பின்னணிக் காட்சிகள் வியக்க வைக்கின்றன.

மதுரை பாபாராஜ்

 வேட்டை இதழ் வாழ்க!

ஆசிரியர் திரு காலிட்!

ஆகத்து 27 ஆம் நாள் 10 ஆம் ஆண்டு!


ஆண்டுகள் பத்தில் நடைபோடும் நற்றமிழ்

வேட்டை இதழை இதயத்தால் வாழ்த்துகிறேன்!

பன்நாட்டில் வாழும் படைப்பாளி ஆற்றலை

நன்முறையில் இங்கே வெளிக்கொணரும்  வாய்ப்புகளைத்

தந்தேதான் ஊக்குவிக்கும் அன்பினை வாழ்த்துகிறேன்!

வண்டமிழ்த் தொண்டினை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்



தென்காசி நண்பர் கிருஷ்ணன்


 தென்காசி நண்பர் கிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்து!


எண்ணத்தைப் பாக்களாக்கி நாங்கள் அனுப்புவோம்!

தென்காசி நண்பர் கிருஷ்ணன் அதைவைத்துக்

கண்கவர வண்ண மயமாக்கித் தந்திடுவார்!

வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

தங்களைப் போன்ற கவிஞர்கள் உள்ளத்தில் வீற்றிருப்பதைப் பெரும்பேறாகக் கருதுபவன் நான்..தென்.கி.

Wednesday, June 12, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


இப்போது என்ன முடியுமோ செய்யுங்கள்!
முற்றும் முடியாது என்று நினைத்ததைச்
சற்றே தொடங்குங்கள்! வெற்றி முரசொலிக்கும்!
ஏனென்றால்  அந்த நிலைமாறிக் கைகூடும்!
வானளவு ஆற்றலோ உங்களிடம் உள்ளது!
சாதித்தே காட்டலாம் இங்கு

மதுரை பாபாராஜ்

Tuesday, June 11, 2024

மருமகன் மு. ராஜ்குமார்


மருமகன் மு.ராஜ்குமாருக்கு வாழ்த்து:


 டிஜிட்டல் யுகத்துடைய குற்ற உணர்வைக்

கவிதையாய் மாற்றியதை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

Monday, June 10, 2024

கணவனின் மாசற்ற அன்பு


 கட்டிய இல்லாள் படுத்த படுக்கையாய்க்

கட்டிலிலே ஒட்டி உறவாடும் சூழலிலும்

அட்டியின்றி சேவை புரியும் கணவனே

இப்புவியில் தெய்வமென வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

Sunday, June 09, 2024

யாம் துஞ்சலமே ஆசிரியர் கதிரவன்



 யாம் துஞ்சலமே!

ஆசிரியர் இரா.கதிரவன் அவர்களுக்கு வாழ்த்து!

நாட்டு நடப்புகளை சங்க இலக்கியக்

காட்சிகளைக் கூட்டணி  யாக்கி கதிரவன்

ஆட்சிசெய்த பாங்கிற்கு வாழ்த்துகள்! பாராட்டு!

போற்றிப் புகழ்வோம் திளைத்து.


தினமணியின் ஊக்கத்தில் ஆழமான எண்ணம்

மணக்கின்ற கட்டுரைகள் சான்றுக ளோடு

இணைக்கும் அணுகுமுறை நன்றெனக் கூறு!

படைப்புகள் வெற்றிபெற வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

அனுபவம்


 

இன்றைய எனது நிலை

 இன்றைய எனது நிலை!


என்ன சொல்லி என்ன செய்ய

திசையெல்லாம் கோப தாபம்


இதைச் சொல்லி அழுவேனா

அதைச் சொல்லி அழுவேனா


எதைச் சொல்லி யாரிடத்தில் அழுவதோ

சிதைந்துவிட்ட கோலத்தைச் சொல்லவோ


சீரழிந்த கோலத்தைச் சொல்லவோ

நோய் நொடியின் பாதிப்பைச் சொல்லவோ


வேரிழக்கும் வாழ்க்கையைச் சொல்லவோ

ஏளனமாய் வாழ்வதைச் சொல்லவோ


தலைகுனிந்து நிற்பதைச் சொல்லவோ

நிலை குலைந்து போனதைச் சொல்லவோ


இதைச் சொல்லி அழுவேனா

அதைச் சொல்லி அழுவேனா


புதைமணலில் சிக்கியதைச் சொல்லவோ

சுனாமியில் சிக்கியதைச் சொல்லவோ


எரிமலைக்குள் நிற்பதைச் சொல்லவோ

வெள்ளத்தின் பந்தாட்டம் சொல்லவோ


எதைச் சொல்லி யாரிடத்தில் அழுவதோ

விரக்தியின் அழுத்தத்தைச் சொல்லவோ


மதுரை பாபாராஜ்

24.05.24


புண்பட்டுப் போவார்!

 புண்பட்டுப் போவார்!


முன்பின் தெரியாது! பாதகம் செய்யவில்லை!

எந்தன் குடும்பத்தைச் சீரழித்துப் பார்க்கின்றார்!

புண்பட வைக்கின்றார்? என்னைத்தான் சீண்டுகின்றார்!

புண்பட்டுப் போவார் துடித்து.


மதுரை பாபாராஜ்

இலக்கே குறி


 

Friday, June 07, 2024

விட்டுக் கொடுங்கள்


 

Wednesday, June 05, 2024

மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து


 இந்தியா கூட்டணி அமைத்த மாண்புமிகு மு க ஸ்டாலின் தலைமைக்கு வாழ்த்து!


05.06.24


இனியவை நாற்பதைத்  தேர்தலில் வெற்றிக்

கனியாகத் தந்தேதான் இந்திய மண்ணில்

அணிசெய்த சாதனை மைந்தனே ஸ்டாலின்!

பணிச்செயல் சாதனையை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்


Tuesday, June 04, 2024

நண்பர் சேது மாதவன்


 நண்பர் சேதுமாதவன் அனுப்பியதற்குக் கவிதை!


வெண்ணிலவைப் பார்த்தே குளத்திலே அல்லிமலர்

புன்னகைக்கக் கண்டேன் ரசித்து.


மதுரை பாபாராஜ்

Monday, June 03, 2024

என்பாக்கள்